மேலும் அறிய

Seeman: பிரபாகரனோடு இருக்கும் போட்டோ எடிட்; சீமான் சொன்ன பதில் என்ன?

மது குடிப்பதை தடுப்பது மனைவியுடன் உறவு வைக்கக்கூடாது என கூறியுள்ளார் பெரியார் பேசியதை கூறி வாக்கு கேளுங்களேன்.

விழுப்புரம் அருகேயுள்ள பூரிகுடிசை கிராமத்தில் தமிழ்நாடு பனையேறிகள் பாதுகாப்பு இயக்கம் மற்றும் தமிழ்நாடு கள் இயக்கம் சார்பாக கள் விடுதலை மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சீமான் பேசியதாவது:

கல் தடை அவசியமற்றது. வேறு எந்த மாநிலத்திலும் கல் இறக்க தடை இல்லை. நம்ம மாநிலத்தில் மட்டும் கல் எடுக்க தடை எதற்கு. டாஸ்மாக்கில் விற்பனை செய்யப்படுவது என்ன கோயில் தீர்த்தமா?. கள் இறக்க அனுமதி கொடுக்க வேண்டும். பிரபாகரனோடு இருக்கும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டதாக வெளியான தகவல் குறித்த கேள்விக்கு: அதை விடுங்கள் என பதில் அளித்தார்.

கவிஞர் அறிவுமதி சீமானை தமிழகத்தின் கருணாயன விமர்சித்தது குறித்த கேள்விக்கு பதில் அளித்த சீமான்: தமிழகத்தில் ஒரு கருநாதான் அவர் கருணாநிதி. இன்றைக்கு நான் மட்டும் போராடும்போது என்னை கருணை எனது விமர்சிப்பது ஏன்?. ஈழத்திற்கு உணவுப் பொருட்கள் செல்லாமல் தடுத்தவர் கருணாநிதி இது அறிவுமதி, சுபவீர பாண்டியன், கொளத்தூர் மணி ஆகியோர்களுக்கு தெரியுமா? தெரியாதா?. 

ஈரோடு இடைத்தேர்தல் குறித்த கேள்விக்கு:

களத்தில் இருவர் தான். களம் எங்களுக்கானது. நான் ஒருவன் தான் போட்டியிடுகிறேன். ஆனால் பல அமைச்சர்களை அனுப்பியும், கூட்டணி கட்சிகள் இருந்தும் வாக்குக்கு காசு கொடுப்பது ஏன்?. 

பெரியார் பெரியார் என்று பேசுபவர்கள். பெரியாரைப் பற்றி பேசி வாக்கு கேளுங்களேன். பெரியார் பெண்கள் குறித்து தாலி அடிமை சின்னம் அதனை அறுத்து எறிய வேண்டும், கோயிலுக்கு சென்று சாமி கும்பிடுவது காட்டுமிராண்டித்தனம் என பேசியுள்ளார், பெண்கள் கருப்பையை அறுத்து எறிய சொல்லியுள்ளார், மது குடிப்பதை தடுப்பது மனைவியுடன் உறவு வைக்கக்கூடாது என கூறியுள்ளார் பெரியார் பேசியதை கூறி வாக்கு கேளுங்களேன். 

தமிழ் மொழியினை சனியன் என்றும், காட்டுமிராண்டி மொழி என்றும், முட்டாள் பாஷை என பேசியுள்ளார். இது குறித்து பேசி வாக்கு கேளுங்களேன். பெரியாரை சீமான் விமர்சனம் செய்துவிட்டார் அதனால் சீமானுக்கு வாக்கு அளிக்க வேண்டாம் என பேசுங்கள். இப்போது பெரியாரை பேசி வாக்கு வாங்கபோகிறீர்கள் அல்லது காந்தி நோட்டு கொடுத்து வாக்கு சேகரிப்பீர்களா?

பெரியாரை எதிர்ப்பது மதவாதத்திற்கு ஆதரவாக உள்ளது என கூறுகிறார்கள். பெரியார் எந்த மதத்திற்கு எதிரானவர். கிறிஸ்தவன், இஸ்லாமியன் என் எதிரி கூறிய பெரியார் எந்த மாதத்திற்கு எதிரானவர். பெரியாரை விமர்சனம் செய்துவிட்டால் அவர் சங்கி என்று பிஜேபி என விமர்சனம் செய்யப்படுகிறது. 

ராஜாஜி என்ற பார்ப்பனரோடு கூட்டணி வைத்து ஆட்சிக்கு வந்தவர்கள் யார்?. ராஜாஜியுடன் கடைசி வரை நட்போடு இருந்தவர்கள் யார்?. பாரதிய ஜனதா கட்சியின் தாய் கழகமான ஜன சங்கத்துடன் கூட்டணி வைத்திருந்தவர் யார்? பாஜகவோடு கூட்டணி வைத்தவர்கள் யார்?. திராவிடம் அதிகாரத்திற்கு போகவே ஆரிய தலைமையுடன் கூட்டணி வைத்த கூட்டணிகள். திராவிடம் அரியணை ஏற பீகார் பார்ப்பனன் பிரசாந்து கிஷோர் பாண்டே தேவைப்படுகிறார். இப்போது ராபின் சர்மாவை கூட்டி வந்திருக்கிறார்கள் அவர் ஒரு ஆரியர். நீங்கள் மேலே வருவதற்கு அவன் பக்கத்தில் இருக்க வேண்டியிருக்கிறது, அவன் மூளை தேவைப்படுகிறது. ஆனால் எங்களை சங்கி எனது விமர்சனம் செய்கிறார்கள். 

