மேலும் அறிய

திமுக அமைச்சர்கள் கமிஷன் ஏஜெண்டுகளாக செயல்படுகின்றனர் - சி.வி சண்முகம் அதிரடி பேச்சு

விழுப்புரம் மாவட்டத்தில் பல்கலைக்கழகத்திற்காக ஒதுக்கப்பட்ட அந்த 100 ஏக்கர் நிலத்தில் இன்று செம்மண் கொள்ளை நடைபெறுகிறது - சி.வி சன்முகம்

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள விழுப்புரம் நகராட்சி, திண்டிவனம் நகராட்சி மற்றும் விழுப்புரம் மாவட்ட அனைத்து கிராம மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் ரூ.1509 கோடி மதிப்பீட்டில் மரக்காணத்தில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் கொண்டு வரப்பட்டு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். கடல் நீரை குடிநீராக்கும் இந்த திட்டத்தினை ஆளும் திமுக அரசு கைவிட்டுள்ளதால், அதனை கண்டித்து மாநிலங்களவை உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான சி.வி சண்முகம் தலைமையில் இன்று  திண்டிவனம் காந்தி சிலை முன்பு உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது இந்த உண்ணாவிரத போராட்டத்தில் அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர்கள் அர்ஜுனன், சக்கரபாணி மற்றும் விழுப்புரம் மாவட்ட அதிமுகவின் நிர்வாகிகள் தொண்டர்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் சந்திப்பில் சி.வி சன்முகம் கூறியதாவது:-

விவசாயத்தை நம்பி இருக்க கூடிய மாவட்டம், வானம் பார்த்த பூமி, விவசாயத்துக்கு பயன்படுத்தக்கூடிய நீருக்கும் குடிநீருக்கும் தட்டுப்பாடு உடைய மாவட்டமாக விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டம் இருந்து வருகிறது. இப்படி மாவட்டத்திற்கு பல ஆண்டுகால போராட்டத்திற்கும் கோரிக்கைக்கு பிறகு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கடல் நீரை குடிநீர் ஆக்கும் திட்டத்தை முதல்முறையாக கிராமப் பகுதிகளுக்கும் பயன்பட வேண்டும் என்ற நோக்கில் 1502 கோடி மதிப்பில் மரக்காணம் அடுத்த கூனிமேடு கிராமத்தில் கடலில் இருந்து ஒரு நாளைக்கு 60 எம்எல்டி குடிதண்ணீரை விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களுக்கு இரண்டு கட்டங்களாக அந்த திட்டத்தை அறிவித்தனர்,

முதல் கட்டமாக திண்டிவனம் நகராட்சி, விழுப்புரம் நகராட்சி மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 669 பேரூராட்சிகளில், மருத்துவமனைகளுக்கும் தங்கு தடை இன்றி குடிநீர் வழங்கப்படுவதற்காக உருவாக்கப்பட்ட திட்டம், ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு இன்று பொறுப்பேற்றுள்ள திமுக அரசு பொதுமக்களுக்கு வாக்குறுதி அளித்த திட்டங்களை நிறைவேற்றியதை தவறிய பட்சத்திலும் பொதுமக்களின் நாளுக்காக அதிமுக ஆட்சியில் அறிவித்த திட்டங்கள் அனைத்தையும் முடக்கி செயல்படுத்த மறுக்கின்றது. விழுப்புரம் மாவட்டத்தில் இரண்டு அமைச்சர்கள் மற்றும் கூட்டணி கட்சியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதை வற்புறுத்தி அந்த திட்டத்தை செயல்படுத்த ஏன் வழிவகை செய்யவில்லை...? அதிமுகவின் நலனுக்காக திட்டங்கள் கொண்டுவரப்படவில்லை ஏழை எளிய பொது மக்களின் நலன் கருதியே திட்டங்கள் கொண்டுவரப்பட்டன அந்த திட்டங்களை முடக்குவது ஏன்..?

