மேலும் அறிய

”போதையில் இருந்ததால தப்பா சொல்லிட்டேன்..கம்மியாதான் திருடுபோச்சு” : போலீஸை கடுப்பேற்றிய தொழிலதிபர்..!

ஞானசேகரனை நாங்கள் மீண்டும் விசாரித்தபோது , 'தான் அன்று போதையில் இருந்ததால் , கணக்கு தவறாக சொல்லிவிட்டேன் , உண்மையில் கொள்ளைபோனது வெறும் 4.5  லட்சம் ருபாய்தான்' என்று தெரிவித்துள்ளார் .

கடந்த வெள்ளிக்கிழமை இரவு (ஜூலை 23 ஆம் தேதி), வாணியம்பாடி அருகே , சினிமா பாணியில், 100 அடி மேம்பாலத்தின் உச்சியில்  பொது மக்கள் முன்னிலையில் சினிமா பாணியில் நடந்த கொள்ளை சம்பவத்தின் முக்கிய குற்றவாளி உட்பட நாள்வரை , தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர் . அவர்களிடம் இருந்து , ஏற்கனவே , அவர்கள் விட்டு சென்ற ஒரு 'ஸ்போர்ட்ஸ் யுடிலிட்டி கார்' பறிமுதல் செய்த நிலையில் , தற்பொழுது கைது செய்யப்பட்டுள்ள முக்கிய குற்றவாளியிடம் இருந்து 1 .89  லட்ச ரூபாய் ரொக்க பணம் கைப்பற்றப்பட்டுள்ளது .

”போதையில் இருந்ததால தப்பா சொல்லிட்டேன்..கம்மியாதான் திருடுபோச்சு” : போலீஸை கடுப்பேற்றிய தொழிலதிபர்..!

25 லட்சம் டு 4 லட்சம் , கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதை .

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி பகுதியை சேர்ந்தவர் ஞானசேகரன் (வயது 50 ) , தொழிலதிபரான இவர் , நாட்றம்பள்ளி அருகே கட்டுமான பொருட்கள் விற்பனை செய்யும் ஹார்ட்வர் கடை மற்றும்  பைனான்ஸ் தொழிலும் செய்து வருகிறார் . சென்ற வெள்ளிக்கிழமை இரவு தனக்கு வர வேண்டிய கலெக்ஷன் பணம் 25 லட்ச ரூபாயை எடுத்துக்கொண்டு தனது நண்பர்கள் பாலாஜி மற்றும் சிவக்குமாருடன் , காரில் வரும் பொழுது , திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள  வலையாம்பட்டு மேம்பாலத்தில் , கத்தி , வீச்சரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வந்த அடையாளம் தெரியாத ஒரு கும்பல் தன்னிடம் இருந்த 25 லட்ச ருபாய் பணத்தை பறித்து சென்றதாக தெரிவித்தார் தெரிவித்திருந்தார் . பணத்தை மீட்க தங்களுக்கும் , கொள்ளை கும்பலுக்கும் ,  இடையே நடந்த போராட்டத்தில்  தனது நண்பர் மற்றும் கார் ஓட்டுநரான பாலாஜியை அந்த கும்பல் கத்தியால் காயப்படுத்திவிட்டு தப்பி சென்றுவிட்டனர்  என்று ஞானசேகரன் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் கூறி இருந்தார் .

”போதையில் இருந்ததால தப்பா சொல்லிட்டேன்..கம்மியாதான் திருடுபோச்சு” : போலீஸை கடுப்பேற்றிய தொழிலதிபர்..!

சம்பவ  இடத்திற்கு நேரில் வந்த திருப்பத்தூர் எஸ்பி சிபி சக்ரவர்த்தி , ஞானசேகரன் முன்னுக்குப்பின் முரண்பாடாக பதில் அளிப்பதை உணர்ந்து, வாணியம்பாடி நகர காவல் நிலையத்திற்கு ஞானசேகரன் மற்றும் அவரது இரு நண்பர்களையும் கொண்டு சென்று தனித்தனியே விசாரித்தார். விசாரணையில் , ஞானசேகரனிடம் கொள்ளைபோனது 25 லட்சம் இல்லை , வெறும் 11 லட்சம்தான் , பாக்கி 11 லட்சத்தை கொள்ளையர்களிடம் இருந்து லாவகமாக பெற்று கொண்டோம் என்று தெரிவித்தார். மேலும் அது தொழில் ரீதியான பணம் இல்லை, அது சூதாட்டத்தின் மூலம் ஜெயித்த  பணம்தான் என்று தெரிவித்திருந்தார் 

”போதையில் இருந்ததால தப்பா சொல்லிட்டேன்..கம்மியாதான் திருடுபோச்சு” : போலீஸை கடுப்பேற்றிய தொழிலதிபர்..!

இதன் அடிப்படையில் , எஸ் பி சிபி சக்ரவர்த்தியின் தலைமையில் , 3  சிறப்பு படைகள் அமைக்கப்பட்டு கொள்ளையர்களை தேடும் பனி நடந்துவந்தது . இந்நிலையில்  தனிப்படை போலீசார், மொபைல் டவர்களை லொகேட் செய்து , சயின்டிபிக் இன்வெஸ்டிகஷன் முறையை பயன்படுத்தி விசாரணை மேற்கொண்டதில் , திருவள்ளூர்   மாவட்டத்தை சேர்ந்த முக்கிய குற்றவாளியான மு அலெக்ஸ் (வயது 33 ) மற்றும் அவரது கூட்டாளிகளான வீ லட்சுமணன் (வயது 38 ), சஞ்சய் சந்திரநாதன்  (வயது 48 ) மற்றும் கிருஷ்ணமூர்த்தி (வயது 36 ) உள்ளிட்ட நாள்வரை கைது செய்து அவர்களிடம் இருந்து 1 .89  லட்ச ரூபாயை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்  .

”போதையில் இருந்ததால தப்பா சொல்லிட்டேன்..கம்மியாதான் திருடுபோச்சு” : போலீஸை கடுப்பேற்றிய தொழிலதிபர்..!

இது தொடர்பாக , திருப்பத்தூர் மாவட்ட எஸ் பி சிபி சக்ரவர்த்தி தெரிவிக்கையில் " முதலில் 25 லட்சம் கொள்ளை போனது என்று கூறிய ஞானசேகரன் , போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் , 11  லட்சம் மட்டுமே கொள்ளையடிக்கப்பட்டது , அதுவும் தான் சூதாட்டத்தில் ஜெயித்த பணம்தான் என்று தெரிவித்திருந்தார் . இந்நிலையில் இன்று முக்கிய குற்றவாளி அலெக்சிடம்  நடத்தப்பட்ட விசாரணையில் , தாங்கள் பறித்துச்சென்றது வெறும் 4.5 லட்ச ருபாய்தான் என்று வாக்குமூலம் கொடுத்துள்ளார் . இதில் இரண்டு லட்சத்திற்கும் மேல் செலவாகி விட்டதாகவும் , மீதம் இருந்த 1 .89  லட்ச ரூபாயை  தான் தற்பொழுது  போலீஸிடம் ஒப்படைத்து உள்ளதாக தெரிவித்தார் . இது தொடர்பாக ஞானசேகரனை நாங்கள் மீண்டும் விசாரித்தபோது , தான் அன்று போதையில் இருந்ததால், கணக்கு தவறாக சொல்லிவிட்டேன் என்றும் , உண்மையில் கொள்ளை போனது வெறும் 4.5  லட்சம் ருபாய் தான் என்று தெரிவித்துள்ளார் .”போதையில் இருந்ததால தப்பா சொல்லிட்டேன்..கம்மியாதான் திருடுபோச்சு” : போலீஸை கடுப்பேற்றிய தொழிலதிபர்..!

ஏற்கனவே கொள்ளைக் கும்பல் விட்டுச்சென்ற ஸ்போர்ட்ஸ் யுடிலிட்டி மாடல் கார் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் , தற்பொழுது அவர்களிடம்  இருந்து ரொக்கமாக 1 .89  லட்சம் ரூபாயை பறிமுதல் செய்துள்ளதாக , சிபி சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார். மேலும் கொள்ளையர்கள் 4 பேரையும் இந்திய தண்டனை சட்டம் பிரிவு , 341 , 294 பி , 395 ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வாணியம்பாடி நகர காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு , அவர்களை விசாரிப்பதற்கு , 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்கும்படி , வாணியம்பாடி குற்றவியல் நீதிபதி முன்னிலையில் ஒப்படைத்துள்ளனர் .

வழிப்பறியின் பின்னணி .

இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள , முக்கிய குற்றவாளியான அலெக்ஸ் , இந்த வழிபறிக்கான பின்னணியை , வாக்குமூலமாக தெரிவித்துள்ளார் .

”போதையில் இருந்ததால தப்பா சொல்லிட்டேன்..கம்மியாதான் திருடுபோச்சு” : போலீஸை கடுப்பேற்றிய தொழிலதிபர்..!

திருவள்ளூர் மாவட்டத்தை சார்ந்த அலெக்ஸ் மற்றும் அவரது நண்பர் லட்சுமணன் வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு அருகே மோரசபள்ளி பகுதியில் சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் சூதாட்ட க்ளப்பில் பல வருடமாக விளையாடி வந்துள்ளனர் .பல லட்சங்களை முதலீடாக போட்டு, எலைட் பிசினஸ் க்ளாஸ் மற்றும் பொலிடிகல் பிக் ஷாட்ஸ் போன்றோர் வெளியாடக்கூடிய இந்த க்ளப்பில் ,  தொடர்ந்து தோல்வியை மட்டும் சந்தித்து வெறுத்து போன அலெக்ஸ் , சம்பவம் நடப்பதற்கு முந்தைய நாள் , திட்டம் ஒன்றை வகுத்துள்ளார் . அதில் நாளை  (23 /07 /2021 ) விளையாட்டில் தோற்றுவிட்டால் ,  யார் , ஜெயித்தாலும்  அவர்களை பின் தொடர்ந்து , அந்த பணத்தை கொள்ளையடிக்க வேண்டும் என்று திட்டம் வகுத்து, லட்சுமணன் , சஞ்சய் , கிருஷ்ணமூர்த்தி , மற்றும் தற்பொழுது வரை தலைமறைவில்  இருக்கும் அவரது கூட்டாளிகள் 3 பேரையும் தனது திட்டத்தில் இணைத்துள்ளார் . இந்த  திட்டத்தின்படியே , அன்று ஞானசேகரனை வழி மறித்து அவரிடம் இருந்து 4.5  லட்ச ருபாய் பறிக்கப்பட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளார் .

தற்பொழுது 4  பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் , தலைமறைவாக இருக்கும் மேலும் மூன்று பேரை போலீசார் , தேடி வருகின்றனர் .

காவல் துறையினருக்கு ஊக்கத்தொகை .

”போதையில் இருந்ததால தப்பா சொல்லிட்டேன்..கம்மியாதான் திருடுபோச்சு” : போலீஸை கடுப்பேற்றிய தொழிலதிபர்..!

இந்நிலையில் கொள்ளை கும்பலை கண்டுபிடிப்பதற்கு மிக நேர்மையாகவும் , துடிப்பாகவும் பணியாற்றிய , இன்ஸ்பெக்டர் நாகராஜன் , சப் இன்ஸ்பெக்டர் கமலக்கண்ணன் , உள்ளிட்ட 10 கும் மேற்பட்ட தனிப்படை போலீசாருக்கு இன்று ஊக்கத்தொகை வழங்கி பாராட்டினார் , எஸ்பி சிபி சக்ரவர்த்தி  .

இந்த வழிப்பறி சம்பவத்தின் முழு விபரங்களையும் அறிய , இதையும் படிங்க:   பாலத்தில் சேஸிங்... 25 லட்சம் வழிப்பறி... கார் சாவியை பறித்த நண்பர்... பாதி பணம் ஒப்படைப்பு! சினிமா பாணியில் வழிப்பறி!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain: ” சீக்கிரமா வீட்டிற்கு போயிடுங்க” இன்று இரவு இந்த 12 மாவட்டங்களில் மழை இருக்கு.!
TN Rain: ” சீக்கிரமா வீட்டிற்கு போயிடுங்க” இன்று இரவு இந்த 12 மாவட்டங்களில் மழை இருக்கு.!
ரூ.15 கோடிக்கு ஆளுநர் பதவி.? சதுரங்க வேட்டை பட பாணியில்  ஏமாந்த சென்னை விஞ்ஞானி.!
ரூ.15 கோடிக்கு ஆளுநர் பதவி.? சதுரங்க வேட்டை பட பாணியில் ஏமாந்த சென்னை விஞ்ஞானி.!
Annamalai: முதல்வர் ஸ்டாலினால் இதை சொல்ல முடியுமா? ஆதாரத்தை வெளியிடுவேன்: புது செக் வைத்த அண்ணாமலை 
Annamalai: முதல்வர் ஸ்டாலினால் இதை சொல்ல முடியுமா? ஆதாரத்தை வெளியிடுவேன்: புது செக் வைத்த அண்ணாமலை 
"ஆக்சன் - அக்ரஷன்" இடதுசாரி தீவிரவாதத்திற்கு ஆப்பு.. ஒரே போடு போட்ட மத்திய அரசு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Palani Drunken Women: சுக்குநூறான POLICE பூத்.. அடித்து நொறுக்கிய பெண்.. பழனியில் பரபரப்பு!Aloor shanavas: ”விஜய் கூத்தாடியா உங்களுக்கு?” கண்டித்த திருமாவளவன்! ஷா நவாஸ் புது விளக்கம்Aadhav Join TVK  IT Wing : ஆதவ் கையில் IT WING.. விஜய் மாஸ்டர் ப்ளான்! திமுகவுக்கு ஸ்கெட்ச்ADMK Support Mining Bill : டங்ஸ்டன் சுரங்கம் தம்பிதுரை பேசியது என்ன? ஆதரித்த அதிமுக?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain: ” சீக்கிரமா வீட்டிற்கு போயிடுங்க” இன்று இரவு இந்த 12 மாவட்டங்களில் மழை இருக்கு.!
TN Rain: ” சீக்கிரமா வீட்டிற்கு போயிடுங்க” இன்று இரவு இந்த 12 மாவட்டங்களில் மழை இருக்கு.!
ரூ.15 கோடிக்கு ஆளுநர் பதவி.? சதுரங்க வேட்டை பட பாணியில்  ஏமாந்த சென்னை விஞ்ஞானி.!
ரூ.15 கோடிக்கு ஆளுநர் பதவி.? சதுரங்க வேட்டை பட பாணியில் ஏமாந்த சென்னை விஞ்ஞானி.!
Annamalai: முதல்வர் ஸ்டாலினால் இதை சொல்ல முடியுமா? ஆதாரத்தை வெளியிடுவேன்: புது செக் வைத்த அண்ணாமலை 
Annamalai: முதல்வர் ஸ்டாலினால் இதை சொல்ல முடியுமா? ஆதாரத்தை வெளியிடுவேன்: புது செக் வைத்த அண்ணாமலை 
"ஆக்சன் - அக்ரஷன்" இடதுசாரி தீவிரவாதத்திற்கு ஆப்பு.. ஒரே போடு போட்ட மத்திய அரசு!
Look Back 2024 : 2024-ன் சைலண்ட் சம்பவக்காரர்கள்.. நிதிஷ் முதல் பெத்தேல் வரை... கவனம் ஈர்த்த வீரர்களின் முழுவிவரம் இதோ!
Look Back 2024 : 2024-ன் சைலண்ட் சம்பவக்காரர்கள்.. நிதிஷ் முதல் பெத்தேல் வரை... கவனம் ஈர்த்த வீரர்களின் முழுவிவரம் இதோ!
பெண்களே! ஏதாச்சும் பிரச்னையா? உடனே போனை எடுங்க.. 181க்கு கால் பண்ணுங்க!
பெண்களே! ஏதாச்சும் பிரச்னையா? உடனே போனை எடுங்க.. 181க்கு கால் பண்ணுங்க!
RP Udhayakumar: எடப்பாடி பழனிசாமி பேசிய பேச்சில் சட்டப்பேரவை ஆடிப் போய்விட்டது - ஆர்.பி. உதயகுமார்
எடப்பாடி பழனிசாமி பேசிய பேச்சில் சட்டப்பேரவை ஆடிப் போய்விட்டது - ஆர்.பி. உதயகுமார்
Watch Video: செம்ம கட்! அசத்தலான பந்து வீச்சில் அசால்ட் செய்த அருந்ததி ரெட்டி! - வீடியோ
Watch Video: செம்ம கட்! அசத்தலான பந்து வீச்சில் அசால்ட் செய்த அருந்ததி ரெட்டி! - வீடியோ
Embed widget