விழுப்புரத்தில் 2 ஆண்டுகளில் திருடுபோன செல்போன்கள் கண்டுபிடிப்பு - உரிமையாளர்கள் மகிழ்ச்சி
விழுப்புரம் : கடந்த 2 ஆண்டுகளில் திருடு போன செல்போன்கள் கண்டுபிடித்து உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு
விழுப்புரம் : விழுப்புரத்தில் செல்போன்களை தொலைத்தவர்களிடமிருந்து பெறப்பட்ட புகாரை தொடர்ந்து 20 லட்சம் மதிப்பிலான 122 செல்போன்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசாய் சாய் இன்று ஒப்படைத்தார்.
விழுப்புரம் மாவட்டத்தில் அதிக அளவிலான சென்போன்கள் திருட்டு வழக்குகள் காவல் நிலையத்தில் குவிந்தன, விழுப்புரம் தாலுகா காவல் நிலையம், விக்கிரவாண்டி , வளவனூர், கானை உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரை 150 க்கும் மேற்பட்டோர் செல்போன்களை தவறவிட்டது, செல்போன் வழிப்பறி செய்யப்பட்டது குறித்து காவல் நிலையங்களில் புகார் அளித்தனர்.
விழுப்புரம் : கடந்த 2 ஆண்டுகளில் திருடு போன செல்போன்கள் கண்டுபிடித்து உரிமையாளர்களிடம் ஒப்படைப்புhttps://t.co/wupaoCzH82 | #villupuram #TamilNadu pic.twitter.com/F32aVgfSLB
— ABP Nadu (@abpnadu) June 20, 2023
அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து செல்போன் ஐ.எம்.இ எண்கள் மூலம் செல்போனை மீட்கும் பணியில் விழுப்புரம் குற்றப்பிரிவு போலீசார் ஈடுபட்டனர். அதில் 20 லட்சம் மதிப்பிலான 122 நபர்களின் செல்போனை போலீசார் மீட்டனர். இதனையடுத்து மீட்கப்பட்ட செல்போன்களை விழுப்புரம் எஸ் பி சசாங் சாய் இன்று உரியர்வர்களிடம் ஒப்படைத்தார். மேலும் தொலைத்த செல்போனை மீட்பதற்கு உறுதுணையாகவும் சிறப்பாக பணியாற்றிய குற்றப்பிரிவு போலீசாரை எஸ் பி சசாங் சாய் வெகுவாக பாராட்டினார்.
Join Us on Telegram: https://t.me/abpnaduofficial
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்