மேலும் அறிய

ஓராயிரம் கருணாநிதிகள் வந்தாலும் அதிமுகவை ஆட்டவோ அழிக்கவோ முடியாது - சி.வி.சண்முகம் பேச்சு

லஞ்ச ஒழிப்பு துறையை வைத்து அதிமுக வை மிரட்டி வருகின்றனர் : மீண்டும் அதிமுக அம்மா ஆட்சி கண்டிப்பா வரும்-சிவி சண்முகம்

திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து கொலை, கொள்ளை, பாலியல் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும், மக்களை பற்றி சிந்திக்காத அரசாகவும்,  திமுக அமைச்சர்கள் அடிமைகளாக செயல்படுவதாக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் குற்றச்சாட்டியுள்ளார். மக்கள் பிரச்சனைகளில் கவனம் செலுத்தாமல் வாக்குறுதிகளை தந்து திமுக அரசு ஏமாற்றி வருவதாக கூறி விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் தலைமையில் இரண்டாயிரத்திற்கும்  மேற்பட்ட அதிமுகவினர் கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் பேசியதாவது:-

திமுக ஆட்சியில் பெண்கள் குழந்தைகள், முதியவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத அரசாக செயல்படுவதாகவும், திமுக ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து கொலை, கொள்ளை, அதிகரித்துள்ளதாகவும், மக்களை பற்றி சிந்திக்காத அரசாகவும்,  திமுக அமைச்சர்கள் அடிமைகளாக செயல்படுவதாக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் குற்றச்சாட்ட்டினார். அதனை தொடர்ந்து பேசிய சிவி சண்முகம்.

திமுக போன்று அதிமுக குடும்ப சொத்து இல்லை எனவும், அதிமுகவில் யார் வேண்டுமானாலும் தலைவராகவும், உயர் பதவிகளுக்கு வரமுடியும், திமுகவில் அது முடியாது எனவும் தமிழகத்தை ஸ்டாலின் ஆளவில்லை அவருக்கு பதிலாக ஸ்டாலினின் துணைவியார், உதயநிதி, அவரது மருமகன் ஆகிய மூவர் தான் ஆட்சி செய்கின்றனர்  என தெரிவித்தார். மேலும் ஸ்டாலின் தலைமையில் உள்ள அமைச்சரவை இல்லை குற்றவாளிகள் உள்ள அமைச்சரவை என்றும் லஞ்ச ஒழிப்பு துறையை கையில் வைத்து கொண்டு அதிமுகவை ஒழித்து விடலாம் என ஸ்டாலின் நினைப்பதாகவும், தமிழகத்தில் திமுக ஆட்சி நிரந்தரம் இல்லை ஆட்சி மாற்றம் ஏற்படும் போது ஆளும் அரசின் பேச்சைக்கேட்டு அதிகாரிகள் காழ்ப்புணர்ச்சியோடு நடந்து கொண்டால் அதற்கான பின் விளைவுகளை சந்திக்க நேரிடும் என கூறினார். தொடர்ந்து பேசிய முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம்,


ஓராயிரம் கருணாநிதிகள் வந்தாலும் அதிமுகவை ஆட்டவோ அழிக்கவோ முடியாது - சி.வி.சண்முகம் பேச்சு

கருணாநிதிக்கு 39 கோடி ரூபாய், மதுரையில் கருணாநிதி பெயரில் நூலகம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த நிறைவேற்றப்பட்ட  திட்டம் தான் அறிவிக்கப்பட்டு வருகிறது என்றார். பணம் ஒன்று தான் திமுக அரசின் தாரக மந்திரம், கமிஷன் தான் திமுகவின் இலக்கு, அதிகாரிகள் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை. கேட்கமாலே கொடுத்த அரசு அதிமுக அரசு, கேட்டாலும் எட்டி உதைக்கிற அரசு திமுக அரசு. அரசு துறை அதிகாரிகளை மிரட்டுகிறது, அச்சுறுத்துகீறது, தற்கொலைக்கு தூண்டுகிறது.

ஸ்டாலின் தலைமையிலான அரசு, லஞ்ச ஒழிப்பு துறை வெங்கடாசலம் அதிகாரியை  தற்கொலைக்கு தூண்டியுள்ளது. அவரர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும், சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றப்பட வேண்டும் என அதிமுக வலியுறுத்தி வருகிறது வட மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர் ஒருவர் வெங்கடாசலத்திற்கு 10 கோடி கேட்டு மிரட்டப்பட்டுள்ளார். திருநெல்வேலியில் நேர்மையாக ஒன்றிய பொறியாளர் திமுகவினரால் மிரட்டப்படுகிறார். அதற்கு பயந்து தற்கொலை செய்து கொண்டார். அதற்கு காரணமானவர்கள் மீது வழக்கு பதிவு செய்யபட்டுள்ளதா என கேள்வி எழுப்பினார். திமுக அரசு ஒரு கோழை அரசு. அதிகாரிகளை தற்கொலைக்கு தூண்டுவோர் மீது நடவடிக்கை ஏன் எடுக்கவில்லை என்றார். திமுக அரசில் செயல்பாடு இல்லை, இந்த அரசு பூஜ்ஜிய அரசு என்று சிவி சண்முகம் கட்டமாக பேசினார்.


ஓராயிரம் கருணாநிதிகள் வந்தாலும் அதிமுகவை ஆட்டவோ அழிக்கவோ முடியாது - சி.வி.சண்முகம் பேச்சு

பாஜக அண்ணாமலையை கைது செய்ய முடியுமா ?: திமுக அரசை விமர்சனம் செய்ததாக மாரிதாஸ்யை கைது செய்த திமுக அரசு, பாஜக அண்ணாமலையை கைது செய்ய முடியுமா என சவால் விடுத்தார். திமுக 7 மாத  கால ஆட்சியில் கொலை,கொள்ளை, கற்பழிப்பு, பாலியல் தொல்லை அதிகரித்துள்ளது. சிறுமிகள் முதல் இளம் பெண்கள் வரை பாலியல் தொல்லைகள் அதிகரித்து வருகிறது.

காவல்துறை ஏவல் துறைகளாக மாறியுள்ளது : காவல் துறை கோபாலப்புறத்து அடிமைகளாக மாற்றி வருகின்றனர்.  திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்பு 528 கொலைகள் நடந்துள்ளது. சட்டம் ஒழுங்கு சீரழிந்துள்ளது : வீட்டில் பெண்களை பாதுக்காப்புடன் பார்த்துக்கொள்ளுங்கள் : திமுக அரசில் பெண்களுக்கு பாதுக்காப்பு இல்லை, உயிருக்கும், கற்புக்கும் பாதுக்காப்பு இல்லை என்று கடுமையாக விமிர்சித்தார்.  விழுப்புரம் மாவட்டம் கொள்ளைக்காரர்களின் கூடாரமாக மாறியுள்ளது.

திமுக ஆட்சியில் நிர்வாகம் செய்ய ஸ்டாலினுக்கு தெரியவில்லை, எழுதி கொடுத்தால் படிக்க தெரியும், மேலும் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அமைச்சர்  பரோட்டா, டீ போட தான் அமைச்சராக்கப்பட்டார்களா, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்க்க கூட  அமைச்சர் பொன்முடி வரவில்லை ,திமுகவில்  அமைச்சர்கள் செயல்பட அனுமதியில்லை, பெயருக்கு தான் அமைச்சர்கள் உள்ளார்கள்.  திமுக அரசின் வசூல் ராஜா அமைச்சர் ஏ.வ .வேலு என்று சி.வி.சண்முகம் விமர்சனம் செய்தார். மேலும் தொடர்ந்து பேசியதாவது;  கோடிட்ட இடத்தில் நிறப்பு என்றது தான் அமைச்சர்களின் வேலை , இந்த அரசை வழி நடத்துவது ஸ்டாலின் மனைவி,மகன்,மருமகன் அகியோர் தான் ஆள்கின்றனர். திமுக அரசின் தற்போது அமைச்சர்கள், எம்.எல்.ஏ க்கள் அடிமைகள் என்றார். 7 மாதத்தில் தேர்தலில் கொடுக்கப்பட்ட 520 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதா,பெட்ரோல் விலையை ஜி.எஸ்.டி யில் கொண்டு வரப்படு, பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என்று சொன்னது செய்யப்படவில்லை, மத்திய அரசு விலை குறைத்த போதும், பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்காத ஒரே அரசு திமுக தான். அனைத்து விலைவாசி உயர்வுக்கு காரணம் திமுக அரசு தான் காரணம்.

