மேலும் அறிய

சென்னை சொகுசு கப்பலை புதுச்சேரியில் அனுமதிக்காதது ஏன்..? - ஆளுநர் தமிழிசை விளக்கம்

சென்னை சுற்றுலா சொகுசு கப்பல் புதுச்சேரி வருவதற்கு மாநில அரசு அனுமதிக்கவில்லை, வேண்டாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது என்று துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் விளக்கம்

சென்னை சுற்றுலா சொகுசுக் கப்பல் புதுச்சேரி வருவதற்கு மாநில அரசு அனுமதிக்கவில்லை, வேண்டாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது என்று துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன்  விளக்கம் அளித்துள்ளார்.

ஸ்ரீ பாலாஜி வித்யாபீடத்தின் யோகா சிகிச்சைக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் மொரார்ஜி தேசாய் தேசிய யோகா நிறுவனம் ஆகியவை இணைந்து நடத்தும் சர்வதேச யோகா தின விழாவிற்கான முன்னோட்ட நிகழ்ச்சி புதுவை கடற்கரை சாலையில் இன்று நடைபெற்றது. ஆளுநர் தமிழிசை நிகழ்ச்சியை தொடங்கி வைத்து யோகக் கலை வல்லுநர்கள் பயிற்சியாளர்கள், பழகுநர்கள் ஆகியோருடன் இணைந்து யோகா பயிற்சியில் ஈடுபட்டார்.

சென்னை சொகுசு கப்பலை புதுச்சேரியில் அனுமதிக்காதது ஏன்..? - ஆளுநர் தமிழிசை விளக்கம்

நிகழ்ச்சியில் ஆளுநர் தமிழிசை பேசுகையில், பிரதமர் ஜூன் 21ஆம் தேதியை உலக யோகா தினமாகக் கொண்டாட வேண்டும் என்ற கருத்தை ஐக்கிய நாடுகள் சபை மாநாட்டில் முன்வைத்து அதனை கொண்டாட ஏற்பாடு செய்தார். பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னாள் இந்தியாவில் உதித்த யோகக் கலை இன்று உலகம் முழுவதும் பரவி, சென்ற ஆண்டு மட்டும் 199 நாடுகள் இந்த யோகா தினத்தை ஜூன் 21-ம் தேதி கொண்டாடினர். இதில் 33 நாடுகள் இஸ்லாமிய நாடுகள். எல்லோரும் யோகக் கலையை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

யோகக் கலை வாழ்வியலை செழுமைப்படுத்துகிறது. வாழ்க்கையில் சவாலையும் சந்திக்க வேண்டுமென்றால் உடல் வேகமாக இருக்க வேண்டும் மனம் அமைதியாக இருக்க வேண்டும். அதனை இந்த யோகா பயிற்சி தருகிறது. யோகா காலை வாழ்க்கையில் ஒரு புத்துணர்ச்சியை ஏற்படுத்துகிறது. யோகா செய்யும்போது உடலின் தசை நார்கள் பயிற்சி பெறுகிறது பலப்படுகிறது. பெற்றோர்கள் அனைவரும் 5 வயதில் இருந்தே குழந்தைகளுக்கு யோகக் கலையை பயிற்றுவிக்க வேண்டும். யோகா சொல்லிக் கொடுத்தால் கட்டுப்பாட்டோடு அறிவாளிகளாக பிள்ளைகள் வளர்வார்கள். படிக்கும் பருவத்தில் யோகா பயிற்சி நினைவாற்றலை கவனத்தை அதிகரிக்கும். தீபாவளி, பொங்கலை விழாக்களாக கொண்டாடி வருகிறோம். உடல்நலத்தைப் பாதுகாக்கும் யோகா தினமும் விழாவாக எல்லோரும் கொண்டாட வேண்டும் என்பதை வருங்கால சந்ததியினருக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

சென்னை சொகுசு கப்பலை புதுச்சேரியில் அனுமதிக்காதது ஏன்..? - ஆளுநர் தமிழிசை விளக்கம்

சொகுசு கப்பல் புதுச்சேரியில் அனுமதிக்காதது தொடர்பாக செய்தியாளர்களிடம் ஆளுநர் தமிழிசை கூறியதாவது:- கடலில் சர்வதேச எல்லை, இந்திய எல்லை மற்றும் மாநில எல்லை என்று தனியாக எல்லைகள் உள்ளன. புதுச்சேரி வந்த சொகுசு கப்பலில் உள்ள சில நிகழ்வுகளுக்கு இங்குள்ள அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தால், அதற்கு அனுமதி வழங்க தயக்கம் காட்டினோம். சுற்றுலாவை மேம்படுத்த வேண்டும் என்பது மாநில அரசு எண்ணம். அதேநேரத்தில் அந்தந்த மாநிலத்திற்கு ஏற்றார்போல் முடிவு எடுக்க வேண்டும். சொகுசு கப்பலுக்கு அனுமதி வழங்குவதற்கு சில வழிமுறைகள் உள்ளது. அந்த சொகுசு கப்பலில் இருக்கும் அம்சங்களுக்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு தெரிவிப்பதால் மாநில அரசு அனுமதி வழங்கவில்லை. அது நம்முடைய மாநிலத்திற்கு வேண்டாம் என்று அரசு முடிவு செய்துள்ளது என்றார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
Syria War: கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
Embed widget