மரக்காணத்தில் கள்ளச்சாராயம் குடித்து 3 பேர் உயிரிழப்பு... எம்.பி சிவி சண்முகம் நேரில் ஆறுதல்...
விழுப்புரம் : மரக்காணம் அருகே எக்கியார் குப்பத்தில் விஷ சாராயம் குடித்து மூன்று பேர் உயிரிழந்துள்ள குடும்பங்களுக்கு சிவி சண்முகம் ஆறுதல்
விழுப்புரம் : மரக்காணம் அருகே எக்கியார் குப்பத்தில் விஷ சாராயம் குடித்து மூன்று பேர் உயிரிழந்த நிலையில் மாநிலங்களவை உறுப்பினர் சிவி சண்முகம் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நிதி வழங்கினார்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த மீனவர் குப்பமான எக்கியார் குப்பத்தில், கடற்கரையோர பகுதியான வம்பா மேடு பகுதியில் கள்ளச்சாரம் விற்பனை நடந்துள்ளது. இதனை எக்கியார் குப்பம் கிராமத்தை சேர்ந்த சங்கர்(50). தரணிவேல்(50). மண்ணாங்கட்டி(47). சந்திரன்(65). சுரேஷ்(65). மண்ணாங்கட்டி(55) உள்ளிட்ட ஆறு பேர் கள்ளச்சாராய பாக்கெட்டுகளை வாங்கி குடித்துள்ளனர். ஆறு பேரும் வீட்டிற்கு சென்றவுடன் மயக்கடைந்து விழுந்துள்ளனர். உடனடியாக உறவினர்கள் ஜிப்மர் மருத்துவமனை மற்றும் புதுவை, முண்டியம்பாக்கம், மருத்துவமனையில் ஏழு பேரையும் அனுமதித்தனர். இதில் ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுரேஷ், சங்கர், தரணி வேல் ஆகிய மூவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்கானிப்பாளார் ஸ்ரீநாதா தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் எக்கியார் குப்பம் கிராமத்தில் சோதனையில் ஈடுபட்ட போது மது அருந்தி மயக்க நிலையில் இருந்த தெய்வமணி, செந்தமிழன், கிருத்திகை வாசன், ரமேஷ், ராஜமூர்த்தி ஐந்து பேரை மீட்டு காவல்துறை வாகனத்திலேயே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
மேலும் நேற்று முன்தினம் சாராயம் குடித்து உடல்நிலை சரியில்லாமல் இருந்த வீராந்தம் விஜயன், வேல்முருகன், ராமு மண்ணாங்கட்டி (60) ஆகியோர் மரக்காணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து காவலர்கள் மற்றும் பொது மக்கள் கடற்கரையோரங்களில் மது அருந்திவிட்டு யாரேனும் உள்ளனரா என தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் காரணமாக எக்கியார் குப்பத்தில் பதட்டமான சூழல் நிலவுகிறது.