மேலும் அறிய

புனித தலங்களுக்கு பயணம் செய்பவர்களுக்கு ரூ.10,000 நிதியுதவி - விண்ணப்பிக்க உடனே அணுகவும்!

புனித தலங்களுக்கு புனித பயணம் மேற்கொண்டவர்களுக்காக தமிழ்நாடு அரசால் ஆண்டுதோறும் நபர் ஒருவருக்கு ரூ.10,000/- நிதி உதவி பெற விண்ணப்பிக்கலாம்.

விழுப்புரம்: புனித தலங்களுக்கு புனித பயணம் மேற்கொண்டவர்களுக்காக தமிழ்நாடு அரசால் ஆண்டுதோறும் நபர் ஒருவருக்கு ரூ.10,000/- வீதம் 120 நபர்களுக்கு ரூபாய் 12 இலட்சம் நிதி உதவி வழங்கும் திட்டத்தின் கீழ், பயணம் மேற்கொண்டு பயன்பெற விரும்புவர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல்ரகுமான் அறிவித்துள்ளார்.

புனித தலங்களுக்கு புனித பயணம்

தமிழ்நாட்டைச் சேர்ந்த 50 புத்த மதத்தினர், 50 சமண மதத்தினர் மற்றும் 20 சீக்கிய மதத்தினர் இந்தியாவில் உள்ள அவரவர் மதங்களுக்கான புனித தலங்களுக்கு புனித பயணம் மேற்கொண்டவர்களுக்காக தமிழ்நாடு அரசால் ஆண்டுதோறும் நபர் ஒருவருக்கு ரூ.10,000/- வீதம் 120 நபர்களுக்கு ரூபாய் 12 இலட்சம் நிதி உதவி வழங்கும் திட்டத்தின் கீழ், பயணம் மேற்கொண்டு பயன்பெற விரும்பும் புத்த, சமண மற்றும் சீக்கியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

இப்புனித பயணம் புத்த மத தொடர்புடைய பீகாரில் உள்ள புத்த கயா, உத்திரபிரதேசத்தில் உள்ள குசிநகர், வாரணாசியில் உள்ள சாரநாத் கோவில், பீகாரில் உள்ள ராஜ்கிர், வைஷாலி, நேபாளத்தில் உள்ள லும்பினி போன்ற புனித தலங்களையும், சமண மத தொடர்புடைய இராஜஸ்தானில் உள்ள தில்வாரா கோவில், ரணக்பூர் சமய கோவில், ஜெய்சால்மர் சமண கோவில், ஜார்கண்டில் உள்ள சிக்கர்ஜி, குஜராத்தில் உள்ள பாலிடனா, பீகாரில் உள்ள பவபுரி சமண கோவில் போன்ற இடங்கள், கர்நாடகாவில் சரவணபெலகோலா போன்ற புனித தலங்களையும் மற்றும் சீக்கிய மத தொடர்புடைய பஞ்சாப்பில் உள்ள அமிர்தசரஸ், தக்ட் ஸ்ரீகேசகர் சாகிப், தக்ட் ஸ்ரீடாம்டா சாகிப், பீகாரில் உள்ள தக்ட் ஸ்ரீ ஹர்மந்திர் சாகிப் (குரு கோவிந்த் சிங்), தக்ட் ஸ்ரீ ஹசூர் சாகிப் (மஹாராஷ்டிரா) போன்ற இடங்கள், பாகிஸ்தானிலுள்ள குருத்வாரா ஸ்ரீ நான்காணா சாகிப், குருத்வாரா ஸ்ரீ சச்சா செளதா, மண்டி சுகர்கானா, குருத்வாரா ஸ்ரீ பஞ்ச சாகிப், ஹசன் அப்தல், குருத்வாரா ஸ்ரீ தெஹ்ரா சாகிப் போன்ற புனித தலங்களையும் உள்ளடக்கியது. 

ECS முறையில் நேரடியாக மானியம்

இத்திட்டத்தின் கீழ் 01.07.2025-க்கு பிறகு புனித பயணம் மேற்கொள்பவர்களுக்கு ECS முறையில் நேரடியாக மானியம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை

இதற்கான விண்ணப்ப படிவங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலகங்களிலிருந்து கட்டணமின்றி பெறலாம். மேலும் www.bcmbcmw.tn.gov.in என்ற இணைய தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை 30.11.2025க்குள் ஆணையர், சிறுபான்மையினர் நலத்துறை, கலசமஹால் பாரம்பரிய கட்டடம். முதல் தளம், சேப்பாக்கம், சென்னை-600 005 என்ற முகவரிக்கு அனுப்பிட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

தலைப்பு செய்திகள்

NH-77 நான்கு வழிச்சாலையாகுமா? திண்டிவனம்-திருவண்ணாமலை சாலையில் அதிகரிக்கும் போக்குவரத்து... விபத்துகளால் அதிர்ச்சி!
NH-77 நான்கு வழிச்சாலையாகுமா? திண்டிவனம்-திருவண்ணாமலை சாலையில் அதிகரிக்கும் போக்குவரத்து... விபத்துகளால் அதிர்ச்சி!
கொத்தடிமை, குழந்தைத் தொழிலாளர் முறைக்கு முற்றுப்புள்ளி! - விழுப்புரம் ஆட்சியர் அதிரடி உத்தரவு
கொத்தடிமை, குழந்தைத் தொழிலாளர் முறைக்கு முற்றுப்புள்ளி! - விழுப்புரம் ஆட்சியர் அதிரடி உத்தரவு
மரங்களா... பாறைகளா? பூமியின் தொன்மை வரலாற்றைப் பேசும் திருவக்கரை அதிசய உலகம்!
மரங்களா... பாறைகளா? பூமியின் தொன்மை வரலாற்றைப் பேசும் திருவக்கரை அதிசய உலகம்!
விழுப்புரம் விவசாயிகளுக்கு குட் நியூஸ்! பயறு சாகுபடிக்கு ரூ.4.53 கோடி சிறப்புத் திட்டம்
விழுப்புரம் விவசாயிகளுக்கு குட் நியூஸ்! பயறு சாகுபடிக்கு ரூ.4.53 கோடி சிறப்புத் திட்டம்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
NH-77 நான்கு வழிச்சாலையாகுமா? திண்டிவனம்-திருவண்ணாமலை சாலையில் அதிகரிக்கும் போக்குவரத்து... விபத்துகளால் அதிர்ச்சி!
NH-77 நான்கு வழிச்சாலையாகுமா? திண்டிவனம்-திருவண்ணாமலை சாலையில் அதிகரிக்கும் போக்குவரத்து... விபத்துகளால் அதிர்ச்சி!
P Chidambaram:
P Chidambaram: "சட்டசபையை பாக்குறப்ப MP-யா இருக்கதை விட MLA-வா இருந்திருக்கலாம்னு தோணுது.." ப.சிதம்பரம் ஏக்கம்
எதிர்க்கட்சி MLA-க்களுக்கே தெரியுது.. அவங்க ஆட்சியில எதுவுமே பண்ணலனு.. அமைச்சர் வெங்கட்ரமணன் பேச்சு
எதிர்க்கட்சி MLA-க்களுக்கே தெரியுது.. அவங்க ஆட்சியில எதுவுமே பண்ணலனு.. அமைச்சர் வெங்கட்ரமணன் பேச்சு
“ஜோசப் விஜய் என்ற ஒற்றை முகத்திற்காக மக்கள் வாக்கு” 100 நாள் சாதனை கூட்டத்தில் அமைச்சர் பார்த்திபன் உருக்கம்
“ஜோசப் விஜய் என்ற ஒற்றை முகத்திற்காக மக்கள் வாக்கு” 100 நாள் சாதனை கூட்டத்தில் அமைச்சர் பார்த்திபன் உருக்கம்
கொத்தடிமை, குழந்தைத் தொழிலாளர் முறைக்கு முற்றுப்புள்ளி! - விழுப்புரம் ஆட்சியர் அதிரடி உத்தரவு
கொத்தடிமை, குழந்தைத் தொழிலாளர் முறைக்கு முற்றுப்புள்ளி! - விழுப்புரம் ஆட்சியர் அதிரடி உத்தரவு
ENG vs PAK: பந்துவீச்சில் மிரட்டும் இங்கிலாந்து.. லார்ட்ஸில் மண்ணைக் கவ்வப்போகிறதா பாகிஸ்தான்?
ENG vs PAK: பந்துவீச்சில் மிரட்டும் இங்கிலாந்து.. லார்ட்ஸில் மண்ணைக் கவ்வப்போகிறதா பாகிஸ்தான்?
"நான் சாப்பிட்றதுக்கே இன்னைக்கு பாண்டியராஜன்தான் காரணம்.." நன்றி மறக்காத நடிகை சீதா
பரந்தூர் நிலத்தில் 5,500 ஏக்கரில் நீர்த்தேக்கம்! 33 ஏரிகளை இணைக்க அன்புமணி அதிரடி யோசனை
பரந்தூர் நிலத்தில் 5,500 ஏக்கரில் நீர்த்தேக்கம்! 33 ஏரிகளை இணைக்க அன்புமணி அதிரடி யோசனை
Embed widget