மரக்காணம் அருகே தரமற்ற முறையில் கட்டப்பட்ட குப்பை தொட்டி; சில நாட்களிலேயே இடிந்து விழுந்த அவலம்
இதுவரை அதிகாரிகள் யாரும் திடக்கழிவு மேலாண்மை தொட்டியை தற்போது வரை ஆய்வு செய்யவில்லை எனவும் உடைந்த தொட்டியை சீரமைக்காமல் கிடப்பில் போட்டு உள்ளதாக கிராம மக்கள் வேதனை தெரிவித்தனர்.
விழுப்புரம்: மரக்காணம் அருகே தரமற்ற முறையில் கட்டப்பட்ட மக்கும் குப்பை , மக்காத குப்பை தொட்டி சில நாட்களிலேயே இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே நடுக்குப்பம் ஊராட்சிக்குட்பட்ட சந்தை தோப்பு பகுதியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் மக்கும் குப்பை, மக்காத குப்பை தொட்டி கடந்த ஒரு மாதத்திற்கு முன் கட்டப்பட்டது. கட்டுமான பணியின் போது அப்பகுதி மக்கள் தரமற்ற முறையில் குப்பைத் தொட்டியை கட்டுவதாக அதிகாரியிடம் புகார் தெரிவித்திருந்தனர். இருப்பினும் அதிகாரிகள் அதற்கு செவி சாய்க்கவில்லை என தெரிகிறது. அதன் பின்னர் ஊராட்சி நிர்வாகம் கட்டுமான பணியை முடித்துவிட்டு அதற்கான தொகையை பெற்றுள்ளனர். ஆனால் மக்கும் குப்பை, மக்காத குப்பை தொட்டி கட்டிய சில நாட்களிலேயே ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் முதல்வர் தனி பிரிவிற்கு புகார் அளித்துள்ளனர். மேலும் இதுவரை அதிகாரிகள் யாரும் திடக்கழிவு மேலாண்மை தொட்டியை தற்போது வரை ஆய்வு செய்யவில்லை எனவும் உடைந்த தொட்டியை சீரமைக்காமல் கிடப்பில் போட்டு உள்ளதாக கிராம மக்கள் வேதனை தெரிவித்தனர். மேலும் இது குறித்து துறைசார்ந்த அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்ட செய்திகள் :
திண்டிவனம் நகராட்சியில் 13 திமுக கவுன்சிலர்கள் ராஜினாமா அறிவிப்பு - காரணம் என்ன..?
தீபாவளிக்கு ஆவின் பொருட்கள் 20% கூடுதலாக விற்பனை செய்ய நடவடிக்கை - அமைச்சர் மனோதங்கராஜ்
ஆய்வுக்கு வருவதை கண்டு உணவகத்தை மூடிய உரிமையாளர்; சுவர் எகிறிகுதித்து ஆய்வு செய்த அதிகாரிகள்