மேலும் அறிய

Diwali 2023: விழுப்புரம் மாவட்டத்தில் விதிகளை மீறி பட்டாசு வெடித்த 133 பேர் மீது வழக்குப்பதிவு

விதிகளை மீறி பட்டாசு வெடித்தற்காக விழுப்புரம் மாவட்டத்தில்  மட்டும் 133 பேர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பட்டாசு நேரம் விதிமீறல்

தமிழ்நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. உச்சநீதிமன்ற உத்தரவின்படி, பட்டாசுகளை வெடிப்பதற்கான நேரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற உத்திரவிற்கிணங்க பட்டாசுகள் வெடிக்கும் நேரம் காலை 06.00 மணி முதல் 07.00 மணி வரையிலும் இரவு 07.00 மணி முதல் 08.00 மணி வரையிலும் என்று 2 மணி நேரங்கள் ஒதுக்கியுள்ளதாகவும், இந்த நேரத்தில் மட்டும் பட்டாசுகள் வெடிக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு தெரிவித்திருந்து. மேலும்,  சுற்றுப்புற சூழல் பாதுகாப்பு விதி 89ன்படி பட்டாசு வெடிக்கும் இடத்திலிருந்து 4 மீட்டருக்கு அப்பால் 125 டெசிபல் அளவுக்கு மேல் ஓசை எழுப்பக்கூடிய பட்டாசுகளை தயாரிக்கவோ, பயன்படுத்தவோ, விற்கவோ கூடாது. மேலும், தடை செய்யப்பட்ட சீன தயாரிப்பு வெடிகளை விற்பதோ, பயன்படுத்துவதோ (வெடிப்பதோ) கூடாது. பட்டாசுகளை கொளுத்தி மேலே தூக்கி எறிந்து விட்டு. வேடிக்கை பார்க்க முயற்சித்தால், வெடிக்கும் பட்டாசு அருகில் இருப்பவர்கள் மீது விழுந்து உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும். ஆகவே, பட்டாசுகளை கொளுத்தி தூக்கி எறிந்து விளையாடக்கூடாது என பல்வேறு கட்டுப்பாடுகளை காவல்துறை விதித்து  இருந்தது.

133  பேர் மீது வழக்குப்பதிவு:

இந்த, விதிமுறைகளை மீறி பட்டாசுகளை வெடிப்பவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டட்ம 118 வது சட்டப்பிரிவின் படி 6 மாதம் சிறை தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.  மேலும், நேர கட்டுப்பாட்டை மீறியும், தடை செய்யப்பட்ட மற்றும் ஆபத்தை விளைவிக்கும் பட்டாசுகளை வெடிப்பவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் 285-ன் படி வழக்குப்பதிவும் செய்யப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு இடையூறு செய்பவர்கள் மீதும், வழிப்பாட்டு தலங்கள், வணிக வளாகங்கள், குடிசை பகுதிகள் போன்ற பட்டாசு தடை செய்யப்பட்ட இடங்கள் அருகே பட்டாசு வெடிப்பவர்கள் மீதும், அதிக ஒலி எழுப்பக் கூடிய பட்டாசு வெடிப்பவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்ய முடிவு செய்தனர். இதற்காக, காவல் நிலையத்திலும் உதவி ஆய்வாளர் தலைமையில் ஒரு தனிப்படை அமைக்கப்பட்டது.

விழுப்புரம் மாவட்டம் 

இந்தநிலையில் விழுப்புரம், விக்கிரவாண்டி, செஞ்சி, திண்டிவனம், மரக்காணம், வானூர், கோட்டக்குப்பம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் நேர கட்டுப்பாடுகளை மீறி பட்டாசு வெடித்த 133 பேர் மீது 2 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு. வழக்குப்பதிவு அடிப்படையில் ரூ.50 முதல் ரூ.1000 வரை அபராதம் விதிக்கப்படும். அபராத தொகையை கட்ட தவறினால் 6 மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்படும்.

விழுப்புரம் மாவட்டத்தில் தீ விபத்து குறைவு - போலீசாருக்கு குவியும் வாழ்த்து 

குறிப்பாக ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகை போது தீ விபத்து விழுப்புரம் மாவட்டத்தில் அதிகரித்து வரும் , இந்த ஆண்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட ஆட்சியர் இணைந்து எடுத்த நடவடிக்கையால் விபத்துக்கள் குறைந்துள்ளது. மேலும் தீயணைப்பு வீரர்களின் அவ்வப்போது நடத்தப்படும் விழிப்புணர்வு காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் தீ விபத்து குறைந்திருப்பது பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்துள்ளது. மேலும் விபத்துகளை நடைபெறாத வண்ணம் பாதுகாத்து பணியாற்றிய காவல்துறை மற்றும் தீயணைப்பு துறை உள்ளிட்ட அரசு அதிகாரிகளுக்கு சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்த வருகின்றனர்.

மேலும் படிக்க

Uttarkhand Tunnel Collapses: சுரங்கம் தோண்டும் பணியில் விபத்து: சிக்கிய 40 பேரின் நிலை என்ன? உத்தரகாண்டில் பரபரப்பு!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு  சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன்,  வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன், வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Embed widget