விழுப்புரம் மாவட்டத்தை பொறுத்தவரை கல்வி, தொழிற்சாலை அனைத்திலும் பின் தங்கிய மாவட்டம் குடிநீருக்கும் தட்டுப்பாடு உடைய மாவட்டம் இப்படிப்பட்ட மாவட்டத்தை மேம்படுத்த வேண்டும் என்று கடந்த ஆட்சியில் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தோம் குறிப்பாக மாவட்ட முழுமையாக வளர்ச்சி அடைய வேண்டுமென்றால் கல்வியை வழங்க வேண்டும். அந்த வகையில் தான் ஏழை எளிய மாணவர்களுக்கு பயன்படும் வகையில் விழுப்புரத்தில் அதிமுக அரசு பல்கலைக்கழகம் ஒன்றை கொண்டு வந்தது. அதை ஆட்சி பொறுப்பேற்ற திமுக அரசு விழுப்புரத்தை சேர்ந்தவரை அமைச்சராக்கி அழகு பார்த்த இந்த விழுப்புரம் மாவட்டதில் மக்களுக்கு எதிராக அந்த பல்கலைக்கழகங்களை மாற்றியுள்ளனர்,


திமுக அமைச்சர்கள் கமிஷன் ஏஜெண்டுகளாக செயல்படுகின்றனர் - சி.வி சண்முகம் அதிரடி பேச்சு

பல்கலைக்கழகத்திற்காக ஒதுக்கப்பட்ட அந்த 100 ஏக்கர் நிலத்தில் இன்று செம்மண் கொள்ளை நடைபெறுகிறது, இப்போதுதான் தெரிகிறது ஏன் அந்த பல்கலைக்கழகத்தை மூடினார்கள் என்று, தினந்தோறும் 500 கணக்கான வாகனங்களில் செம்மண் கொள்ளை அடிக்கப்படுகிறது செம்மண் கொள்ளை அடிப்பவர் யார் என்று இந்த விழுப்புரம் மக்களுக்கு நன்றாக தெரியும், விழுப்புரத்தில் அரசு பள்ளிகளுக்கும் இருந்தால் இங்க இருக்கக்கூடிய மாணவர்களுக்கு இலவசமாக பயில வாய்ப்பு கிடைத்திருக்கும் ஆனால் மைலத்தில் தற்போது திமுக எம் பி யின் தனியார் பல்கலைக்கழகத்தின் கட்டிட வேலைகள் நடைபெற்று கொண்டுள்ளது, இதன் காரணமாகவே விழுப்புரத்தில் அரசு பல்கலைக்கழகத்தை இழுத்து மூடினார்கள்,

விழுப்புரம் மாவட்டத்தில் துவங்கப்பட்ட கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தில் என்ன குறை கண்டீர்கள், இந்த திட்டத்தை ரத்து செய்துவிட்டு சேலம் வேப்பூரில் இருந்து தண்ணீர் கொண்டு வருவதாக சொல்கிறார்கள், சொல்வதற்கு நன்றாக இருக்கும் சட்ட சிக்கல்கள் இருக்கக்கூடிய காவிரி நதியின் மேட்டூரில் இருந்து தண்ணீர் கொண்டு வர போவதாக காதில் பூசுற்ற பார்க்கிறார்கள். அவர்களுடைய நோக்கம் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பதே. இரண்டு மாவட்டங்களை சேர்த்து திட்டம் உருவாக்கப்பட்டால் 3 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகிறது அதே மேட்டூரில் இருந்து கொண்டுவரப்பட்டால் 5000 கோடி ரூபாய் செலவாகிறது. ஆனால் விழுப்புரம் திட்டத்திற்கு ஆண்டுக்கு 80 கோடி ரூபாய் செலவாகிறது. மேட்டூரில் உருவாக்கப்படும் திட்டத்திற்கு 32 கோடி ரூபாய் தான் செலவாகிறது என காரணம் கூறுகிறார்கள். அந்த காசை அவர் பாக்கெட்டில் இருந்து எடுத்துக் கொடுக்க போகிறாரா..? சிப்காட் நிறுவனங்களிடம் இருந்தும் அரசு மருத்துவமனையில் இருந்தும் வரக்கூடிய வருமானமே அந்த திட்டத்தை பராமரிப்பதற்கு போதுமானது, 1500 கோடி செலவில் உருவாக்கப்பட்ட திட்டத்தை கைவிட்டு பத்தாயிரம் கோடி ரூபாயில் நவீன திட்டம் ஒன்றை அறிவித்து அதில் 20%, 25% சதவீதம் என கொள்ளையடிப்பது தான் திமுகவின் நோக்கம் அதிமுக ஆட்சியில் உருவாக்கப்பட்ட அனைத்து திட்டங்களையும் கைவிட்டு விட்டு புதிதாக திட்டங்களை உருவாக்கி அதில் கமிஷன் பார்ப்பது திமுக அரசின் வேலையாக உள்ளது. அதற்கு திமுகவின் அமைச்சர்கள் கமிஷன் ஏஜெண்டுகளாக செயல்பட்டு வருகின்றனர் இவர்களுக்கு முதலாளியாக மு.க. ஸ்டாலின் குடும்பம் செயல்பட்டு வருகிறது.

