மேலும் அறிய

தாயை கைவிட்ட பிள்ளைகள்... கழிவறையில் தங்கும் அவலம்... உதவிக்கரம் நீட்டுமா அரசு ?

விக்கிரவாண்டி அருகே மகன், மகள்கள் விட்டு சென்ற நிலையில் வீடு இல்லாமல் அரசு கட்டிகொடுத்த கழிவறையில் வசிக்கும் மூதாட்டி.

விழுப்புரம்: விக்கிரவாண்டி அருகே மகன், மகள்கள் விட்டு சென்ற நிலையில் மூதாட்டி ஒருவர் வீடு இல்லாமல் அரசு கட்டிக்கொடுத்த கழிவறையில் வசித்து வருவது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே கணவர் உயிரிழந்த நிலையில் மகன், மகள்கள் விட்டுச் சென்றதால் ஒரு வருடமாக அரசு கட்டிகொடுத்த கழிவறையில் வசித்து வரும் 70 வயது மூதாட்டியின் நிலைமை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விக்கிரவாண்டி அடுத்த வெட்டுக்காடு கிராமத்தைச் சேர்ந்த மூதாட்டி மாரிமுத்து(70), இவருக்கு ஒரு மகன் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். மூவருக்கும் திருமணம் நடைபெற்று அவர்களது மாமியார் வீட்டோடவே சென்றுவிட்டனர். மாரிமுத்துவின் கணவர் ராஜாராம் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு உயிரிழந்துள்ளார். அப்போதிலிருந்து மாரிமுத்துவின் மகன் மற்றும் 2 மகள்கள் எவரும் மூதாட்டி மாரிமுத்துவை கண்டுகொள்ளாமல் தனியாக விட்டு சென்றுள்ளனர்.

தொடர்ந்து வெட்டுகாடு கிராமத்தில் உள்ள சொந்த குடிசை வீட்டில் தனியாக மூதாட்டி மாரிமுத்து கூலி வேலைகளுக்கு சென்று வாழ்ந்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த ஆண்டு பெய்த கனமழையால் மூதாட்டி மாரிமுத்துவின் குடிசை வீடு சேதமடைந்துள்ளது. இதுகுறித்து அக்கிராம விஏஓவிடம் கேட்டதற்கு பட்டா இல்லாததால் அரசு உதவி செய்ய முடியாது என்று கூறியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து மூதாட்டியிடம் இருந்த கொஞ்சம் பணத்தால் பிளாஸ்டிக் கவரால் கூறை வீட்டை பராமரித்துள்ளார். அதுவும் கடந்த ஆண்டு அடித்த பலத்த காற்று மழையில் சேதமடைந்துள்ளது. இதனால் செய்வதறியாத மூதாட்டி அப்பகுதியில் உள்ள கோயில், மற்றும் பொது இடங்களில் படுத்து உறங்கி வந்துள்ளார்.

தொடர்ந்து அவரது வீட்டில் அரசு கட்டிகொடுத்த சிறு கழிவறையில் அவரது துணிமணிகள், ரேஷன் பொருட்கள், பாத்திரங்களை வைத்துகொண்டு கடந்த ஒரு வருடமாக கழிவறையிலே உட்கார்ந்தபடி படுத்து உறங்கி வாழ்ந்து வருவதாக கூறினார். மேலும் வரும் நாட்கள் மழைக்காலம் என்பதனால் வெளியில் தங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது எனவே தமிழ்நாடு அரசு வீடு கட்டித் தருமாறு கோரிக்கை வைத்துள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு  சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?

நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்

Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன்,  வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்

Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!

ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு  சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன்,  வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன், வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Popcorn GST: ஏற்கனவே அநியாய விலை! பாப் கார்னுக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி.யா? புலம்பும் ரசிகர்கள்

Breaking News LIVE:பா.ஜ.க.வுக்கும், சமூகநீதிக்கும் என்ன சம்பந்தம்? சீமான் கேள்வி

DMK Meeting: விஜயை சமாளிப்பது எப்படி? உள்ளாட்சி தேர்தல் - இன்று கூடுகிறது திமுக செயற்குழு கூட்டம், ஸ்டாலின் உத்தரவு என்ன?

Pushpa 2 Collection: அடங்காத வசூல்! அரண்டு போன பாலிவுட்! கோடிகளை குவிக்கும் புஷ்பா 2!

Embed widget