பட்டாசு குடோனில் தீ விபத்து... மூன்று பேர் படுகாயம்... மரக்காணத்தில் பரபரப்பு
அப்பகுதியில் உள்ள பட்டாசு குடோன்களில் காவல் ஆய்வாளர் மற்றும் வருவாய்த் துறையினர் ஆய்வு மேற்கொள்வதில்லை என குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.
![பட்டாசு குடோனில் தீ விபத்து... மூன்று பேர் படுகாயம்... மரக்காணத்தில் பரபரப்பு Villupuram news firecracker factory exploded in the village of Kili puthupattu near Marakkanam - TNN பட்டாசு குடோனில் தீ விபத்து... மூன்று பேர் படுகாயம்... மரக்காணத்தில் பரபரப்பு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/09/84518644b325d49dbbcff0974fd8cf3e1715244139458739_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
விழுப்புரம்: மரக்காணம் அருகே பட்டாசு குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் பேர் படுகாயம் அடைந்தனர்.
பட்டாசு குடோன் வெடி விபத்து
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் அமைந்துள்ள கீழ்புத்துப்பட்டு கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஐயனாரப்பன் கோவில் பின்புறம் அதே கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் பட்டாசு தயாரிக்கும் தொழிலை நடத்தி வருகிறார். இந்நிலையில் இன்று காலை வழக்கம்போல் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். ஒரு மணி அளவில் எதிர்பாராத விதமாக தீ பற்றி பட்டாசு குடோனில் இருந்த பட்டாசுகள் வெடிக்க தொடங்கின.
தீயணைப்பு பணி தீவிரம்
இதில் சிக்கிக்கொண்ட பட்டாசு குடோன் உரிமையாளர் ராஜேந்திரன் அங்கு பணிபுரிந்த கௌரி மற்றும் ஆண்டாள் ஆகியோர் சிக்கிக்கொண்டனர். அவர்கள் அலறிய சத்தத்தை கேட்டு அருகில் இருந்தவர்கள் அங்கு சென்று பார்த்தபோது ராஜேந்திரன் மற்றும் கௌரி ஆகிய வரை மீட்டு புதுச்சேரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இதுகுறித்து மரக்காணம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்ததன் பேரில் மரக்காணம் போலீசார் தீயணைப்பு துறை தகவல் தெரிவிக்கப்பட்டு மரக்காணம் தீயணைப்பு துறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் கட்டுக்கடங்காமல் குடோனில் இருந்த பட்டாசுகள் வெடித்து சிதறும் காட்சி வெளியாகி உள்ளது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. குறிப்பாக அப்பகுதியில் உள்ள பட்டாசு குடோன்களில் காவல் ஆய்வாளர் மற்றும் வருவாய்த் துறையினர் ஆய்வு மேற்கொள்வதில்லை என குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)