மேலும் அறிய

Villupuram: அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு ஊசி போடும் காவலாளி - விழுப்புரத்தில் அதிர்ச்சி

விழுப்புரம் அருகேயுள்ள வீரபாண்டி கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிக்கு மருத்துவமனை காவலாளி ஊசி போடும் வீடியோ மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

விழுப்புரம் : விழுப்புரம் அருகேயுள்ள வீரபாண்டி கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் மற்றும் செவிலியர் சரியாக பணிக்கு  வராததால் மருத்துவமனை காவலாளி நோயாளிக்கு ஊசி போடும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நோயாளிக்கு ஊசி போடும் காவலாளி:

விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் அருகேயுள்ள வீரபாண்டி கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செவிலியர்கள், மருத்துவர்கள் சரியாக வருவதில்லை என குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரவு நேர காவலாளியாக பணி புரிந்து வரும் தேவேந்திரன் என்பவர் நோயாளிக்கு ஊசி போடுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இந்நிலையில் காவலாளி தேவேந்திரன் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு பகல் மற்றும் இரவு நேரங்களில் ஊசி  போடுவதும், ஒரு சில நேரங்களில் கர்ப்பிணிகளுக்கு பிரசவம் பார்ப்பதாகவும் தற்பொழுது புகார் எழுந்துள்ளது.

மக்கள் அதிர்ச்சி:

மருத்துவர் எங்கே சென்றார் என்று கேட்டால் வந்துவிடுவார் நான் தான் ஊசி போடுவேன் என தெரிவிப்பதாகவும் சில நேரங்களில் நோயாளிகளுக்கு ஊசி போட்டுவிட்டு பணம்  பெறுவதாகும் புகார் எழுந்துள்ளது. மருத்துவமனை காவலர்  தேவேந்திரன் நோயாளிகளுக்கு ஊசி போடும் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முன்னதாக, தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் காயமடைந்த நோயாளிக்கு, துப்புரவு பணியாளர் ஒருவர் தையல் போட்டு சிகிச்சை அளிக்கும் காட்சி சமூக ஊடகங்களில் வைரலானது. இதைத் தொடர்ந்து,  சம்பந்தப்பட்ட ஊழியரை பணி நீக்கம் செய்து இணை இயக்குனர் மருத்துவ பணிகள் பிரேமலதா உத்தரவிட்டார். தொடர்ந்து இது போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அரசு மருத்துவமனைக்கு செல்ல அச்சத்தில் உள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Rains: ஒரே கஷ்டமப்பா! சென்னையில் காலையிலே கொட்டித் தீர்க்கும் கனமழை!
Chennai Rains: ஒரே கஷ்டமப்பா! சென்னையில் காலையிலே கொட்டித் தீர்க்கும் கனமழை!
13 பேர் உயிரிழப்பு - விபத்துக்கு முழு பொறுப்பு கடற்படைதான் - வெளியான பரபரப்பு தகவல்
13 பேர் உயிரிழப்பு - விபத்துக்கு முழு பொறுப்பு கடற்படைதான் - வெளியான பரபரப்பு தகவல்
TVK Vijay:
TVK Vijay: "ஃப்ரேம் பாருங்க ஜீ" கீர்த்தி சுரேஷை வாழ்த்திய தளபதி விஜய்! ட்ரெண்டாகும் போட்டோ!
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "கிறிஸ்தவன், முஸ்லீம், இந்து எல்லாமே நான்தான்" துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்PMK MLA Controversy : ’’உங்க வீட்டுல ஆம்பளயே இல்லயா’’ஆபாசமாக பேசிய பாமக MLA..கதறி அழுத பெண்கள்Aadhav Arjuna slams Amit Shah : ‘’அம்பேத்கர் இல்லனா நீங்க இல்லபாத்து பேசுங்க அமித் ஷா’’-ஆதவ் அர்ஜுனா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Rains: ஒரே கஷ்டமப்பா! சென்னையில் காலையிலே கொட்டித் தீர்க்கும் கனமழை!
Chennai Rains: ஒரே கஷ்டமப்பா! சென்னையில் காலையிலே கொட்டித் தீர்க்கும் கனமழை!
13 பேர் உயிரிழப்பு - விபத்துக்கு முழு பொறுப்பு கடற்படைதான் - வெளியான பரபரப்பு தகவல்
13 பேர் உயிரிழப்பு - விபத்துக்கு முழு பொறுப்பு கடற்படைதான் - வெளியான பரபரப்பு தகவல்
TVK Vijay:
TVK Vijay: "ஃப்ரேம் பாருங்க ஜீ" கீர்த்தி சுரேஷை வாழ்த்திய தளபதி விஜய்! ட்ரெண்டாகும் போட்டோ!
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "கிறிஸ்தவன், முஸ்லீம், இந்து எல்லாமே நான்தான்" துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
தந்தை உயிரிழப்பு - போலீசுக்கு வந்த ரகசிய தகவல் - மகன் கைது! என்ன நடந்தது?
தந்தை உயிரிழப்பு - போலீசுக்கு வந்த ரகசிய தகவல் - மகன் கைது! என்ன நடந்தது?
Breaking News LIVE: ஆந்திரா நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வு! அடுத்த 6 நாட்களுக்கு மழை தொடரும்
Breaking News LIVE: ஆந்திரா நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வு! அடுத்த 6 நாட்களுக்கு மழை தொடரும்
Crime: தம்பியை கடப்பாறையால் குத்தி கொலை செய்த அண்ணனும் அண்ணியும் கைது! ஏன் எதற்கு?
Crime: தம்பியை கடப்பாறையால் குத்தி கொலை செய்த அண்ணனும் அண்ணியும் கைது! ஏன் எதற்கு?
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
Embed widget