தற்கொலைக்குத் தூண்டிய திமுக கவுன்சிலர் மீது வழக்குப்பதிவு! விரையும் தனிப்படை!!
ராஜசேகரன் தற்கொலைக்கு காரணமான திமுக ஒன்றிய குழு உறுப்பினர் ஹரி மீது எஸ்.சி., எஸ்,டி., பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டம் இராமநாயினிகுப்பம் கிராம ஊராட்சி செயலாளர் தற்கொலை விவகாரத்தில் திமுக கவுன்சிலர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டம் ஒடுக்கத்தூர் அடுத்த இராமநாயினிகுப்பம் கிராம ஊராட்சி செயலாளராக இருந்தவர் அதே பகுதியை ராஜசேகர்(39). இவர் நேற்று இரவு கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். அக்கடிதத்தில்,"மனைவி காந்திமதி என்னை மன்னித்துவிடு, நான் உன்னைவிட்டு போகிறேன். குழந்தையை பத்திராம பார்த்துக்கொள், எனது இந்த முடிவுக்கு கவுன்சிலர் அரிதான் காரணம் வேறு யாரும் காரணம் இல்லை என குறிப்பிட்டுள்ளார்"
மேலும் ஊராட்சி வரும் நிதியை தனக்கு வழங்க வேண்டும் என கவுன்சிலர் அரி தொடர்ந்து வற்புறுத்தி வந்ததாகவும். ராஜசேகர் தனது தம்பிக்கு ரேசன் கடையில் வேலை வாங்கி தருவதாக 2 1/2 லட்சம் பணம் பெற்ற கவுன்சிலர் அரி வேலை வாங்கி தராமல் அலைக்கழித்ததாகவும். பணத்தை திரும்பி கேட்ட போது மிரட்டியதாகவும், ஒழித்துவிடுவேன், வேலையில் இருந்து தூக்கி விடுவேன் என கூறியுள்ளார். இதன் காரணமாக ஊராட்சி செயலாளர் ராஜசேகர் உயிரிழந்ததாக உறவினர்கள் வேப்பங்குப்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக வேப்பங்குப்பம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் ராஜசேகரன் தற்கொலைக்கு காரணமான திமுக ஒன்றிய குழு உறுப்பினர் ஹரி மீது எஸ்.சி., எஸ்,டி., பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. திமுக கவுன்சிலர் ஹரியை கைது செய்ய தனிப்படை விரைந்துள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்