எஸ்.வி.சேகர் தந்தை பெயரில் சாலை அமைக்கப்படும் என முதல்வர் கூறியது குறித்த கேள்விக்கு: ஆரிய கூலி, ஆரியப்பற்று, ஆரிய கூட்டாளி. நாடகம் போடும்போது முதல்வர் படமும், உதயநிதி ஸ்டாலின் படம் உள்ளது. 

ஐஐடி இயக்குனர் கோமியம் குறித்து தெரிவித்த கருத்து குறித்து கேள்விக்கு:

மருத்துவமனைகளுக்கு லிட்டர் லிட்டராக கொடுத்து குடிக்க சொல்ல வேண்டும். பைத்தியங்களிடம் நாடு மக்களும் சிக்கி உள்ளது. மாட்டு பால் குடிப்பவன் இடை சாதி, மாட்டு கறி திண்பவன் கீழ் சாதி, மாட்டு மூத்திரம் குடிப்பவன் உயர்ந்த சாதி இதுதான் இந்த நாட்டில் உள்ள கட்டமைப்பு. இதிலிருந்து தப்பிக்க அரசியல் புரட்சி மட்டுமே ஒரே வழி. திராவிடமும், ஆரியமும் வெவ்வேறு கிடையாது இரண்டும் ஒன்றுதான் என்றார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பாய் குல்லா அணிந்து.. லுங்கியுடன் என்ட்ரி கொடுத்த தவெக தலைவர் விஜய்!
பாய் குல்லா அணிந்து.. லுங்கியுடன் என்ட்ரி கொடுத்த தவெக தலைவர் விஜய்!
பாஜக நோட்டா என கிண்டலடித்தார்கள், ஆனால் இப்போ பாருங்க.!...இபிஎஸ் தாக்கிய அண்ணாமலை.!
"இந்த அநியாயத்தை ஏத்துக்க மாட்டோம்" பாஜகவை எதிர்க்க பாஜகவிடமே ஆதரவு கேட்ட ஸ்டாலின்!
திருத்தணியில் பேருந்து, லாரி நேருக்கு நேர் மோதி விபத்து.. 5 பேர் பலியான சோகம்!
திருத்தணியில் பேருந்து, லாரி நேருக்கு நேர் மோதி விபத்து.. 5 பேர் பலியான சோகம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Daughter in law Surprise: வைர நெக்லஸ்..தங்க கட்டிகள்..1 கோடியில் BIRTHDAY GIFT!மாமியாருக்கு SURPRISESarathkumar BJP : அண்ணாமலைக்கு ஆப்பு! பாஜக தலைவர் சரத்குமார்? கடுப்பில் சீனியர்ஸ்Chandrababu Naidu Praises Tamilnadu : ’’தமிழர்கள் TOP-ல இருக்காங்கதமிழ்நாடு தான் BEST’’புகழ்ந்து தள்ளிய சந்திரபாபுPolice vs Drunken lady : தலைக்கேறிய போதை !நடுரோட்டில் இளம்பெண் அலப்பறை திணறிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாய் குல்லா அணிந்து.. லுங்கியுடன் என்ட்ரி கொடுத்த தவெக தலைவர் விஜய்!
பாய் குல்லா அணிந்து.. லுங்கியுடன் என்ட்ரி கொடுத்த தவெக தலைவர் விஜய்!
பாஜக நோட்டா என கிண்டலடித்தார்கள், ஆனால் இப்போ பாருங்க.!...இபிஎஸ் தாக்கிய அண்ணாமலை.!
"இந்த அநியாயத்தை ஏத்துக்க மாட்டோம்" பாஜகவை எதிர்க்க பாஜகவிடமே ஆதரவு கேட்ட ஸ்டாலின்!
திருத்தணியில் பேருந்து, லாரி நேருக்கு நேர் மோதி விபத்து.. 5 பேர் பலியான சோகம்!
திருத்தணியில் பேருந்து, லாரி நேருக்கு நேர் மோதி விபத்து.. 5 பேர் பலியான சோகம்!
Local Train Cancelled: அலர்ட் பயணிகளே.. ஞாயிறன்று ரத்தாகும் புறநகர் ரயில்கள்.. எந்த வழித்தடம் தெரியுமா?
Local Train Cancelled: அலர்ட் பயணிகளே.. ஞாயிறன்று ரத்தாகும் புறநகர் ரயில்கள்.. எந்த வழித்தடம் தெரியுமா?
பள்ளி மாணவர்களிடம் பிஸ்கட் கொடுத்து ஏமாற்றும் பாஜகவினர்! – அன்பில் மகேஸ் கொடுக்கும் எச்சரிக்கை
பள்ளி மாணவர்களிடம் பிஸ்கட் கொடுத்து ஏமாற்றும் பாஜகவினர்! – அன்பில் மகேஸ் கொடுக்கும் எச்சரிக்கை
Chennai Madurai Expressway: அடி தூள்.. இனி சென்னை டு மதுரை 6 மணி நேரம்தான்.. தொடங்கிய எக்ஸ்பிரஸ் வே பணிகள்...
அடி தூள்.. இனி சென்னை டு மதுரை 6 மணி நேரம்தான்.. தொடங்கிய எக்ஸ்பிரஸ் வே பணிகள்...
“தமிழுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்; தமிழகத்தில் இதை செய்யுங்கள்” – ஸ்டாலினுக்கு அமித்ஷா வேண்டுகோள்
“தமிழுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்; தமிழகத்தில் இதை செய்யுங்கள்” – ஸ்டாலினுக்கு அமித்ஷா வேண்டுகோள்
Embed widget