மேலும் அறிய
திமுக அரசின் உள்ளாட்சி அமைப்பு முழு தோல்வி அடைந்துவிட்டது - ஜி.கே.வாசன்
மத்திய அரசு சரியான நேரத்தில் நிதி அளிக்கும் என்றும் நிதி செலவிடும்போதும் கேட்கும்போது தமிழக அரசு வெளிப்படை தன்மையுடன் இருக்க வேண்டும்.

ஜி.கே.வாசன் ( தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர்)
Source : ABP NADU
விழுப்புரம்: தோற்று, துவண்டு போன அரசாங்கமாக தமிழக அரசு செயல்படுவதாகவும் நிவாரண நிதி வழங்குவதில் அரசியல் கலப்பு இருக்க கூடாது என தமிழ மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
தோற்று, துவண்டுபோன அரசாங்கமாக செயல்படுகிறது
விழுப்புரம் அருகேயுள்ள அய்யூர் அகரத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் ஃபெஞ்சல் புயலினால் பாதிக்கப்பட்ட அய்யூர் அகரம் பகுதி மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஜி.கே. வாசன் ஃபெஞ்சல் புயலினால் விழுப்புரம் கடலூர், கள்ளக்குறிச்சி போன்ற மாவட்டங்களில் அதிகளவு பாதிப்பு ஏற்படுத்தியுள்ளதாகவும் தோற்று, துவண்டு போன அரசாங்கமாக செயல்படுவதாக குற்றஞ்சாட்டினார்.
திமுக அரசின் உள்ளாட்சி அமைப்பு முழு தோல்வி அடைந்தது
தமிழக அரசு மழையை முழுமையாக கண்காணித்து ஏரி குளம் நிரம்புவதை கவனித்திருக்க வேண்டும் என்றும்
தமிழக அரசின் நிர்வாக மெத்தனபோக்கால் அனை திறக்கப்பட்டு ஏரிகளில் உடைப்பு ஏற்பட்டுள்ளதாகவும் திமுக அரசின் உள்ளாட்சி அமைப்பு முழு தோல்வி அடைந்து, நகராட்சி உள்ளாட்சி பேரூராட்சி மாநகராட்சி போன்றவைகள் பணியை சரியாக செய்யாததால் தான் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
நிதி செலவிடும் போதும் கேட்கும் போது தமிழக அரசு வெளிபடை தன்மையுடன் இருக்க வெண்டும்
பல இடங்களுக்கு வெள்ள தண்ணீரால் அதிகாரிகள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு அரிசி தண்ணீர் உணவு வழங்கப்படவில்லை என்றும் பாதிப்பு ஏற்பட்ட பிறகு எதிர்கட்சிகளை உதாசீனப்படுத்தி எல்லாம் செய்துவிட்டதாக தமிழக அரசு கூறுவதாகவும்,தமிழக அரசு முதல்நிலை பணிகளை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சரியாக செய்ய வேண்டும் மத்திய அரசு சரியான நேரத்தில் நிதி அளிக்கும் என்றும் நிதி செலவிடும் போதும் கேட்கும் போது தமிழக அரசு வெளிப்படை தன்மையுடன் இருக்க வெண்டும் என வலியுறுத்தினர்.
உரிய நேரத்தில் மத்திய அரசு பாதிப்பிறகான நிவாரணத்தை தமிழகத்திற்கு வழங்கும் என்றும் என்டிஆர்எப் மூலம் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அவர்கள் செய்த பணி அளப்பறியது என கூறினார். சுத்தமான குடிநீரை வழங்க வேண்டும் அரசு எதையும் மறைத்து விடலாம் என்று எண்ண வேண்டாம் குடிநீரில் கழிவுநீர் கலந்து பருகியவர்கள் உயிரிழந்த சம்பவம் வேதனைக்குரியது என்றும் அரசு நிவாரண நிதியை கூடுதலாக வழங்க வேண்டும் நிவாரண நிதி வழங்குவதில் அரசியல் கலப்பு இருக்க கூடாது நிவாரணம் வழங்குவதில் அரசியல் கலப்பு இருப்பதாக மக்களுக்கு சந்தேகம் எழுவதாக தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு முறையாக கணக்கெடுத்து நிவாரணம் வழங்க வேண்டும் விவசாயிகளின் துயர் நீக்க சரியாக கணக்கெடுத்து வழங்க வேண்டும் என்றும் கால்வாய், ஓடைகள் முறையாக பராமரிக்க படாததால் பாதிப்பு ஏற்படுவதாகவும், பாதிப்பிற்கு ஏற்றவாறு நிவாரண தொகை இல்லை, மத்திய அரசு மான்றான் தாய் மனப்பான்மை இல்லாம பார்பதால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்ய ஆறு பேர் கொண்ட குழு தமிழகத்திற்கு வருகை புரிவதால் மத்திய அரசு உதவிடும் என கூறியுள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement


470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement