மேலும் அறிய
Advertisement
தனியார் மயமாக்கப்படும் வங்கிகள் - கடலூரில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்
கடலூர் மாவட்டத்தில் இரண்டு நாளில் சுமார் 500 கோடிக்கும் மேல் பண பரிவர்த்தனை காசோலை பரிவர்த்தனை பாதிக்கப்பட வாய்ப்பு
தேசிய வங்கிகளை தனியாருக்கு விற்க வகைசெய்யும் வங்கிகள் சட்ட திருத்த மசோதா பாராளுமன்றத்தில் தற்பொழுது நடைபெற்று வரும் குளிர்கால கூட்டத்தொடரில் அமைக்கப்பட்டு உள்ளது மேலும் இரண்டு அரசுடைமை வங்கிகள் தனியாருக்கு மொத்தமாக தாரைவார்க்கும் அபாயம் உள்ளதால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் இரண்டு நாட்கள் வங்கி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தில் இன்றும் நாளையும் வங்கி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்று வரும் இந்த நிலையில் கடலூர் பாரதி சாலையில் உள்ள சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா எதிரே வங்கி ஊழியர்கள் அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சுமார் 50க்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர், அரசு பொதுத்துறை வங்கிகளை தனியாருக்கு தாரை வார்க்கும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும் என கோஷங்கள் எழுப்பப்பட்டது.கடலூர் மாவட்டத்தில் சுமார் 190 க்கும் மேற்பட்ட வங்கி கிளைகளில் இருந்து ஊழியர் அதிகாரிகள் என மொத்தம் சுமார் 750 பேர் வேலை நிறுத்தத்தில் பங்கேற்கின்றனர் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுவதால் மாவட்டத்தில் வங்கி சேவை முடங்கி உள்ளது. மேலும் அது மட்டும் இன்றி கடலூர் மாவட்டத்தில் இரண்டு நாளில் சுமார் 500 கோடிக்கும் மேல் பண பரிவர்த்தனை காசோலை பரிவர்த்தனை பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது எனவும், இந்தப் போராட்டம் ஆனது வங்கி ஊழியர்களுக்கு மட்டுமின்றி பொது மக்களுக்கும் ஆனா போராட்டம் ஆகும் ஆதலால் பொதுமக்கள் தங்களுக்கு ஒத்துழைப்பு தரவேண்டும் என வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும்பாலான வங்கிகள் வெறிச்சோடி காணப்பட்டன.
இந்த வேலை நிறுத்த ஆர்ப்பாட்டத்தில் ஏ.ஐ.பி.இ.ஏ அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் கடலூர் மாவட்ட பொதுச் செயலாளரும் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரும் ஆன ஸ்ரீதரன், வங்கி அதிகாரிகள் சங்கத்தின் முன்னாள் தலைவர் பலராமன், கண்ணன் ஓய்வூதியர் சங்க தலைவர் ரமணி, திருமலை மேலும் அகில இந்திய வங்கி அதிகாரிகள் சார்பில் பாரத ஸ்டேட் வங்கி அதிகாரிகள் சங்கத்தின் மண்டலச் செயலாளர் செந்தில்குமார் மற்றும் அனைத்து வங்கி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
மதுரை
தமிழ்நாடு
தமிழ்நாடு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion