மேலும் அறிய
ஆம்பூரில் நான்கு நாட்களில் திருமணம் நடக்க உள்ள நிலையில் இளைஞர் மீது ஆசிட் வீசப்பட்டதால் பரபரப்பு..!
திருமணத்துக்கு இன்னும் நான்கு நாட்கள் உள்ள நிலையில் , தொழிலாளி ஒருவரை அடையாளம் தெரியாத கும்பல் அமிலம் வீசி முகத்தை சிதைத்துள்ள சம்பவம் ஆம்பூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
![ஆம்பூரில் நான்கு நாட்களில் திருமணம் நடக்க உள்ள நிலையில் இளைஞர் மீது ஆசிட் வீசப்பட்டதால் பரபரப்பு..! Unidentified person pour acid on shoe company worker at Ambur on tuesday ஆம்பூரில் நான்கு நாட்களில் திருமணம் நடக்க உள்ள நிலையில் இளைஞர் மீது ஆசிட் வீசப்பட்டதால் பரபரப்பு..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/08/18/42490aacb96c5aee3d60fe50f96dfe28_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
அமிலவீச்சில் பாதிக்கப்பட்ட ஷமீல்_அஹமத்
ஆம்பூர் அருகே தனியார் தோல் தொழிற்சாலை ஊழியர் மீது அமிலம் வீச்சு , அடையாளம் தெரியாத நபர்களுக்குத் தேடுதல் வேட்டை .
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் கே.எம். நகர் அருகே உள்ள ஆயிஷா-பி நகர் பகுதியைச் சேர்ந்தவர் அமானுல்லா, இவரது மகன் ஷமீல் அஹமத் (28) இவர் பகுதியிலுள்ள ஒரு தனியார் காலணி தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார் வரும் திங்கட்கிழமை சென்னையைச் சேர்ந்த உறவுக்கார பெண்ணுடன் ஷமீல் அஹமதுவுக்கு திருமணத்துக்கு நடக்கவுள்ளது .
இந்நிலையில் நேற்று மாலை தொழிற்சாலைக்கு பணிக்குச் சென்று வீடு திரும்பிய அவர், வீட்டின் அருகாமையில் உள்ள நண்பர்களை பார்ப்பதற்காக சென்று கொண்டுஇருந்தார் . அப்பொழுது திடீரென இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் மறைத்து வைத்திருந்த ஆசிட்டை ஷமீல் அஹமது மீது ஊற்றினர் இதில் அவரின் முகம் மற்றும் தோள்பட்டை பகுதி காயம் ஏற்பட்டது. அதிர்ச்சியில் அங்கேயே சுருண்டு விழுந்த ஷமீலை , அப்பகுதி மக்கள் மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர் பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் சி.எம்.சி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார் .
![ஆம்பூரில் நான்கு நாட்களில் திருமணம் நடக்க உள்ள நிலையில் இளைஞர் மீது ஆசிட் வீசப்பட்டதால் பரபரப்பு..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/08/18/6d574dbc94c0b866da6ead38ad8da29b_original.jpg)
மேலும் படிக்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்: செங்கோட்டையில் பறக்கும் தேசியக்கொடி நெய்யப்பட்டது இங்குதான்.. குடியாத்தம் முதல் செங்கோட்டை வரை.. கொடியின் கதை..!
அமிலம் வீச்சில் காயமடைந்த ஷமீலுக்கு முகம் மற்றும் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டுள்ளது , இதனால் அவருக்கு 3 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டு தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் உள்ளார் . இன்னும் இரண்டு நாட்களில் அவர் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவர் என்று தெரிவித்தனர். இதுகுறித்து ஆம்பூர் துணகண்காணிப்பாளர் சரவணன் தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று வழக்கு விசாரணை மேற்கொண்டனர் அப்போது அவர் வீட்டின் அருகாமையில் அடையாளம் தெரியாத நபர்கள் அமிலம் கொண்டுவந்த கேனை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
![ஆம்பூரில் நான்கு நாட்களில் திருமணம் நடக்க உள்ள நிலையில் இளைஞர் மீது ஆசிட் வீசப்பட்டதால் பரபரப்பு..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/08/18/200bf2c18414d0e3746b040aef0fc2cf_original.jpg)
திருமணத்துக்கு இன்னும் நான்கு நாட்கள் உள்ள நிலையில், தொழிலாளி ஒருவரை அடையாளம் தெரியாத கும்பல் அமிலம் வீசி முகத்தை சிதைத்துள்ள சம்பவம் ஆம்பூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
![ஆம்பூரில் நான்கு நாட்களில் திருமணம் நடக்க உள்ள நிலையில் இளைஞர் மீது ஆசிட் வீசப்பட்டதால் பரபரப்பு..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/08/18/9af41481812e7a7b8b715507aaf25204_original.jpg)
ஆம்பூர் நகரக் காவல் துறையினர், அந்த அடையாளம் தெரியாத குற்றவாளிகள் மீது வழக்குப் பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராகளை ஆய்வு செய்து குற்றவாளிகளிகளை தேடி வருகின்றனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
கல்வி
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion