மேலும் அறிய
சிதம்பரம் ஆருத்ரா தரிசன விழா- நாளை மறுநாள் கடலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
20-ஆம் தேதி அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளதால் அன்றைய தினம் பொதுமக்கள் குறைதீா் நாள் கூட்டம் நடைபெறாது எனவும் அறிவிப்பு
![சிதம்பரம் ஆருத்ரா தரிசன விழா- நாளை மறுநாள் கடலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு Chidambaram Arudra Darshan Festival - Local holiday announcement for Cuddalore district tomorrow சிதம்பரம் ஆருத்ரா தரிசன விழா- நாளை மறுநாள் கடலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/18/11b907a812b43959b5add59540840f4f_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
சிதம்பரம் நடராஜர் கோயில்
கடலூர் சிதம்பரம் நடராஜர் கோயில் ஆருத்ரா தரிசன விழா 20 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு*
புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் ஆனி திருமஞ்சன விழாவும், மார்கழி மாதம் ஆருத்ரா தரிசன விழாவும் கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டிற்கான ஆருத்ரா தரிசன விழா கடந்த 11 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. மேலும் 15-ந்தேதி கோபுர தரிசனம் எனும் தெருவடைச்சான் உற்சவமும், 19 ஆம் தேதி தேரோட்டமும், முக்கிய நிகழ்ச்சியான ஆருத்ரா தரிசன விழா 20ஆம் தேதியும் நடக்கிறது. இந்த நிலையில் நடராஜர் கோவிலில் தேரோட்டம் மற்றும் ஆருத்ரா தரிசன விழா நடத்துவது குறித்த அனைத்துத்துறை அதிகாரிகள் பங்கேற்ற ஒருங்கிணைப்பு ஆலோசனை கூட்டம் சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் சில நாட்களுக்கு முன் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பக்தர்கள் கோயில் திருவிழாவில் கலந்துகொள்ளவும், கோயில் தேரோட்டதிற்கும் அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டது.
![சிதம்பரம் ஆருத்ரா தரிசன விழா- நாளை மறுநாள் கடலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/18/0ff83c1436a9fd93f666e2dda9652df8_original.jpg)
இந்நிலையில் கடந்த 11 ஆம் தேதி சிதம்பரம் நடராஜர் கோயிலில் திருவிழாவிற்கான கொடியேற்றம் நடைபெற்றது. நடராஜர் கோயிலுக்கு உள்ளே உள்ள கொடிமரத்திற்கு உற்சவ ஆச்சாரியார் சக்கரவர்த்தி தீட்சிதர் பூஜைகள் செய்து கொடி ஏற்றினார். இதில் குறைந்த எண்ணிக்கையிலான பக்தர்கள் பங்கேற்றனர், மேலும் தீட்சிதர்கள் பங்கேற்றனர் கோவில் திருவிழாவையொட்டி கடந்த சில தினங்களுக்கு முன்பு வருவாய் துறையினர் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக திருவிழாவை கோயிலுக்குள்ளேயே நடத்திக் கொள்ள வேண்டும் எனவும், திருவிழா நடைபெறும் நேரங்களில் மட்டும் பக்தர்களை கோயிலுக்குள் அனுமதிக்க கூடாது எனவும், மற்ற நேரங்களில் பக்தர்கள் சுவாமியை வழிபடலாம் எனவும் வருவாய் துறையினர் அறிவுரைகள் வழங்கி இருந்தனர் மேலும் கோட்டாட்சியர் ரவி அவர்கள் தலைமையில் நடந்த கூட்டத்திலும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என உத்தரவிட்டிருந்த நிலையில் , கடந்த 11 ஆம் தேதி நடந்த கொடியேற்றத் திருவிழாவில் குறைந்த எண்ணிக்கையில் பக்தர்கள் பங்கேற்றனர். காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.
![சிதம்பரம் ஆருத்ரா தரிசன விழா- நாளை மறுநாள் கடலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/18/72de878c1ca158a4a43292b4edc20c70_original.jpg)
மேலும் கொடி ஏற்றத்தை தொடர்ந்து வருகிற 19 ஆம் தேதி தேரோட்டமும், 20 ஆம் தேதி ஆருத்ரா தரிசன விழாவும் நடைபெறும் என தீட்சிதர்கள் அறிவித்து உள்ளனர். இந்நிலையில் சிதம்பரம் நடராஜா் கோயில் ஆருத்ரா தரிசன விழாவையொட்டி கடலூா் மாவட்டத்துக்கு வரும் 20 ஆம் தேதி உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் சிதம்பரம் நடராஜா் கோயிலில் ஆருத்ரா தரிசனம் நடைபெறும் நாளான டிசம்பர் 20-ஆம் தேதி (திங்கள்கிழமை) கடலூா் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு அலுவலகங்கள், கல்வி நிலையங்களுக்கு உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் வரும் ஜனவரி 8-ஆம் தேதி (சனிக்கிழமை) வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது என்று அதில் தெரிவித்துள்ளாா். மேலும் கடலூா் மாவட்டத்தில் ஒவ்வொரு திங்கள்கிழமையும் ஆட்சியா் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீா் நாள் கூட்டம் நடைபெறுவது வழக்கம். வரும் 20-ஆம் தேதி அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளதால் அன்றைய தினம் பொதுமக்கள் குறைதீா் நாள் கூட்டம் நடைபெறாது என்று மற்றொரு செய்திக்குறிப்பில் ஆட்சியா் தெரிவித்தாா்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
இந்தியா
தமிழ்நாடு
சென்னை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion