திடீரென ஆட்சியர் அலுவலகத்தில் குவிந்த பொதுமக்கள்... விழி பிதுங்கி நின்ற போலீஸ்
விழுப்புரம் அருகே வருவாய் எல்லை பிறப்பதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக கிராம மக்கள் திடீரென விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்டவளாக நுழைவாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டம்.
விழுப்புரம் : விழுப்புரம் அருகேயுள்ள அரியலூர் திருக்கை கிராமத்தின் வருவாய் எல்லைபகுதிகளை டட் நகருடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் நேற்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஆலுவலக வளாகத்தை முற்றுகையிட்டு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் அருகேயுள்ள அரியலூர் திருக்கை ஊராட்சியிலிருந்து டட் நகர் தனி ஊராட்சியாக கடந்த 30 வருடங்களுக்கு முன் பிரித்தனர். ஊராட்சி பிரிக்கப்பட்டாலும் ஊராட்சியின் எல்லை பகுதிகள் பிரிக்கப்படாமல் இருந்து வருவதால் மாவட்ட வருவாய் துறை சார்பில் இரு ஊராட்சிகளின் எல்லை பகுதிகளை பிரிக்கும் பணியில் வருவாய் துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். ஊராட்சி எல்லை பகுதிகளை பிரித்தபோது அரியலூர் திருக்கையை இருப்பிடமாக கொண்ட கிராம மக்களின் 700 ஏக்கர் நிலம் ட்ட நகர் ஊராட்சிக்கு செல்வதால் தங்களது பகுதிகளை டட் நகருடன் இணைக்க கூடாதென வலியுறுத்தி அரியலூர் திருக்கை பகுதி கிராம மக்கள் 200 க்கும் மேற்பட்டோர் இன்று( நேற்று) விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் முற்றுகையிட்டு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து போலீசார் முற்றுகையிட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து கலைந்து சென்றனர். முற்றுகை போராட்டத்தின் நடுவே மூதாட்டி ஒருவர் பனங்கிழங்கை விற்பனை செய்ததை போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள் போராட தான் நாங்க வந்தோம். ஆனால் வாய்க்கு வேலை கொடுக்கனும் என்றார் போல் பணங்கிழங்கை வாங்கி உட்கொண்டனர். மேலும் மாவட்ட ஆட்சியர் பழனி இரு கிராம மக்களிடையே எல்லை பிரிப்பது தொடர்பாக டிசம்பர் முதல் வாரத்தில் கூட்டம் நடத்தபடுமென தெரிவித்துள்ளார்.
Mens Day 2024 Wishes: சர்வதேச ஆண்கள் தினம்; அன்பிற்குரிய ஆண்களுக்கு வாழ்த்து அனுப்ப மெசேஜ்!
பொதுமக்களின் குறைதீர்வு நாள்
தமிழ்நாடு அரசு, பொது மக்களின் குறைகளைத் தீர்ப்பதில் பல்வேறு நடைமுறைகளை செயல்படுத்தி வருகின்றது. பொதுமக்களின் குறைதீர்வு நடைமுறையை செம்மைப்படுத்த ஏதுவாக பல்வேறு கண்காணிப்பு மற்றும் தொடர் நடவடிக்கைகள் மூலமாகவும், பொது மக்களிடமிருந்து பெறப்படும் கருத்துக்களின் அடிப்படையிலும் தமிழ்நாடு அரசு குறைதீர்வு நடைமுறைகளை முன்னுரிமை அளித்து செயல்படுத்தி வருகின்றது. மேலும், குறைதீர்வு மனுக்கள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் பன்முனை யுக்திகளையும், அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து செயல்படுத்துவதால், அரசின் சேவைகள் மிக எளிதாக விரைவில் மக்களைச் சென்றடைய வழிவகை செய்யப்படுகிறது.
மக்கள் குறைதீர்க்கும் நாள்
ஒவ்வொரு திங்கட்கிழமையும் அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்கள் / வருவாய்க் கோட்ட அலுவலர்கள் மற்றும் வட்டாட்சியர்கள், தங்களின் தலைமை இடங்களில் இருந்து பொது மக்களிடம் மனுக்களைப் பெற்று, அவர்களின் குறைகளை தீர்க்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இத்திட்டத்தின் கீழ், மனுக்கள் பெறப்பட்ட நாள், தீர்வு செய்யப்பட்ட விவரம் மற்றும் நிலுவையில் உள்ள மனுக்கள் விவரம். இதற்கென உருவாக்கப்பட்ட ஒரு மென்பொருள் மூலம் பதிவு செய்யப்படுகின்றன. இதன் மூலம், மனுக்களின் தற்போதைய நிலைமையை இணையதளம் மூலம் பொதுமக்கள் அறிந்து கொள்ளலாம்.
இந்த திங்கட்கிழமை மனுவை பொதுமக்கள் அவர்கள் ஊரில் உள்ள பிரச்சனைகளை மனுவாக எடுத்து மாவட்ட ஆட்சியரிடம் அளித்து அதற்கான தீர்வை பெறுகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் அதிக அளவில் குடிநீர் பிரச்சனை அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை முன் வைத்து திங்கட்கிழமை மனு குவிந்து வருவது குறிப்பிடத்தக்கது.