மேலும் அறிய
Advertisement
பண்ரூட்டி அருகே ரயில் விபத்தை தடுத்து நிறுத்த உதவிய பெண்ணுக்கு போலீஸ் பாராட்டு
பண்ருட்டி அருகே பெரும் ரயில் விபத்து தவிர்பபு - உரிய நேரத்தில் தகவல் கொடுத்த பெண்ணை பாராட்டிய ரயில்வே போலீசார்.
விழுப்புரம் வழியாக நாள் தோறும் ஏராளமான ரயில்கள் வந்து செல்கிறது. இந்த நிலையில் கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த திருத்துறையூர் கிராமம் அருகே ரயில்வே தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனை அவ்வழியாக சென்ற அக்கடவல்லி கிராமத்தை சேர்ந்த மஞ்சு என்ற பெண் ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். தகவல் அறிந்து விரைந்து வந்த ரயில்வே போலீசார் தண்டவாளத்தில் ஏற்பட்டு இருந்த விரிசலை சரி செய்தனர். உரிய நேரத்தில் வந்த தகவலின் பேரில் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதனை தொடர்நது கடலூர் துறைமுகம் ரயில்வே போலீசார் அப்பெண்ண நேரில் சந்தித்து பாராட்டு நன்றி தெரிவித்தனர். மேலும் விரிசல் ஏற்பட்ட இடத்தில் போலீசார் ஊழியர்களை வைத்து சரிசெய்து வருகின்றனர்.
வங்க கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி-மின்வளத் துறையின் எச்சரிக்கை அடுத்து கடலுக்கு செல்லாத மீனவர்கள்
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் தெற்கு அந்தமான் கடற் பகுதியில் உருவாகியிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வட கடலோர மாவட்டங்களில் நாளையும், டிச.8ம் தேதி நள்ளிரவு முதல் கனமழை பெய்யும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது இந்த நிலையில் நேற்று தமிழக வங்க கடல் பகுதியில் மோசமான வானிலை நிலவும் எனவும் மற்றும் கடல் காற்றானது மணிக்கு 55 முதல் 60 கி.மீ வேகத்தில் வீசும் எனவும், இது வலுப்பெற்று மணிக்கு 80 கி.மீ வரை வீசக்கூடும் என அறிவுறுத்தப்பட்ட நிலையில்
கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 48 மீனவர் கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் தங்களது அனைத்து வகையான மீன்பிடி படகுகளும் இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல கூடாதென அறிவுறுத்தப்பட்டதைை அடுத்து மீனவர்களின் படகுகள் பத்திரமாக கடலூர் துறைமுக பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றதை தொடர்ந்து தமிழகத்தில் புயல் எச்சரிக்கை காரணமாக சென்னை, நாகை, தஞ்சை, திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை ஆகிய 6 மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்பு படை விரைகிறது
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
இந்தியா
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion