மேலும் அறிய

இரவு முழுவதும் இடி, மின்னலுடன் கூடிய கனமழை... தாக்குபிடிக்குமா விழுப்புரம்...?

விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இரவு முழுவதும் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது...

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம், மரக்காணம் மற்றும் அதனை சுற்றியுள்ள ஓலக்கூர், மயிலம், கூட்டேரிப்பட்டு, கிளியனூர், வெளிமேடுபேட்டை, மரக்காணம், முருக்கேரி, பிரம்மதேசம் உள்ளிட்ட பகுதிகளில் இரவு முழுவதும் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. நேற்றைய தினம் விழுப்புரத்தில் மாலையில் இரண்டு மணி நேரம் பெய்த கனமழையில் விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் மழை நீர் குளம்போல் தேங்கியதால் பேருந்து பயணிகளும், ஓட்டுனர்களும் பாதிப்படைந்தனர். இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் சாலை விரிவாக்க பணிக்காக பல்வேறு இடங்களில் தொடண்டபட்டுள்ள பள்ளங்களில் மழை நீர் தேங்கியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் பயணம் செய்து வருகின்றனர்.

காற்றழுத்த தாழ்வு

நேற்று உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய மேற்கு மத்திய வங்கக்கடலில் வடகிழக்கு திசையில் நகர்ந்து இன்று மே 23, 2024 மேற்கு மத்திய மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ளது.

இது தொடர்ந்து வடகிழக்கு நோக்கி நகர்ந்து நாளை (மே 24 ஆம் தேதி) காலை வங்கக்கடலில் மத்திய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். இது வடகிழக்கு திசையில் நகர்ந்து மேலும் தீவிரமடைந்து 25 ஆம் தேதி மாலைக்குள் வடகிழக்கு மற்றும் வடமேற்கு வங்கக்கடலில் நிலைக்கொள்ளக்கூடும்.

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழ்நாட்டிற்கு பெரிய அளவு மழை இருக்காது என தனியார் வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக நெல்லை, குமரி, நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை முதல் மிக கன மழை பதிவாகி வருகிறது.

இடி மின்னலுடன் கூடிய மழை 

அந்த வகையில்  , தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய  லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், இராமநாதபுரம், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

அதேபோல் நாளை, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய  லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.  நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என கணிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு: (செண்டிமீட்டரில்)

வேப்பூர் (கடலூர் மாவட்டம்) 20, காட்டுமயிலூர் (கடலூர் மாவட்டம்) 18, விழுப்புரம் (விழுப்புரம் மாவட்டம்) 17, மைலாடி (கன்னியாகுமரி மாவட்டம்) 14, லக்கூர் (கடலூர் மாவட்டம்), தொழுதூர் (கடலூர் மாவட்டம்) தலா 13,  குண்டேரிப்பள்ளம் (ஈரோடு மாவட்டம்), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோவை மாவட்டம்) 12, தம்மம்பட்டி (சேலம் மாவட்டம்) தலா 12,  வால்பாறை பிஏபி (கோயம்புத்தூர் மாவட்டம்), கொடநாடு (நீலகிரி மாவட்டம்) தலா 11,  அவினாசி (திருப்பூர் மாவட்டம்), கெத்தை (நீலகிரி மாவட்டம்), கோபிசெட்டிபாளையம் (ஈரோடு மாவட்டம்) தலா 10,  பில்லிமலை எஸ்டேட் (நீலகிரி மாவட்டம்), குந்தா பாலம் (நீலகிரி மாவட்டம்), வேடசந்தூர் (திண்டுக்கல் மாவட்டம்), புகையிலை நிலையம் (விடிஆர்) (திண்டுக்கல் மாவட்டம்) தலா 9 செ.மீ மழை பதிவாகியுள்ளது.   

