மதுபானக் கடைகளை மூட உத்தரவு! ஏன் எதற்கு தெரியுமா ?
புதுச்சேரி, காரைக்காலில் வரும் 11-ம் தேதி மதுபானக் கடை மற்றும் சாராயக் கடைகளை மூட கலால் துறை உத்தரவிட்டுள்ளது.

புதுச்சேரி: புதுச்சேரி, காரைக்காலில் வரும் 11-ம் தேதி மதுபானக் கடை மற்றும் சாராயக் கடைகளை மூட கலால் துறை உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரியில் இயங்கி வரும் மதுபான கடைகள், சாராயம்- கள்ளுக்கடை போன்றவை, வழக்கமாக முக்கிய நாட்களில் மூடப்படுவது வழக்கம். அதன்படி ஒவ்வொரு ஆண்டும் திருவள்ளுவர் தினம், குடியரசு தினம், காந்தி ஜெயந்தி, மகாவீரர் ஜெயந்தி, நபிகள் நாயகம் ஜெயந்தி, வடலூர் ராமலிங்கர் நினைவு தினம், சுதந்திர தினம், உழைப்பாளர்கள் தினம் அன்று மதுபான கடைகள் மூடப்படும்.
அதன்படி ஒவ்வொரு ஆண்டும் திருவள்ளுவர் தினம், குடியரசு தினம், காந்தி ஜெயந்தி, மகாவீரர் ஜெயந்தி, நபிகள் நாயகம் ஜெயந்தி, வடலூர் ராமலிங்கர் நினைவு தினம், சுதந்திர தினம், உழைப்பாளர்கள் தினம் அன்று மதுபான கடைகள் மூடப்படும்.
அந்த வகையில், புதுச்சேரியில் வள்ளலார் தினத்தையொட்டி பிப்ரவரி 11ஆம் தேதி சாராயம், கள்ளுக்கடை, மதுபான கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக கலால்துறை துணை ஆணையர் மேத்யூ பிரான்சிஸ் பிறப்பித்துள்ள உத்தரவில், ‘வள்ளலார் ஜோதி தினத்தையொட்டி வரும் 11-ம் தேதி புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இயங்கும் அனைத்து கள், சாராயம், பார் உட்பட அனைத்து மதுக்கடைகளும் , மது அருந்த அனுமதிக்கப்பட்ட உணவகங்களில் உள்ள பார் மூடப்பட்டிருக்க வேண்டும். அன்றைய தினத்தில் அனைத்து கடைகளிலும் மது விற்பனை தடை செய்யப்படுகிறது. மீறுவோர் மீது கலால் சட்ட விதிப்படி நடவடிக்கை எடுக்கப்படும்’ என எச்சரித்துள்ளார்.
வள்ளலாரின் 154 வது ஜோதி தரிசன விழா
வள்ளலார் தர்ம ஞானசபையில் கண்ணாடிக்கு முன்னாள் உள்ள ஏழு வண்ண திரைகள் நீக்கப்பட்டு, நிலை கண்ணாடிக்கு பின் உள்ள ஜோதி தரிசனம் காட்டப்படும். இந்த ஆண்டு வடலூர் வள்ளலாரின் 154 வது ஜோதி தரிசன விழாவாக நடைபெற உள்ளது.
'வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன்'
'வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன்' என அனைத்து உயிர்களிடத்தும் அன்பு செலுத்துவது, உணவே மருந்து என உணவு ஒழுங்கு முறை கட்டுப்பாடு ஆகியவற்றை உலகிற்கு போதித்தவர் ராமலிங்க அடிகளார். யாரும் பசியால் இறக்கக் கூடாது என்பதற்காக சன்மார்க் சங்கத்தை நிறுவி 24 மணி நேரமும் அன்னதானம் வழங்கும் முறையை கொண்டு வந்தவர். அதனாலேயே இவரை அடியவர்கள் வள்ளலார் என அழைக்கின்றனர்.
இறைவனை ஒளி வடிவமாக வணங்கும் ஆன்மிக நெறி முறை
இறைவனை ஒளி வடிவமாக வணங்கும் ஆன்மிக நெறி முறையை வகுத்தவர். வள்ளலார். இறைவனுக்கு உருவம் கிடையாது. அவர் ஜோதி வடிவானவர் என அனைவருக்கும் போதித்தவர். இவர் கடலூர் மாவட்டத்தில் உள்ள வடலூரில் அவதரித்தார். வள்ளலார், இறைவனுடன் ஜோதியாக கலந்த தினம் தைப்பூச திருநாள்.
இதன் நினைவாக மாதந்தோறும் வள்ளலார் நிறுவிய வடலூர் தர்ம ஞான சபையில் பூசம் நட்சத்திரத்தன்று 7 திரைகள் விலக்கி ஜோதி தரிசனம் காட்டப்படும். இருந்தாலும் வள்ளலார் முக்தி அடைந்த தைப்பூச தினம் என்பதால், அன்றைய தினம் நடக்கும் ஜோதி தரிசனமே மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த நாளிலேயே உலகின் பல பகுதிகளில் இருந்தும் வள்ளலாரின் கொள்கைகளை பின்பற்றும் பலரும் வடலூர் தலத்தில் கூடுகின்றனர். அன்றைய தினம் நாள் முழுவதும் அன்னதானம் நடந்து கொண்டே இருக்கும்.






