இவ்வாறு செய்தால் எப்படி சாலையை ஒழுங்காக போடுவார்கள் ஜீப் மீது இருசக்கர வாகனம் மீது போர்வெல் மீது இப்படி தான் சாலை போடுவார்கள். இதற்கு காரணம் இவர்கள்தான் ஆரம்பத்திலேயே கமிஷன் வாங்கி விடுகிறார்கள் இறுதியிலும் கமிஷன் வாங்கி விடுகிறார்கள், உதாரணமாக கோயம்புத்தூரில் 160 கோடி செலவில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படுவதற்கான திட்டத்தை உருவாக்கி அதற்காக 60 ஏக்கர் அரசு நிலத்தையும் அதிமுக அரசு தேர்வு செய்து, அதில் கிட்டத்தட்ட 60 கோடி செலவிடப்பட்டு பாதி கட்டங்களுக்கு மேல் கட்டப்பட்டு விட்டது. ஆனால் தற்போது அந்த பேருந்து நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்ற போவதாகவும் அதுவும் 60 ஏக்கர் நிலையத்தை தனியார் இடமாக வாங்குவதாகவும் தெரிவிக்கின்றனர். அரசு பேருந்து நிலையம் அமைவுள்ள இடத்தில் குடியிருப்புகள் கட்டப்போவதாக திமுக அரசு அறிவிக்கிறது. அதை கட்டவுள்ள நிறுவனம் ஜி ஸ்கொயர் நிறுவனம் அந்த நிறுவனம் ஸ்டாலின் மருமகன் சபரீசன் நிறுவனம் இப்படி தமிழக முழுவதும் பட்டா போட்டு விற்றுக் கொண்டுள்ளார் சபரீசன்.

நாங்கள் கூட அதிமுகவின் மீதுள்ள காழ்புணர்ச்சியால் தான் திட்டங்களை ரத்து செய்து வருகிறார்கள் என்று எண்ணினோம். ஆனால் அது அல்ல அறிவித்த திட்டங்களில் கமிஷன் தர முடியாது என்று புதிய திட்டங்களை அறிவித்து அதில் வரும் கமிஷன்கள் மூலம் மு.க.ஸ்டாலின் அவர்களின் குடும்பம் மட்டும் நான் இந்த நாட்டில் வாழ வேண்டும் என்று தமிழ்நாட்டையே சூறையாடி கொண்டுள்ளனர். தினமும் போட்டோ சூட் நடத்துவது தான் முதலமைச்சரின் வேலையாக உள்ளது நடப்பது போன்று, ஓடுவது போன்று சைக்கிள் ஓட்டுவது போன்றும் போட்டோ ஷூட் நடத்தவே அவர்களுக்கு நேரம் சரியாக உள்ளது, இதுதான் ஒரு முதலமைச்சரின் வேலையா நீங்கள் சொன்ன நீட் தேர்வுக்கு என்னாச்சு நீங்கள் அளித்த வாக்குறுதிகள் என்னாச்சு,

நீட் தேர்வால் மரணமடைந்த ஒரு அனிதாவிற்கு கூக்குரல் கொடுத்த ஸ்டாலின் தலைமையிலான அரசு இந்த ஒரு வருடத்தில் கிட்டத்தட்ட 25 பேர் இறந்துள்ளனர். அதற்கு ஏன் மௌனம் காக்கிறார். ஏனென்றால் தமிழகத்தில் நடைபெறக்கூடிய எதுவும் அவருக்கு தெரியாது அவரை சுற்றி ஒரு மாய வலை உள்ளது. இந்திரலோகத்தில் நா அழகப்பன் போல அவர் உள்ளார். இந்த நாட்டை பற்றி  கவலை இல்லை கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் விழுப்புரம் மாவட்ட மக்களின் நலனுக்காக உருவாக்கப்பட்டது இது வியாபாரம் இல்லை உணவு, குடிநீர் இவை எல்லாம் வியாபாரம் இல்லை அரசு மக்களுக்காக வழங்க வேண்டிய அடிப்படை கடமை, இதில் கணக்கு பார்க்கக் கூடாது.

மேட்டூரில் இருந்து தண்ணீர் கொண்டு வருவதில் சிக்கல்கள் இருந்ததால்தான் விழுப்புரம் மாவட்டத்திலேயே அந்த திட்டத்தை உருவாக்கினோம். கடல் நீர் என்றைக்கும் வற்றாது, வருடம் முழுவதும் கடலில் இருந்து தண்ணீர் எடுக்கலாம், எனவே லஞ்சம் பெறுவதை குறிக்கோளாக வைத்துள்ள இந்த அரசு மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் அதை தட்டிக் கேட்க முடியாத இரண்டு அமைச்சர்கள் மற்றும் அவர்களுக்கு கூஜா தூக்கக்கூடிய சட்டமன்ற உறுப்பினர்கள், நீங்கள் எல்லாம் ஏன் இருக்கிறீர்கள் உங்கள் தொகுதி மக்களுக்கு நாங்கள் பேசிக் கொண்டுள்ளோம். ஆனால் நீங்கள், முதலமைச்சர் ஏன் தர மறுக்கிறார் என்று கூட கேட்பதில்லை, இனமானம் சூடு இருந்தால் எந்த அமைச்சர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் ராஜினாமா செய்ய வேண்டும், எனவே இந்த திமுக அரசு உடனடியாக கடலில் குடிநீர் ஆக்கும் திட்டத்தை செயல்படுத்தி விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களுக்கு உடனடியாக குடிநீர் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன், இந்தத் திட்டத்தை நிறைவேற்றும் வரை தொடர் போராட்டம் நடைபெறும்” என்று கூறினார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

WTC Points Table: ஹாட்ரிக் போச்சா..! உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் வாய்ப்பை இழந்த இந்தியா, புள்ளிப்பட்டியல் நிலவரம்
WTC Points Table: ஹாட்ரிக் போச்சா..! உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் வாய்ப்பை இழந்த இந்தியா, புள்ளிப்பட்டியல் நிலவரம்
IND vs AUS: சிட்னியில் சட்னியான இந்தியா! 11 வருஷத்துக்கு பிறகு தொடரை வென்ற ஆஸ்திரேலியா!
IND vs AUS: சிட்னியில் சட்னியான இந்தியா! 11 வருஷத்துக்கு பிறகு தொடரை வென்ற ஆஸ்திரேலியா!
TN Rain Update: சென்னையில் இன்று மழையா? தமிழ்நாட்டில் எங்கெல்லாம் கனமழை வெளுக்கும்? - வானிலை அறிக்கை
TN Rain Update: சென்னையில் இன்று மழையா? தமிழ்நாட்டில் எங்கெல்லாம் கனமழை வெளுக்கும்? - வானிலை அறிக்கை
Anna University Issue: அண்ணா பல்கலை வழக்கில் திருப்பூரைச் சேர்ந்தவருக்கு தொடர்பா.! டிஜிபி விளக்கம்
அண்ணா பல்கலை வழக்கில் திருப்பூரைச் சேர்ந்தவருக்கு தொடர்பா.! டிஜிபி விளக்கம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

மாணவி கொடுத்த HINT.. சிக்கிய ஞானசேகரன் கூட்டாளி!  திருப்பூர் விரையும் போலீஸ்வேகமெடுக்கும் லஞ்ச வழக்கு..  அமெரிக்கா வைத்த ஆப்பு?  கலக்கத்தில் கவுதம் அதானி!’’புடவை என்னமா விலை?’’  ரஷ்ய பெண்ணுடன் SELFIE  பாஜக  மகளிரணி ATROCITYMRK  Panneerselvam Angry |’'எருமை மாடா டா நீ’’ஒருமையில் திட்டிய அமைச்சர்  அரசு நிகழ்ச்சியில் பரபரப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
WTC Points Table: ஹாட்ரிக் போச்சா..! உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் வாய்ப்பை இழந்த இந்தியா, புள்ளிப்பட்டியல் நிலவரம்
WTC Points Table: ஹாட்ரிக் போச்சா..! உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் வாய்ப்பை இழந்த இந்தியா, புள்ளிப்பட்டியல் நிலவரம்
IND vs AUS: சிட்னியில் சட்னியான இந்தியா! 11 வருஷத்துக்கு பிறகு தொடரை வென்ற ஆஸ்திரேலியா!
IND vs AUS: சிட்னியில் சட்னியான இந்தியா! 11 வருஷத்துக்கு பிறகு தொடரை வென்ற ஆஸ்திரேலியா!
TN Rain Update: சென்னையில் இன்று மழையா? தமிழ்நாட்டில் எங்கெல்லாம் கனமழை வெளுக்கும்? - வானிலை அறிக்கை
TN Rain Update: சென்னையில் இன்று மழையா? தமிழ்நாட்டில் எங்கெல்லாம் கனமழை வெளுக்கும்? - வானிலை அறிக்கை
Anna University Issue: அண்ணா பல்கலை வழக்கில் திருப்பூரைச் சேர்ந்தவருக்கு தொடர்பா.! டிஜிபி விளக்கம்
அண்ணா பல்கலை வழக்கில் திருப்பூரைச் சேர்ந்தவருக்கு தொடர்பா.! டிஜிபி விளக்கம்
Jagdeep Singh: நாளொன்றிற்கு ரூ.48 கோடி, ஆண்டிற்கு? உலகின் அதிக சம்பளம் வாங்கும் சிஇஒ..! யார் இந்த இந்தியர்?
Jagdeep Singh: நாளொன்றிற்கு ரூ.48 கோடி, ஆண்டிற்கு? உலகின் அதிக சம்பளம் வாங்கும் சிஇஒ..! யார் இந்த இந்தியர்?
PM Modi : ரூ. 12,200 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கிவைக்கும் பிரதமர் மோடி; எங்கு தெரியுமா?
ரூ. 12,200 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கிவைக்கும் பிரதமர் மோடி; எங்கு தெரியுமா?
IND vs AUS: 1 ரன்ல எல்லாம் போச்சு! ஸ்மித் ஆசையில் மண்ணை அள்ளிப்போட்ட இந்தியா!
IND vs AUS: 1 ரன்ல எல்லாம் போச்சு! ஸ்மித் ஆசையில் மண்ணை அள்ளிப்போட்ட இந்தியா!
Poisonous Gas: உலகின் மிகவும் ஆபத்தான விஷவாயு..! முதல் மூச்சுக்கே உயிர் இருக்காது, காரணம் என்ன?
Poisonous Gas: உலகின் மிகவும் ஆபத்தான விஷவாயு..! முதல் மூச்சுக்கே உயிர் இருக்காது, காரணம் என்ன?
Embed widget