டீசல், பெட்ரோல் வரியை குறைக்காமல் கொள்ளையடிக்கிற இந்த அரசு திமுக அரசு. கொரானாவால் இறந்தவர்களுக்கு மத்திய அரசு அறிவித்த 50 ஆயிரம் ரூபாய் கூட கொடுக்க முடியாத அரசு விடியாத அரசு எனவும் விமர்சனம் செத்தார். மழையால் பாதிக்கப்பட்ட  பகுதிகளை அமைச்சர் கடந்த அதிமுக  ஆட்சியில் மக்களுக்கு வெள்ளம், வறட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யப்பட்டது. அதிமுக மக்களுக்காக தொண்டர்களால் உருவாக்கப்பட்ட இயக்கம், மக்கள் துயரங்களை துடைக்க , பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம், உதவி வழங்குவதற்கு தயாராக இல்லை

ஓராயிரம் கருணாநிதிகள் வந்தாலும் அதிமுகவை ஆட்டவோ அழிக்கவோ முடியாது - சி.வி.சண்முகம் பேச்சு

மக்களை பற்றி சிந்திக்காத அரசு: அதிமுகவை அழிக்க தான் நினைக்கிறார் ஸ்டாலின், கருணாநிதி யையே பார்த்த கட்சி அதிமுக, எத்தனை வழக்குகள் போட்டாலும் சந்திக்க தயார், திமுக  ஒரு மன்னர் ஆட்சி, ஆனால் அதிமுக அப்படி இல்லை. ஒன்றரை கோடி தொண்டர்களும் தலைவர்கள், எம்.ஜி.ஆர் ,அம்மா கட்சி, தொண்டர்கள் கட்சி அதிமுக வழக்குகள் போட்டு மிரட்டிப் பார்க்க வேண்டாம் . ஸ்டாலின் தலைமையில் கொண்ட அமைச்சரவை அல்ல, 21 குற்றவாளிகள் கொண்ட அமைச்சரவை தான். லஞ்ச ஒழிப்பு துறையை வைத்து அதிமுக வை மிரட்டி வருகின்றனர்: மீண்டும் அதிமுக அம்மா ஆட்சி கண்டிப்பா வரும், இதே லஞ்ச ஒழிப்பு துறை திமுகவிற்கு வரும் ஆட்சி நிரந்தரமில்லை, காவல்துறைக்கு எச்சரிக்கை விடுக்கிறோம்.

தவறுகள் இருந்தால் நடவடிக்கை எடுங்கள், பழிவாங்கும் நடவடிக்கை, காழ்ப்புணர்ச்சி காரணமாக நடந்து கொள்ளவேண்டாம். நியாயமாக நடந்துக் கொள்ள வேண்டும், சோதனை என்ற பெயரில் அராஜகம் செய்வதாகவும், தொண்டர்கள் இருக்கும் வரை ஓராயிரம் கருணாநிதி வந்தாலும் அதிமுகவை ஆட்டவோ அசைக்கவோ முடியாது தொண்டர்கள் நிறைந்த இயக்கம் என்றும், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதிமுக அரசில் காப்பீடு திட்டத்தின் மூலம் உதவியது ஆனால் திமுக விவசாயிகளை வஞ்சிக்கிறது என சாடினார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
Syria War: கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
Embed widget