மேலும் அறிய
Advertisement
Cuddalore: திருமணமாகி 2 வாரத்தில் மின்சாரம் தாக்கி புது மாப்பிள்ளை உயிரிழப்பு - கடலூர் அருகே சோகம்
மின்சாரம் தாக்கி புது மாப்பிள்ளை பரிதாபமாக உயிர் இழந்த சம்பவம் கடலூரில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் திருமணமாகி இரண்டே வாரத்தில் மின்சாரம் தாக்கி புது மாப்பிள்ளை பரிதாபமாக உயிர் இழந்த சம்பவம் கடலூரில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் அருகே உள்ள கெங்கனான்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் என்பவரது மகன் விமல் ராஜ். இவர் கடலூர் மஞ்சக்குப்பம் பகுதியில் உள்ள ஜியோ பைபர் நெட் கனெக்சன் என்ற கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் விமல்ராஜுக்கும் சிதம்பரத்தைச் சேர்ந்த பெண்ணுக்கும் கடந்த ஜூன் மாதம் ஒன்றாம் தேதி திருமணம் ஆனது. இந்த நிலையில், நேற்று காலை வீட்டில் வேலைக்கு சென்று வருவதாக சென்ற விமல் ராஜ் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் இந்திரா காம்ப்ளக்ஸில் உள்ள மாடியில் கேபிள் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் விமல்ராஜ் மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தார்.
திருமணம் ஆகி 13 நாளில் இளைஞர் உயிரிழந்த சம்பவம் விமல்ராஜ் குடும்பத்தை மட்டும் இன்றி கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
சென்னை
தமிழ்நாடு
ஆன்மிகம்
க்ரைம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion