Pongal 2025: சமத்துவ பொங்கல் விழாவில் பறை இசை... Vibe ஆனா அமைச்சர் பொன்முடி
Pongal 2025: திண்டிவனம் அருகே சமத்துவ பொங்கல் விழாவில் பறை இசைக்கு நடனமாடிய அமைச்சர் பொன்முடி.

Pongal 2025 விழுப்புரம்: திண்டிவனம் அருகே சமத்துவ பொங்கல் விழாவில் பறை இசைக்கு நடனமாடி அமைச்சர் பொன்முடி மகிழ்ந்தார்.
நாம் எத்தனையோ பண்டிகைகளை ஆண்டுதோறும் கொண்டாடினாலும், எந்த பண்டிகைக்கும் இல்லாத ஒரு சிறப்பு பொங்கல் பண்டிகைக்கு மட்டுமே உண்டு. ஜாதி, மத பேதங்களை மறந்து சமத்துவம் வளர்க்கும் ஒரே பண்டிகை பொங்கல்தான் என்றால் அது மிகையில்லை. காரணம், பிற பண்டிகைகள் ஒரு குறிப்பிட்ட கடவுளையோ, மதத்தையோ அல்லது மத குருவையோ மையமாக கொண்டதாக இருக்கும்.
ஆனால், உழைப்பையும், இயற்கையையும் வழிபடுவதை மையமாக வைத்து கொண்டாடப்படும் ஒரே பண்டிகை பொங்கல் பண்டிகை மட்டும்தானே, உழைப்பை போற்றுவதற்கும், இயற்கையை வணங்குவதற்கும் ஜாதி, மத பேதம் ஏது? இதனால்தான் வெவ்வேறு பெயர்களில் வெவ்வேறு தேதிகளில் கொண்டாடப்பட்டாலும், தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் அவ்வளவு ஏன், உலகம் முழுவதுமே கொண்டாடப்படுகிறது இந்த பொங்கல் பண்டிகை.
சமத்துவ பொங்கல் - நடனம் ஆடிய அமைச்சர் பொன்முடி
இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த வேம்பூண்டி கிராமத்தில் பெலாக்குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் பூங்கா பாக்யராஜ் ஏற்பாட்டில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட வனத்துறை அமைச்சர் பொன்முடி சமத்துவ விழா பொங்கல் கொண்டாடினார். அதனைத் தொடர்ந்து பறை இசை கச்சேரி வைக்கப்பட்டது அப்பொழுது அங்கு வந்த அமைச்சர் பொன்முடி இசைக்கு ஏற்றவாறு அங்கிருந்த பெண்களுடன் நடனம் ஆடி மகிழ்ந்தார். அதனைத் தொடர்ந்து அந்த பெலாக்குப்பம் ஊராட்சி மன்ற தலைவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது அந்த பெண் குழந்தைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் சகோதரி தமிழரசி பெயரை சூட்டினார். இது எங்கள் குடும்ப பெயர் அதனால் இந்த குழந்தைக்கு பெயர் சூட்டினேன் என கூறினார். இந்த பொங்கல் நிகழ்ச்சியில் மாவட்ட பொறுப்பாளர் டாக்டர் சேகர் மற்றும் மயிலம் சேர்மன் யோகஸ்ரீ மணிமாறன் ஆகியோர் நிகழ்ச்சியை புறக்கணித்தனர். இருவரும் முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தானின் ஆதரவாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சமத்துவ பொங்கல்
தமிழ் சமுதாயத்தில் கொண்டாடும் பொங்கல் பண்டிகை ஜாதி, மத இனவேறுபாடுகள் எதுவுமின்றி அனைவரும் இணைந்து கொண்டாடும் பொங்கல் பண்டிகை தான் சமத்துவ பொங்கல் என்று அழைக்கப்படுகிறது. தை முதல் நாள் பொங்கல் அன்று வீட்டில் அனைத்து உறவினர்களும் இணைந்து பொங்கல் வைப்பார்கள். ஆனால் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அலுவலகங்களில் பொங்கலுக்கு முதல் வாரமே அனைத்து மாணவர்களும் இணைந்து ஜாதி, மத வேறுபாடின்றி பொங்கல் வைத்து பொங்கலை கொண்டாடுவார்க
மாணவர்கள் அனைவரும் வண்ண உடைகளில் வந்து பொங்கலை கொண்டாடுவார்கள். பொங்கல் அன்று பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகத்தில் போட்டிகளும் நடைபெரும். அனைத்து மாணவர்களும் உங்கள் வைத்து போட்டிகளில் கலந்து கொண்டு மகிழ்ச்சியாக பொங்கலை கொண்டாடுவார்கள். சமத்துவ பொங்கல் என்பது அனைத்து மக்களும் ஒன்றாக இணைந்து ஜாதி, மத வேறுபாடின்றி பொங்கல் வைத்து பொங்கலை சூரிய பகவானுக்கு படைத்து பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதுதான் சமத்துவ பொங்கல் என்று சொல்கிறாரகள். ஜாதி, மத வேறுபாடின்றி கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகை சமத்துவ பொங்கல் பண்டிகையாகும். எனவே, நாமும் நம் வீட்டு உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் இணைந்து இந்த சமத்துவ பொங்கலை சிறப்பாக கொண்டாடி மகிழ்வோம்.





















