மாற்றுத்திறனாளிகள் வாழ்வில் ஒளி ஏற்றிய ஆட்சியர்! முக்கிய அறிவிப்புகள் & நலத்திட்ட உதவிகள்!
முதல்வர் அவர்கள் சட்டமன்றத்தில், ஒரு கால் பாதிக்கப்பட்டு பணிக்கு செல்கின்ற மற்றும் சுயதொழில் செய்கின்ற மாற்றுத்திறனாளிகளுக்கும் பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்க நிபந்தனையை தளர்த்தி உத்தரவு வழங்கியுள்ளார்.

விழுப்புரம் : விழுப்புரம் அரசு சட்டக்கல்லூரி கூட்டரங்கில், மாவட்ட மாற்றுத்திறனாளிக்ள நலத்துறை சார்பில், உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா 2025 மாவட்ட ஆட்சித்தலைவர் ஷேக் அப்துல் ரஹ்மான் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
விழுப்புரம் அரசு சட்டக்கல்லூரி கூட்டரங்கில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று நடைபெற்றது.
மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவிக்கையில்,
ஒவ்வொரு ஆண்டும் உலக மாற்றுத்திறனாளிகள் தினம் டிசம்பர் 3-அன்று அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. அனடிப்படையில், இன்றைய தினம், விழுப்புரம் மாவட்டத்தில், விழுப்புரம் அரசு சட்டக்கல்லூரி கூட்டரங்கில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், மாற்றுத்திறனாளிகள் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மற்ற துறைகளை காட்டிலும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறார்கள்.
மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு திட்டங்களை அறிவித்து அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார். அந்த வகையில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம், இணைப்புச்சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், மின்கலனால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலி, நவீன கைப்பேசி, மூன்று சக்கர சைக்கிள், மடக்கு சக்கர நாற்காலி, ஊன்று கோல்கள், முடநீக்கு சாதனம், செயற்கை கால் மற்றும் செயற்கை கை, நவீன செயற்கை கால் போன்ற உபகரணங்கள் வழங்கப்படுகிறது. பார்வையற்றோருக்கு பிரெய்லி கை கடிகாரம், கருப்பு கண்ணாடி மற்றும் மடக்கு ஊன்றுகோல், காதுகேட்கும் கருவி வழங்கப்படுகிறது.
இரண்டு கால்கள் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சட்டமன்றத்தில், ஒரு கால் பாதிக்கப்பட்டு பணிக்கு செல்கின்ற மற்றும் சுயதொழில் செய்கின்ற மாற்றுத்திறனாளிகளுக்கும் பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்க நிபந்தனையை தளர்த்தி உத்தரவு வழங்கியுள்ளார்.
மாற்றுத்திறனாளிகள் இந்த சமுதாயத்தில் முழுமையாக பொறுப்பு எடுத்துக்கொள்ளும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு செய்து வருகிறது. அந்த வகையில் ஆரம்ப நிலை பயிற்சி மையங்கள், மறுவாழ்வு இல்லங்கள், சிறப்பு கல்வி, கல்வி உதவித்தொகை, மின்னணு உபகரணங்கள், சுயவேலைவாய்ப்பு திட்டங்கள், சிறப்பு உதவி உபகரணங்கள், சமூக பாதுகாப்பு திட்டங்கள், நலவாரிய நிதியுதவி திட்டங்கள் போன்றவற்றை தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலமாகவும், பிற அரசு துறைகளின் வாயிலாகவும் பல்வேறு அரசு திட்டங்களை செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதேபோல் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் முயற்சியால் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம் வழங்கிடும் பொருட்டு நியமன பதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், பயிலும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் கல்வி மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்ட கல்வி உதவித்தொகையை இரண்டு மடங்காக உயர்த்தி வழங்கியுள்ளார். அதன்படி ரூ.1000 முதல் ரூ.7,000 வரை உதவித்தொகை பெற்று வந்த மாற்றுத்திறனாளி மாணவர்கள் தற்போது ரூ.2,000 முதல் ரூ.14,000 வரை கல்வி உதவித்தொகை பெற்று வருகின்றனர்.
மேலும், இந்நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக மருத்துவ சேவை புரிந்த மருத்துவர்கள், மாற்றுத்திறனாளி பணியாளர்கள், மாவட்ட அளவில் நடைபெற்ற ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற மாற்றுத்திறனாளிகள், தொண்டு நிறுவனங்கள் ஆகியோரை பாராட்டி பராட்டு சான்றுகள் மற்றும் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது. தொடர்ந்து மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் கலை நிகழ்ச்சிகளில் பங்குபெற்று அவர்களின் திறமைகளை வெளிபடுத்தினார்கள். மாற்றுத்திறனாளிகள் அரசு திட்டங்களை முழுமையாக பயன்பெற்று அனைத்து மாற்றுத்திறனாளிகளும் வெற்றி பெற என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.





