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

PM Modi: தொடங்கியது மக்களவை முதல் கூட்டத்தொடர்.. எம்.பி.யாக பதவியேற்றார் பிரதமர் மோடி..!
தொடங்கியது மக்களவை முதல் கூட்டத்தொடர்.. எம்.பி.யாக பதவியேற்றார் பிரதமர் மோடி..!
AIADMK: கள்ளக்குறிச்சி சம்பவம் திமுக அரசின் அலட்சியம்.. கண்டன ஆர்ப்பாட்டத்தில் இபிஎஸ் குற்றச்சாட்டு
கள்ளக்குறிச்சி சம்பவம் திமுக அரசின் அலட்சியம்.. கண்டன ஆர்ப்பாட்டத்தில் இபிஎஸ் குற்றச்சாட்டு
Breaking News LIVE: இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம்
Breaking News LIVE: இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம்
Trichy Surya Siva: பாஜக வேண்டாம், வேண்டவே வேண்டாம்.. சந்தானம் காமெடியை பகிர்ந்த சூர்யா சிவா
பாஜக வேண்டாம், வேண்டவே வேண்டாம்.. சந்தானம் காமெடியை பகிர்ந்த சூர்யா சிவா
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Accident News :  BIKE-ல் மோதிய பேருந்து..தூக்கி வீசப்பட்ட இளைஞர் பதற வைக்கும் CCTV காட்சிNEET Exam  : நீட் மறு தேர்வு..எழுத வராத மாணவர்கள்! நடந்தது என்ன?Amudha IAS Transfer? : இப்படி பண்ணிட்டிங்களே. அமுதா IAS Transfer? அப்செட்டில் ஸ்டாலின்!Trichy Surya |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi: தொடங்கியது மக்களவை முதல் கூட்டத்தொடர்.. எம்.பி.யாக பதவியேற்றார் பிரதமர் மோடி..!
தொடங்கியது மக்களவை முதல் கூட்டத்தொடர்.. எம்.பி.யாக பதவியேற்றார் பிரதமர் மோடி..!
AIADMK: கள்ளக்குறிச்சி சம்பவம் திமுக அரசின் அலட்சியம்.. கண்டன ஆர்ப்பாட்டத்தில் இபிஎஸ் குற்றச்சாட்டு
கள்ளக்குறிச்சி சம்பவம் திமுக அரசின் அலட்சியம்.. கண்டன ஆர்ப்பாட்டத்தில் இபிஎஸ் குற்றச்சாட்டு
Breaking News LIVE: இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம்
Breaking News LIVE: இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம்
Trichy Surya Siva: பாஜக வேண்டாம், வேண்டவே வேண்டாம்.. சந்தானம் காமெடியை பகிர்ந்த சூர்யா சிவா
பாஜக வேண்டாம், வேண்டவே வேண்டாம்.. சந்தானம் காமெடியை பகிர்ந்த சூர்யா சிவா
Salem Leopard: சேலத்தில் உலா வரும் சிறுத்தை - தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் வனத்துறை..
சேலத்தில் உலா வரும் சிறுத்தை - தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் வனத்துறை..
Lionel Messi Birthday: உயரமே கால்பந்துக்கு தடை... பயிற்சியாளரிடம் கெஞ்சிய பாட்டி.. மெஸ்ஸி சந்தித்த அவமானமும்.. வெகுமானமும்!
உயரமே கால்பந்துக்கு தடை... பயிற்சியாளரிடம் கெஞ்சிய பாட்டி.. மெஸ்ஸி சந்தித்த அவமானமும்.. வெகுமானமும்!
Shocking Video: பெண் டோல் கேட் ஊழியரை இடித்த கார்.. தடுக்க முயன்ற நபர் கொலை.. அதிர்ச்சி வீடியோ!
பெண் டோல் கேட் ஊழியரை இடித்த கார்.. தடுக்க முயன்ற நபர் கொலை.. அதிர்ச்சி வீடியோ!
Latest Gold Silver Rate: வாரத்தின் முதல் நாள்.. தங்கம் விலையில் ஏற்றம்.. சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?
வாரத்தின் முதல் நாள்.. தங்கம் விலையில் ஏற்றம்.. சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?
Embed widget