Watch video: சாலையோரத்தில் கவிழ்ந்து படுத்துக்கொண்டு ஜாலியாக மது அருந்தும் டிப்டாப் ஆசாமி - வைரல் வீடியோ..!
புதுச்சேரி மிஷன் வீதியில் கடை முன் கவிழ்ந்து படுத்து கொண்டு கண்ணாடி டம்ளரில் மதுவை ஊற்றி சைடிஷ் வைத்துக்கொண்டு ஜாலியாக மது அருந்திய டிப்டாப் ஆசாமி.
![Watch video: சாலையோரத்தில் கவிழ்ந்து படுத்துக்கொண்டு ஜாலியாக மது அருந்தும் டிப்டாப் ஆசாமி - வைரல் வீடியோ..! pudhucherry man lying front of shop on Puducherry's Mission Road poured wine into a glass tumbler and drank it happily with a side dish videos goes viral Watch video: சாலையோரத்தில் கவிழ்ந்து படுத்துக்கொண்டு ஜாலியாக மது அருந்தும் டிப்டாப் ஆசாமி - வைரல் வீடியோ..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/11/925b02b6426394e177ee6f53526129461657549120_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை என்றால் மிக கொண்டாட்டம் தான். வெளிமாநில சுற்றுலா பயணிகள் புதுவையில் அதிகமாக குவிவது வழக்கம். புதுவையில் கிடைக்கும் விதவிதமான மதுவை வாங்கி அருந்துவர். இதுபோல மதுவுக்கு ஆசைப்பட்டு ஒருவர் வெள்ளை சட்டை, வெள்ளை பேண்ட், பெல்ட், தொப்பி, கண்ணாடி அணிந்து வந்திருந்தார். பரபரப்பான மிஷன் வீதியில் காலணி தைக்கும் கடை விடுமுறை என்பதால் மூடி இருந்தது. அதன் முன் பிளாஸ்டிக் விரிப்பை விரித்து, கவிழ்ந்து படுத்து கொண்டு கண்ணாடி டம்ளரில் மதுவை ஊற்றினார். சைடிஷ் வைத்துக் கொண்டு ஜாலியாக படுத்துக் கொண்டே மது அருந்தினார். பரபரப்பாக காணப்படும் வீதியை பற்றி கவலையின்றி தனக்குள்ளே பேசி கொண்டு அவர் மது குடிப்பதை அவ்வழியே சென்ற ஒருவர் வீடியோ எடுத்து பதிவிட்ட காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
#புதுச்சேரி மிஷன் வீதியில் கடை முன் பிளாஸ்டிக் விரிப்பை விரித்து, கவிழ்ந்து படுத்து கொண்டு கண்ணாடி டம்ளரில் மதுவை ஊற்றி சைடிஷ் வைத்துக்கொண்டு ஜாலியாக படுத்துக் கொண்டு மது அருந்திய டிப்டாப் ஆசாமி #puducherry pic.twitter.com/MI5txjTVga
— SIVARANJITH (@Sivaranjithsiva) July 11, 2022
மேலும், வார இறுதிநாளான நேற்றுமுன்தினம் புதுச்சேரி ஒயிட் டவுன் மற்றும் புதுவை நகர பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. முக்கிய சுற்றுலா தலங்களான கடற்கரை, பாரதி பூங்கா, நோணாங்குப்பம் படகு குழாம், மணக்குள விநாயகர் கோவில், அரவிந்தர் ஆசிரமம், பாண்டி மெரினா கடற்கரை உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. பகலில் வெயிலின் தாக்கம் அதிகம் இருந்ததால் மாலையில் காற்று வாங்க சுற்றுலா பயணிகளுடன் உள்ளூர் மக்களும் கடற்கரையில் அலைஅலையாய் மக்கள் திரண்டனர். பழைய துறைமுகம் முதல் தலைமை செயலகம் வரை உருவாகியுள்ள செயற்கை மணல் பரப்பில் பொதுமக்கள் கடலில் இறங்கி விளையாடி மகிழ்ந்தனர்.
புதுச்சேரி நகர பகுதியில் நேற்று ஏராளமான வெளி மாநில பதிவெண் கொண்ட கார்கள் உலா வந்தன. இதனால் முக்கிய சாலை சந்திப்புகளில் அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. புதுச்சேரி வந்த சுற்றுலா பயணிகள் நகரின் ஒயிட் டவுன் பகுதிகளில் உள்ள கட்டிடங்களில் வரைந்துள்ள ஓவியங்களின் முன்பு நின்று செல்பி எடுத்து மகிழ்ந்தனர். புதுச்சேரியில் காந்திவீதி சண்டே மார்க்கெட்டில் காலை முதல் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. அவர்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை பேரம் பேசி வாங்கி சென்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)