கழுவேலி ஏரி தூர்வாருதல் திட்டம் வனத்துறையின் அனுமதி பெற்று விரைவில் நிறைவேற்றப்படும் - எம்எல்ஏ அன்பழகன்
அழகன்குப்பன் கழுவேலி கீழ்முகத்துவாரத்தில் ரூ.150.00 கோடி மதிப்பிட்டில் மீன்பிடி துறைமுகம் அமைத்தல் தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி வழங்கிய பிறகு தொடங்கப்படும்.
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை மதிப்பீட்டுக்குழுத் தலைவர்/ கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் தலைமையில், விழுப்புரம் மாவட்ட அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, பொதுப்பணித்துறை, நீர்வளத்துறை, வணிகவரித்துறை, பதிவுத்துறை, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, பள்ளிக்கல்வித்துறை, சமூக நலத்துறை, தாட்கோ, நெடுஞ்சாலைத்துறை, மாவட்ட தொழில் மையம், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு
அலகு, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, மாவட்ட சிறுபான்மையினர் நலத்துறை போன்ற பல்வேறு துறைகளில் செயல்படுத்தப்பட்டு வரும் வளாச்சித் திட்டப்பணிகள் குறித்தும், முடிவுற்ற வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து விரிவாக துறை சார்ந்த அலுவலர்களுடன் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை மதிப்பீட்டுக்குழுத் தலைவர்/கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்கள்.
தொடர்ந்து, வருவாய்த்துறை சார்பில். 20 நரிக்குறவர் இன மக்களுக்கு சாதிச்சான்றிதழ்களும், மாவட்ட சிறுபான்மையினர் நலத்துறை சார்பில், தலா ரூ.5,268/- வீதம், 04 பயனாளிகளுக்கு ரூ.21,072 மதிப்பீட்டில் தையல் இயந்திரமும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில், தலா ரூ.5,268/- வீதம், 03 பயனாளிகளுக்கு ரூ.15,804 மதிப்பீட்டில் தையல் இயந்திரமும், ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில், தலா ரூ.6,690/- வீதம் 02 பயனாளிகளுக்கு ரூ.13,380/- மதிப்பீட்டில் தையல் இயந்திரமும், தலா ரூ.7,280/- வீதம் 03 பயனாளிகளுக்கு ரூ.21,840/- மதிப்பீட்டில் சலவைப்பெட்டி என மொத்தம் 32 பயனாளிகளுக்கு ரூ.72,096/- மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை மதிப்பீட்டுக்குழுத் தலைவர்/கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் அவர்கள் வழங்கினார்கள்.
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை மதிப்பீட்டுக்குழுத் தலைவர் அன்பழகன் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்,
கழுவேலி ஏரி தூர்வாருதல் ரூ.161.00 கோடி திட்டம் வனத்துறையின் அனுமதி பெற்று திட்டம் நிறைவேற்றப்படும். மலட்டாறு வாய்க்கால் தூர்வாருதல் ரூ.7.00 கோடி மதிப்பீட்டில் வனத்துறையின் அனுமதி பெற்று திட்டம் நிறைவேற்றப்படும். அழகன்குப்பன் கழுவேலி கீழ்முகத்துவாரத்தில் ரூ.150.00 கோடி மதிப்பிட்டில் மீன்பிடி துறைமுகம் அமைத்தல், தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி வழங்கிய பிறகு இந்த திட்டத்தினை செயல்படுத்த குழு பரிந்துரைக்கிறது.
திண்டிவனம் மருத்துவமனை ரூ.60.00 கோடி மதிப்பீட்டில் 400 படுக்கைகள் கொண்டு கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. குடிதண்ணீர் கூடுதலாக வழங்க கோரியுள்ளார்கள். அதை வழங்க குழு பரிந்துரை செய்கிறது. நெடிமொழியனூர் அணைக்கட்டு புதுப்பித்தல் பணிக்காக தோராய மதிப்பீடு ரூ.30.00 கோடி, தொண்டியாற்றின் குறுக்கே அமைந்துள்ள செண்டூர் அணைக்கட்டு புனரமைத்தல் பணிக்காக தோராய மதிப்பீடு ரூ.25.00 கோடி, திருக்கோவிலூர் அணைக்கட்டு புனரமைத்தல் அல்லது மறுகட்டுமான பணிக்காக உத்தேச மதிப்பீடு ரூ.52.00 கோடி, பெருவெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட தளவானூர் அணைக்கட்டினை மறுசீரமைப்பு செய்தல் ரூ.56.00 கோடி, பெருவெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மலட்டாற்றின் கரைகளை பலப்படுத்துதல் ரூ.65.00 கோடி, முத்தாம்பாளையம் ஏரியினை ஆழப்படுத்தி சுற்றுலாத்தளமாக மாற்ற கருத்துரு ரூ.5.20 கோடி, நந்தன் கால்வாய் Ls 12400 முதல் Ls 37880 கி.மீ வரை ஆண்டு பராமரிப்பு நிதி ரூ.20.12 இலட்சம், பனமலைப்பேட்டையின் கீழ், உள்ள 13 ஏரிகளுக்கு தண்ணீர் வழங்குவதற்கான உத்தேச மதிப்பீடு ரூ.6.00 கோடி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
செஞ்சி வட்டம், மேல்சித்தாமூர் கிராமத்தில் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை ஒழுங்குமுறை விற்பனையகம் ரூ.2.80 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது. ரூ.97.00 இலட்சத்தில் அணுகு சாலையும், 50 இலட்சம் மதிப்பீட்டில் சிறுபாலமும் கட்டித்தர உரிய நடவடிக்கைகளை எடுக்க குழு பரிந்துரை செய்கிறது என தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை மதிப்பீட்டுக்குழுத் தலைவர்/கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் அவர்கள் தெரிவித்தார்.