மேலும் அறிய
Advertisement
லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் சிக்கிய நாட்டுத்துப்பாக்கி-உத்தரபிரதேசத்தை சேர்ந்த ஆவின் அதிகாரி கைது
’’உத்தரபிரதேசத்தை சேர்ந்த மகேந்திரபால் தமிழகத்தில் பல்வேறு அரசுத்துறைகளில் பணியாற்றியவர்’’
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கழிஞ்சூர் பகுதியை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன், இவர் வேலூர் ஆவின் நிறுவனத்துக்கு ஒப்பந்த அடிப்படையில் ஆட்களை அனுப்பிவைக்கும் ஒப்பந்தம் பெற்று, ஆட்களை ஆவினில் பல்வேறு பணிகளுக்கு அனுப்பி வருகிறார். இவர்களுக்கான ஊதியத்தை ஆவின் நிறுவனத்திடம் இருந்து காசோலையாக பெற்று அதிலிருந்து தன்னிடம் பணியாற்றுவோருக்கு ஊதியம் வழங்கி வருகிறார். ஆவினில் இவர் ஒப்பந்த அடிப்படையில் அனுப்பிய ஆட்களுக்கான கடந்த சில மாதங்களுக்கான ஊதிய நிலுவை தொகை இருந்து வந்துள்ளது.
இதுவரையிலான நிலுவை தொகையான 5 லட்சத்து 23 ஆயிரத்தை வழங்க கோரி வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள ஆவின் நிறுவன தலைமையங்கத்தின், உதவி பொது மேலாளராக பணியாற்றி வரும் மகேந்திரமால் (57) என்பவரிடம் பலமுறை கேட்டு வந்துள்ளார் ஜெயசந்திரன். ஆனால் பல நாட்களாக தாமதப்படுத்திய நிலையில், 5 லட்சத்து 23 ஆயிரம் நிலுவை தொகைக்கான காசோலையை வழங்க உதவி பொது மேலாளர் மகேந்திரமால், நிலுவை தொகையின் அளவில் பெர்சன்டேஜ் அடிப்படையில் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து லஞ்சம் கொடுக்க விரும்பாத ஒப்பந்ததாரர் ஜெயச்சந்திரன் வேலூர் லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளித்துள்ளார். புகாரை பெற்று கொண்ட லஞ்ச ஒழிப்பு துறையினர் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக்களை ஜெயச்சந்திரனிடம் கொடுத்து அனுப்பியுள்ளனர். இதனையடுத்து ஒப்பந்ததாரர் ஜெயச்சந்திரன் நேற்று ஆவின் உதவி பொது மேலாளர் அலுவகத்தில் வைத்து மகேந்திரமாலிடம், காசோலையை அனுமதிக்க ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை லஞ்சமாக கொடுத்த போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறை ஆய்வாளர் ரஜினி தலைமையிலான லஞ்ச ஒழிப்பு துறையினர் குழு மகேந்திரமாலை சுற்றுவலைத்து கையும் களவுமாக பிடித்து கைது செய்து உள்ளனர். மேலும் லஞ்சமாக பெற்ற 5 ஆயிரம் ரூபாயையும் பறிமுதல் செய்தனர்.
இதனையடுத்து மகேந்திரமால் வசித்து வரும் சத்துவாச்சாரியில் உள்ள வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பின்புறம் தென்றல் நகரில் உள்ள வீட்டை சோதனை செய்த போது வீட்டில் உரிமம் இல்லாத பழைய நாட்டு கைதுப்பாக்கி ஒன்றும் மற்றும் 6 பெரிய தோட்டாக்கல், 2 சிறிய தோட்டாக்களையும் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் கைது செய்யப்பட்ட மகேந்திரமாலிடம் தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காலை 11.00 மணிக்கு தொடங்கிய சோதனை இரவு 9.30.மணி வரை நீடித்தது. லஞ்ச ஒழிப்பு துறையினரால் கைது செய்யப்பட்ட ஆவின் அதிகாரியின் வீட்டில் துப்பாக்கி மற்றும் தோட்டா கைபற்றப்பட்டது வேலூரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் லஞ்ச ஒழிப்பு துறையினரால் கைதான மகேந்திரபால் (57) உத்திரபிரத்ச மாநிலத்தை சேர்ந்தவர் என்றும், தமிழகத்தில் பல துறைகளில் பணியாற்றி ஓய்வு பெரும் வயதில் லட்சம் ரூபாய் ஊதியத்தோடு வேலூர் ஆவின் உதவி பொது மேலாளராக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
க்ரைம்
சென்னை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion