ABP Nadu Impact: விழுப்புரத்தில் தரமற்ற முறையில் கட்டப்பட்ட பள்ளியின் புதிய கட்டிடம்; உடனடி நடவடிக்கை - ஆட்சியர் உறுதி
புதியதாக கட்டப்பட்ட கட்டிடம் தரமற்ற முறையில் கட்டப்பட்டதால் மேல் கூரையின் காரை பெயர்ந்து விழுந்துள்ளது.
விழுப்புரம்: விழுப்புரம் அருகே நூறு ஆண்டுகள் கடக்க உள்ள அரசு பள்ளிக்கு புதியதாக கட்டப்பட்ட கட்டிடம் தரமற்ற முறையிலும் அடிப்படை வசதிகள் இல்லாமல் கட்டப்பட்டதால் மது கூடாரமாக மாறிய அவலநிலை ஏற்பட்டுள்ளது.
விழுப்புரம் அருகேயுள்ள கண்டம்பாக்கம் கிராமத்தில் கடந்த 1926 ல் தொடங்கப்பட்ட ஆதிதிராவிட தொடக்கபள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் கண்டம்பாக்கம் காலனி பகுதியை சார்ந்த 50 க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த நிலையில் ஓட்டு கட்டிடத்தில் இயங்கும் இப்பள்ளியில் மாணவர்கள் கல்வி பயில இயலாது என கடந்த 2006 ஆம் ஆண்டு அதே பகுதியில் புதியதாக இரண்டு வகுப்பறைகள் கொண்ட கட்டிடம் புதியதாக கட்டிடம் கட்டபட்டு திறக்கப்பட்டுள்ளது. அந்த கட்டிடத்தில் மின்சார வசதி கழிவறைகள் என எந்த அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தி தரவில்லை என்பதால் புதிய கட்டிடத்திற்கு செல்லாமல் மீண்டும் பழைய கட்டிடத்திலையே மாணவர்கள் கல்வி பயின்றுள்ளனர்.
விழுப்புரம் கண்டம்பாக்கத்தில் புதிதாக கட்டப்பட்ட ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளி தரமற்ற முறையிலும், அடிப்படை வசதிகள் இல்லாததால் பழமையான ஓட்டு கட்டிடத்தில் வகுப்பு இயங்கி வருகிறது...@abpnadu @SRajaJourno @Anbil_Mahesh @KPonmudiMLA @annamalai_k @WriterRavikumar #villupuram pic.twitter.com/PHMOrUWaNe
— Siva Ranjith (@sivaranjithsr) June 20, 2023
இதனால் புதியதாக கட்டப்பட்ட கட்டிடம் தரமற்ற முறையில் கட்டப்பட்டதால் மேல் கூரையின் காரை பெயர்ந்து விழுந்துள்ளது. இதனையடுத்து புனரமைப்பு பணி செய்தும் புதிய கட்டிடம் பாதுகாப்பற்ற நிலையில் மழை நாட்களில் ஒழுகும் நிலை ஏற்பட்டதால் கட்டிடம் பராமரிப்பு இன்றி பூட்டியே கிடக்கிறது. இதனால் அப்பகுதியை சார்ந்தவர்கள் பள்ளி கட்டிடத்தை துணி காயவைக்கும் இடமாகவும் மது அருந்தும் இடமாக மாறியுள்ளதால் பாதுகாப்பற்ற ஓட்டு கட்டிடத்தில் மாணவர்கள் கல்வி பயின்றனர். இந்த நூற்றாண்டு காண உள்ள பள்ளியின் கட்டிடத்தின் கதவுகள், ஜன்னல்கள் உடைக்கப்பட்டும், ஆபத்தான நிலையில் உள்ளதால் பழைய கட்டிடத்தினை உடைத்து புதிய கட்டிடம் அடிப்படை வசதிகளோடு அமைத்து தர வேண்டுமென பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் பள்ளி தாழ்வான பகுதியில் உள்ளதால் மழைகாலங்களில் நீர் தேங்கி காய்ச்சல் வருவதாக வேதனை தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில் ABP NADU செய்தி வெளியிட்ட நிலையில், இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் டாக்டர் பழனி கூறுகையில், கண்டம்பாக்கம் பள்ளியை உடனடியாக ஆய்வு செய்து, பள்ளி மாணவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் கட்டிட வசதி ஏற்படுத்தி தருவதாக கூறினார்.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்