திருவாமாத்தூர் கோவிலில் தட்டினால் ஓசை கேட்கும் 4 தூண்கள் மாயம் - பொன்மாணிக்கவேல் குற்றச்சாட்டு
திருநாவலூரில் மூன்று கோவில்கள், ஏமப்பேரில் 1ஐம்பொன் சிலை, திருவாமாத்தூர் கோவிலில் தட்டினால் ஓசை கேட்கும் நான்கு தூண்கள் மாயம் - பொன்மாணிக்கவேல் குற்றச்சாட்டு
விழுப்புரம்: விழுப்புரம் அருகேயுள்ள ஏமப்பூரில் உள்ள பழமை வாய்ந்த கோயிலில் இருந்த பல கோடி ரூபாய் மதிப்பிலான திருபுவன சுந்தரர் மற்றும் திருபுவன சுந்தரி ஆகிய இரண்டு சாமி சிலைகளும் காணாமல் போயிருப்பதாக பொண்மாணிக்கவேல் குற்றஞ்சாட்டியுள்ளார்.
விழுப்புரத்தில் உள்ள கைலாசநாதர் கோயிலில் முன்னாள் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறை ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் இன்று சாமி தரிசனம் செய்த பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூரில் தற்போது பக்தஜனேஸ்வரர் கோயில் மட்டுமே இருந்து வருவதாகவும் அந்த ஊரில் பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட கலிநாரீஸ்வரன் சிவன் கோயில், திருமேற்றளி மகாவிஷ்ணு கோயில், அகத்தீஸ்வரம் கோயில் என மேலும் 3 கோயில்கள் இருந்துள்ளதற்கான ஆவணங்கள் உள்ளதாக தெரிவித்தார். அதனை தொடர்ந்து பேசிய அவர் 1947ல் ஆங்கிலேயர்கள் வழங்கிவிட்டு சென்ற பிறகு காலப்போக்கில் அந்த 3 கோயில்களுமே இருந்த இடம் தெரியாமல் அடிச்சுவடியே இல்லாமல் போய்விட்டதாகவும்,
இதேபோல் விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள ஏமப்பூரில் உள்ள பழமை வாய்ந்த கோயிலில் இருந்த பல கோடி ரூபாய் மதிப்பிலான திருபுவன சுந்தரர் மற்றும் திருபுவன சுந்தரி ஆகிய இரண்டு சாமி சிலைகளும் காணாமல் போயிருப்பதாகவும், இந்த இரண்டு சாமி சிலைகளும் தற்போது வெளிநாட்டில் உள்ளதால் இது குறித்து சிவனடியார்கள் மூலம் காவல்துறையில் புகார் அளிக்க உள்ளதாக கூறினார். மேலும் புகார் தொடர்பாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மாவட்ட காவல்துறை உயரதிகாரிகளை நாடுவோம் என்றும் அவர்களும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நீதிமன்றத்தை நாட இருப்பதாக தெரிவித்தார். திருநாவலூரில் காணாமல் போயிருக்கும் பல்லவர் காலத்து 3 கோயில்களையும் கண்டுபிடிக்க ஓய்வு பெற்ற நீதிபதிகளைக் கொண்ட குழுவை அமைக்க வேண்டும் என்றும் அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் உள்ள சாமி சிலைகள் அனைத்துமே இங்கிருந்து தான் அங்கு சென்றிருப்பதாகவும் அது எப்படி அங்கு போனது என கேள்வி எழுப்பினார்.