தென் மாவட்டங்களுக்கு செல்லும் மக்கள்! விழுப்புரம், விக்கிரவாண்டியில் நீண்ட வரிசையில் நிற்கும் வாகனங்கள்!
தொடர் விடுமுறை முன்னிட்டு சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் மக்கள் - நீண்ட வரிசையில் அணிவகுத்து நிற்கும் வாகனகள்.
விழுப்புரம்: கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு அதிகளவிலானோர் கார்களில் பயணிப்பதால் விழுப்புரம் ஜானகிபுரத்தில் புதியதாக அமைக்கப்பட்டு வரும் மேம்பாலம் அருகே வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால் வாகனங்கள் அணிவகுத்து செல்கின்றன.
விடுமுறையின் காரணமாக சென்னையிலிருந்து கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட சென்னையிலிருந்து தென்மாவட்டங்களில் உள்ள சொந்த கிராமங்களுக்கு செல்ல அதிகமானோர் காரில் பயணித்து செல்கின்றனர். இதன் காரணமாக விழுப்புரம் அருகேயுள்ள ஜானகிபுரம் தேசிய நெடுஞ்சாலையில் புதியதாக கட்டப்பட்டு வரும் மேம்பால பணிகள் நடைபெறும் இடத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. அதிகமாக கார்களில் திருச்சி, மதுரை, கன்னியாகுமரி போன்ற பகுதிகளுக்கு செல்வதால் மேம்பால பணிகள் நடைபெறும் இடத்தில் வாகனங்கள் அணிவகுத்து செல்கின்றன. போக்குவரத்து நெரிசலையடுத்து மேம்பால பணிகள் முடிவடைந்த ஒருபகுதியின் வழியாக வாகனங்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றன. ஒரே நேரத்தில் விழுப்புரத்திற்கு செல்லக்கூடிய வாகனங்கள் இவ்வழியாக பயணிப்பதால் போக்குவரத்து போலீசார் நெரிசலை கட்டுப்படுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.