நீட் தேர்வால் கருகும் கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கனவு: எம்எல்ஏ லட்சுமணன் வேதனை
நீட் தேர்வால் கிராம புற மாணவர்களின் மருத்துவ கனவு கருகி போகிறது - எம் எல் ஏ லட்சுமணன்
![நீட் தேர்வால் கருகும் கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கனவு: எம்எல்ஏ லட்சுமணன் வேதனை Medical dream of TN rural students burnt by NEET exam: DMK MLA Lakshmanan TNN நீட் தேர்வால் கருகும் கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கனவு: எம்எல்ஏ லட்சுமணன் வேதனை](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/18/77d3dcfc6369f3be5d2b2343e2d081f91692348992762113_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
விழுப்புரம்: நீட் தேர்வு என்பது ஜனநாயகத்திற்கும் சமூகத்திற்கும் எதிரானது என்றும் கிராம புற மாணவர்களின் மருத்துவ கனவு கருகி போகும் நிலையில் உள்ளதாக விழுப்புரம் தொகுதி திமுக எம் எல்ஏ லட்சுமணன் வேதனை தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் தமிழகம் முழுவதுமுள்ள மாவட்ட தலைநகரங்களில் நீட் தேர்வினை ரத்து செய்யக்கோரி வருகின்ற 20 ஆம் தேதி திமுக மாணவர் அணி சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ளது. இந்நிலையில் உண்ணாவிரத போராட்டம் தொடர்பான விழுப்புரம் தெற்கு மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் மாவட்ட செயலாளரும், விக்கிரவாண்டி எம்எல்ஏவுமான புகழேந்தி, எம்எல்ஏ லட்சுமணன் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய விழுப்புரம் தொகுதி திமுக எம்எல்ஏ லட்சுமணன் நீட் தேர்வு என்பது ஜனநாயகத்திற்கும் சமூகத்திற்கு எதிரானது என்பதால் கிராம புற மாணவர்களின் மருத்துவ கனவு கருகி போகும் நிலையிலுள்ளதாக தெரிவித்தார்.
நீட் தேர்வில் நிரந்தர தீர்வு காண வேண்டுமென்பதால் தான் பல்வேறு கட்டங்களில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் போராட்டங்களில் ஈடுபட்டு வருவதாகவும் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி மற்றும் ஒன்றிய அரசுக்கு எதிராகவும் நீட்டில் நிரந்தர தீர்வு காணும் வகையில் திமுக சார்பில் நடைபெற உள்ள உண்ணாவிரத போராட்டம் வெற்றி அடைய வேண்டும் என கூறினார். மேலும் திமுக சார்பில் விழுப்புரத்தில் நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்தில் 5 ஆயிரம் பேர் கலந்து கொள்ள வேண்டுமெனவும் காலையிலையே அனைவரும் உணவருந்திவிட்டு வந்து உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டுமென நிர்வாகிகளுக்கு மாவட்ட செயலாளர் புகழேந்தி உத்தரவிட்டர்.
விழுப்புரம் மாவட்ட செய்திகள் :
கிராமங்கள் வளர்ச்சி பெற கடுமையாக உழைப்பவர் தான் முதல்வர் ஸ்டாலின் - எம்எல்ஏ லட்சுமணன்
துர்நாற்றத்தில் மூழ்கி இருக்கும் விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம்; கண்டுகொள்ளாத அதிகாரிகள்
புதுச்சேரி,விழுப்புரம், கள்ளகுறிச்சி பகுதியில் உள்ள பொதுமக்களின் பிரச்சனைகளை தெரிவிக்க +918508008569 என்கின்ற எண்ணில் தொடர்புகொண்டு தெரிவிக்கலாம்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)