Puducherry Power Shutdown: மக்களே உஷார்... 23ம் தேதி கரண்ட் வராது ... எந்தெந்த பகுதி தெரியுமா?
Puducherry Power Shutdown 23.04.2025: புதுச்சேரியில் 23ம் தேதி பல்வேறு இடங்களில் காலை 10.30 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது.

Puducherry Power shutdown : புதுச்சேரியில் இன்று 23.04.2025 பாரதி வீதி பகுதியில் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக நாளை மறுநாள் மின் நிறுத்தம் (காலை 10:30 மணி முதல் 1:00 மணி வரை) அறிவிக்கப்பட்டுள்ளது
புதுச்சேரியின் புதன்கிழமை (23.04.2025) அன்று மின் தடை
புதுச்சேரி மின் வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் நாளை மறுநாள் (23.04.2025) புதன்கிழமை அன்று பாரதி வீதி, மகாத்மா காந்தி வீதி, சின்ன வாய்க்கால், சவரிராயலு வீதி, செயிண்ட் தெரேஸ் வீதி, லப்போர்த் வீதி ஆகிய இடங்கள் மின்தடை செய்யப்படுகிறது. மேற்கண்ட இடங்களில் காலை 10.30 மணி முதல் மதியம் 1 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே பொதுமக்கள் முன்கூட்டியே அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள வேண்டும் எனவும் செல்போன் சார்ஜ் போட்டுக் கொள்ளவும் மேலும் குடிநீர் போன்றவற்றை முன்னெச்சரிக்காது சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும் என மின்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதேபோல், இன்றைய தினம் (21.04.2025) திங்கள்கிழமை மரப்பாலம் துணை மின் நிலையத்தில் இருந்து விநியோகம் பெறும் எல்லையம்மன் கோவில் தோப்பு, காளியம்மன் கோவில் தோப்பு, ஜெயராம் செட்டியார் தோட்டம் (4,5 குறுக்குத்தெரு), தாமரை நகர், ராஜராஜன் வீதி, முருகசாமி நகர், ஈஸ்வரன் கோவில் தோப்பு, இந்திரா நகர், பாரதிதாசன் வீதி, பிரான்சுவா தோப்பு, ஏழை பிள்ளையார் தோப்பு ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்பட்டது.

