மேலும் அறிய

திமுக ஆட்சிக்கு வந்த போதெல்லாம் பெண்களுக்கு அனைத்து சம உரிமைகள் கிடைக்கிறது - அமைச்சர் எ.வ.வேலு பேச்சு

திமுக ஆட்சிக்கு வந்த போதெல்லாம் பெண்களுக்கு என கல்லூரிகள், பள்ளிகள் உட்பட பல்வேறு நிலைகளில் பெண்களுக்கு ஊக்கம் தரும் ஆட்சியாக திராவிட முன்னேற்ற கழக ஆட்சி அமைந்துள்ளது - அமைச்சர் எ.வ.வேலு

திருவண்ணாமலை ஒன்றியம், கொளக்குடி ஊராட்சி அம்மன் நகரில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை தமிழ்நாடு பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி வைத்து மாணவ மாணவிகளுக்கு உணவை பறிமாறினார். அதன் பிறகு மாணவர்களுடன் அமர்ந்து காலை உணவு உட்கொண்டார். அப்போது அருகில் இருந்த மாணவர்களுக்கு உணவு நன்றாக உள்ளதா என்று கேட்டு அறிந்து மாணவர்களுக்கு உணவினை ஊட்டி விட்டார். இதனை தொடர்ந்து அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் திராவிட மாடல் எனும் சிறப்பான ஆட்சியை செய்து வருகிறார் மேலும் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் இரண்டாம் கட்டமாக முத்தமிழர் கலைஞர் பிறந்த ஊரான திருக்குறளில் தமிழ்நாடு முதலமைச்சர் இன்று தொடங்கி வைத்தார் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.

திமுக ஆட்சிக்கு வந்த போதெல்லாம் பெண்களுக்கு அனைத்து சம உரிமைகள் கிடைக்கிறது - அமைச்சர் எ.வ.வேலு பேச்சு

கடந்த 7 - 5 - 2022 ல் சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காலை உணவு திட்டம் என்ற மகத்தான திட்டத்தை அறிவித்து மதுரையில் முதல் கட்ட காலை உணவு திட்டத்தை துவக்கி வைத்தார். திருவண்ணாமலை மாவட்டத்தில் இரண்டாம் கட்டமாக முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் 18 ஊராட்சி ஒன்றியங்களில் 1488 பள்ளிகளில் 83548 மாணவ, மாணவிகளும் 10 பேரூராட்சி பகுதிகளில் உள்ள 47 பள்ளிகளில் 3254 மாணவ, மாணவிகளும் 2 நகராட்சிகளில் 17 பள்ளிகளில் 1040 என மொத்தம் திருவண்ணாமலை மாவட்டத்தில் 1552 பள்ளிகளில் 878442 மாணவ, மாணவிகள் இரண்டாம் கட்ட காலை உணவு திட்டத்தில் பயன்பெறுவதாக தெரிவித்தார். கடும் நெருக்கடிக்கு மத்தியில் தனது நிர்வாக திறன் மூலம் இந்த திட்டத்தினை வெற்றிகரமாக செயல்படுத்திய பெருமை முதலமைச்சர் ஸ்டாலினை சேரும். ஒரு திறமையான முதலமைச்சரை தமிழகம் பெற்று இருப்பதால்தான் இது போன்ற திட்டங்கள் வந்து கொண்டிருக்கிறது.

திமுக ஆட்சிக்கு வந்த போதெல்லாம் பெண்களுக்கு அனைத்து சம உரிமைகள் கிடைக்கிறது - அமைச்சர் எ.வ.வேலு பேச்சு

தாய்மார்களுக்கு தான் தனது குழந்தை காலை உணவு சாப்பிட வில்லையே என்ற பதைபதைப்பு இருக்கும். தாய்மார்களின் ஆதங்கம் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு உள்ளதால் தான் இந்த காலை உணவு திட்டத்தினை செயல்படுத்தினார். பெண்கள் படிக்கக் கூடாது என்று இருந்த நிலையை மாற்றி பெண்கள் படிக்க வேண்டும். பெண்கள் படித்ததால் சமுதாயத்தில் புரட்சி ஏற்படுத்த முடியும் சொன்னவர்கள் தந்தை பெரியார், அண்ணா மற்றும் கலைஞர் கருணாநிதி ஆகிய மும்மூர்த்திகள் தான். பெண்கள் படிக்க வேண்டும் என்று சொன்னதோடு மட்டுமல்லாமல் திமுக ஆட்சிக்கு வந்த போதெல்லாம் பெண்களுக்கு என கல்லூரிகள், பள்ளிகள் உட்பட பல்வேறு நிலைகளில் பெண்களுக்கு ஊக்கம் தரும் ஆட்சியாக திராவிட முன்னேற்ற கழக ஆட்சி அமைந்துள்ளது.

திமுக ஆட்சிக்கு வந்த போதெல்லாம் பெண்களுக்கு அனைத்து சம உரிமைகள் கிடைக்கிறது - அமைச்சர் எ.வ.வேலு பேச்சு

நேரலையில் முதல்வர் கூறிய செய்திகளில் பல அர்த்தங்கள் உள்ளடங்கியது. அதை நான் உங்களுக்கு கருத்தாக கூறுகிறேன். ஊர்களில் தெருக்கூத்து நடக்கும் அதிலும் குறிப்பாக மகாபாரத தெருக்கூத்துக்கு பெயர்கள் உண்டு. அதில் துரோணாச்சாரியார் என்ற கதாபாத்திரம் உண்டு அதில் அவர் பூனுல் அணிந்து வரும் கதாபாத்திரம் ஏகலைவன் என்ற கதாபாத்திரம் ஏழை மக்களாவான் பூணல் கிப்பாச்சி அணியாதவர். அதில் குருமார்களிடம் தான் நாம் எதுவாக இருந்தாலும் அந்த காலத்தில் கற்று கொள்ள முடியும். அப்போது ஏகலைவன் சென்று எனக்கும் வில்வித்தை கற்று கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். ஏழைகளான உனக்கு வில்வித்தை பயிற்சி அளிக்க வேண்டும் என்றால் உனது கட்டை விரலை வெட்டிக் குருதட்சணையாக கொடு என்று கேட்டார். கட்டைவிரல் இல்லை என்று சொன்னால் அம்பை ஏவ முடியாது. அதனால் வில்வித்தை எல்லாம் வீணாகிவிடும். எனவே இந்த கதையின் சுருக்கம் முதல்வர் கூறியது, துரோணாச்சாரியார் காலம் தற்போது எடுபடாது தற்போது திராவிட காலம் சாதாரண மக்களுக்கு அனைவருக்கும் கல்வியும் உரிமையும் கிடைக்கும் என்றும் பொருள். அதாவது திராவிட அரசியலில் பெரியார் அண்ணா கலைஞர் அவர்கள் பிறந்த மண் திராவிட தவிர வேறு எந்த திட்டமும் இங்கு எடுபடாது. இவ்வாறு பேசினார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Breaking News LIVE 28th Sep 2024:
"மாநில உரிமைகளை பெற அண்ணா வழியில், கலைஞர் வழியில், அயராது உழைப்போம்" : முதல்வர் ஸ்டாலின்
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Breaking News LIVE 28th Sep 2024:
"மாநில உரிமைகளை பெற அண்ணா வழியில், கலைஞர் வழியில், அயராது உழைப்போம்" : முதல்வர் ஸ்டாலின்
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னாது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னாது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
"பெரு நிறுவனங்களுக்கு நாமதான் முகவரி" பெருமிதத்துடன் முதல்வர் ஸ்டாலின் சொன்ன அந்த வார்த்தை!
Salem Leopard: சேலம் மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை உயிரிழப்பு
சேலம் மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை உயிரிழப்பு
Actor Sathyaraj:
"மதவாதிகளுக்கு நாங்க பிரச்னை இல்லை.! சேகர்பாபுதான் பிரச்னை ": நடிகர் சத்யராஜ் அதிரடி.!
Embed widget