மேலும் அறிய
Advertisement
கெடிலம் ஆற்றில் குப்பையை எரிப்பதால் கடும் புகை மூட்டம் - கடலூர் மாநகராட்சிக்கு எதிராக போராட்டம்
மாநகராட்சி சார்பில் குப்பை கொட்டுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட் உள்ள நிலையில் ,இது போல் ஆற்றின் கரையோரம் குப்பைகளை எரிப்பதால் வாகன ஓட்டிகளும் மக்களும் கடுமையான சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்
கடலூர் நகராட்சி பகுதிகளில் உள்ள 45 பகுதிகளில் நகராட்சி ஊழியர்கள் மூலம் பெறப்படும் குப்பைகள் கொட்ட முறையான இடம் இல்லாத காரணத்தினால் குப்பைகளை தொடர்ந்து கெடிலம் ஆற்றின் கரையோரம் கொட்டி வருகின்றனர். இது தற்பொழுது கடலூர் மாநகராட்சி ஆன பிறகும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டு வருகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டும் என பல்வேறு அமைப்பினரும் பொதுமக்களும் பலமுறை கோரிக்கை வைத்தும் குப்பைகள் அங்கேயே கொட்டப்பட்டு வந்தன.
இந்த நிலையில் இன்று காலை கெடிலம் நதி கரையோரம் கொட்டப்பட்ட குப்பையில் மர்ம நபர்கள் திடீரென தீ வைத்து கொளுத்தியதால், கடலூர் அண்ணா பாலத்தில் இருந்து கம்மியம்பேட்டை செல்லும் சாலையில் முழுமையாக புகை மூட்டமாக காணப்பட்டது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகினர். மேலும் இதனால் புகையை கடந்து வந்த இரண்டு பேர் நிலைதடுமாறி கீழே விழுந்தனர்.
ஏற்கனவே மாநகராட்சி சார்பில் குப்பை கொட்டுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட் உள்ள நிலையில் ,இது போல் ஆற்றின் கரையோரம் குப்பைகளை எரிப்பதால் வாகன ஓட்டிகளும் மக்களும் கடுமையான சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் கம்மியம்பேட்டை சாலையில் கெடிலம் ஆற்றின் அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் புகை செல்ல தொடங்கியதால் அங்கு உள்ள மக்களுக்கு மூச்சு திணறல் ஏறப்பட்டு வருகிறது எனவே குப்பைகளை ஆற்றின் கரையோம் கொட்ட வேண்டாம் மக்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.
இதற்கு இடையில் கெடிலம் ஆற்றில் குப்பைகளை கொட்டி எரிக்கும் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.பின்னர் பெரும் அளவு அசம்பாவிதம் நடக்கும் முன்னர் மாநகராட்சி நிர்வாகத்திடம் தகவல் தெரிவிக்கப்பட்டது சிறிது நேரம் கழித்து வந்த மாநகராட்சி நிர்வாகிகள் எரிக்கப்பட்ட குப்பைகளை தீயணைப்பை வாகனத்தை கொண்டு தீயை அணைக்காமல் மக்களுக்கு செல்லும் குடிநீர் வாகனத்தை கொண்டு குடிநீரை வைத்து தீயிணை அனைத்தனர். மாநகராட்சியின் குடிநீர் வாகனம் அணைத்துக் கொண்டிருக்கும் பொழுது பாதி நேரத்தில் வந்த தீயணைப்பு துறையினர் இணைந்து தீயை அணைத்தனர்.
மக்களுக்கு கொண்டு செல்லப்படும் குடிநீரை மாநகராட்சி நிர்வாகம் இது போன்ற நிகழ்வுகள் பயன்படுத்துவது மிகுந்த வேதனையை உள்ளாக்குகிறது என சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்து உள்ளனர்.எனவே இனிவரும் காலங்களில் கெடிலம் ஆற்றில் குப்பைகளை கொட்டுவதை தடுத்து நிறுத்தவும், கொட்டப்பட்ட குப்பைகளை உடனடியாக இந்த பகுதியை விட்டு அகற்ற வேண்டும் எனவும் கடலூர் பொதுமக்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
உலகம்
கிரிக்கெட்
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion