எனக்கு லோ பிபி...! - லஞ்ச புகாரில் சிக்கிய பெண் அதிகாரியை நள்ளிரவில் சிறையில் அடைத்த போலீஸ்
விசாரணைக்கு அழைத்த போது வீட்டை பூட்டிய ஷோபனா, நள்ளிரவில் சிறையில் அடைப்பு. சிறைக்கு செல்லும் வழியில் தனக்கு லோ பிபி என கூறியதால் மருத்துவ பரிசோதனை.
வேலூரில் லஞ்ச ஒழிப்பு துறையினரால் கைது செய்யப்பட்ட பொதுப்பணித்துறை தொழில்நுட்ப கல்வி கோட்ட செயற்பொறியாளர் ஷோபனா (57) வேலூர் லஞ்ச ஒழிப்பு துறையினரின் விசாரணைக்கு பின் வேலூர் முதன்மை நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி முன் (வீட்டில்) ஆஜர்படுத்தப்பட்டு 15 நாள் நீதிமன்ற காவலில் வேலூர் தொரப்பாடியில் உள்ள பெண்கள் தனிச்சிறையில் நேற்று நள்ளிரவு அடைக்கப்பட்டார்.
53 ஆண்டுக்கு பிறகு மீண்டும் மீனாட்சி அம்மன் கோயிலில் பூஜை மேற்கொள்ளும் மதுரை ஆதீனம்
வேலூர், திருவண்ணாமலை உட்பட 6 மாவட்டத்தில் உள்ள அரசு கல்லூரிகளின் பொதுப்பணித்துறை தொழில்நுட்ப கல்வி கோட்ட செயற்பொறியாளராக உள்ள ஷோபனா (57), என்பவர் ஒப்பந்ததாரர்களின் நிதியை விடுவிக்க லஞ்ச பெறுவதாகவும் அதன் மூலம் வேலூர் மற்றும் ஒசூரில் உள்ள வீட்டில் கடந்த மாதம் 03.11.2021 வேலூர் லஞ்ச ஒழிப்பு துறையினர் திடீர் சோதனை செய்ததில் வேலூரில் அவர் தங்கியிருந்த இடத்தில் இருந்து உரிய ஆவணம் இல்லாத 21 லட்சம் ரொக்கம் மற்றும் வங்கி காசோலைகள், காரில் இருந்து 5 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அதேபோல ஒசூரில் உள்ள அலரது வீட்டில் இருந்து 2 கோடியே 27 லட்சத்தி 75 ஆயிரத்தி 300 ரூபாய் ரொக்கப்பணம், 3 லட்சத்தி 92 ஆயிரம் மதிப்பிலான காசோலைகள், 27 லட்சத்தி 98 ஆயிரம் ரூபிய்க்கான வங்கி வைப்பு சான்றிதழ்கள் கைபற்றப்பட்டது. இதற்க்கு உரிய ஆவணங்கள் இல்லாதாதல் செயற்பொறியாளர் ஷோபனா மீது கடந்த 27 ஆம் தேதி வழக்கு பதிவு செய்த வேலூர் லஞ்ச ஒழிப்பு துறையினர் நேற்று அவரை கைது செய்து வேலூர் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணைக்கு பின் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டு வேலூர் பெண்கள் தனிச்சிறையில் அடைக்கப்பட்டார்.
ஒசூர் வீட்டில் இருந்த செயற்பொறியாளர் ஷோபனாவை விசாரணைக்கு அழைக்க லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் அழைத்த போது நீண்ட நேரம் கதவை திறக்க செய்துள்ளார். பின்னர் ஒசூரில் இருந்து பெண் காவலர்கள் வரவழைக்கப்பட்டு பேச்சுவார்த்தை நடத்தி பின்னர் அவரை கைது செய்து வேலூர் லஞ்ச ஒழிப்பு துறை அலுவலகத்துக்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
தருமபுரி: இடிந்து விழும் நிலையில் இருளர் குடியிருப்பு - புதுப்பித்து தர முதலமைச்சருக்கு கோரிக்கை
பின்னர் அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க அழைத்து சென்ற போது தனக்கு லோ பிபி என்றும் மயக்கம் வருவதாகவும் கூறியுள்ளார். பின்னர் அவரை மருத்துவர்கள் பரிசோதித்ததில் உடல் நிலை சீராக இருப்பதாக கூறியதை அடுத்து சிறையில் அடைக்கப்பட்டார். அரசின் உயர் பதவியில் உள்ள அரசு என் அதிகாரி ஒருவர் லஞ்ச வழக்கில் கைதாகி சிறை சென்ற சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுதியது.
பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுமியை தரக்குறைவாக பேசியதாக போலீஸ் மீது புகார்