மேலும் அறிய

ஆரணி அருகே நேரடி நெல் கொள்முதல் மையத்தில் விவசாயிகளிடம் லஞ்சம் கேட்ட அலுவலர் - விவசாயிகள் தர்ணா

ஆரணியில் உள்ள நேரடி நெல் கொள்முதல் மையத்தில் விவசாயிகளிடம் லஞ்சம் கேட்ட அலுவலரை கண்டித்து விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த சேவூர் ஊராட்சிக்குட்பட்ட சாரணர்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர்கள் விவசாயிகள் சுப்பிரமணி வயது ( 35), ரஞ்சித் வயது (36) உட்பட்ட 6 நபர்கள் இவர்களுடைய  சொந்த நிலத்தில் விலையவைத்த கோ-51 என்ற நெல் ரகத்தை சாகுபடி செய்து அதனை மூட்டையாக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில்
கொடுப்பதற்காக  ஆரணி அருகே உள்ள அரியப்பாடி கிராமத்தில் இயங்கி வரும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பதிவு செய்து வைத்துள்ளனர். அதனை இன்று நெல் மூட்டைகளை கொண்டு வரலாம் என்று (TPC) அதிகாரிகள் தெரிவித்துள்ளாதாக கூறப்படுகின்றன. அதனைத்தொடர்ந்து விவசாயிகள் சுப்பிரமணி
மற்றும் ரஞ்சித் ஆகியோருக்கு தங்களின் விவசாய நிலத்தில் அறுவடை செய்த 116 நெல் மூட்டைகளையும் டிராக்டர் மூலம் அரசு நேரடி கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

ஆரணி அருகே நேரடி நெல் கொள்முதல் மையத்தில் விவசாயிகளிடம் லஞ்சம் கேட்ட அலுவலர் -  விவசாயிகள் தர்ணா

அப்போது அங்கு நெல்முட்டைகளை கீழே இறக்குங்கள் அதனை உடனடியாக எடைப்போட வேண்டும் என எடை போடுபவர்கள் மற்றும் பணியில் இருந்த அதிகாரியும், மூட்டையை கீழே இறக்கிய விவசாயிகளை அதிகாரி தனியாக அழைத்து நெல் எடை போடுவதற்கு ஒரு கிலோ நெல்லிற்க்கு ஒரு ரூபாய் லஞ்சமாக தர வேண்டும் என்று விவசாயிகளிடம் அதிகாரிகள் கேட்டுள்ளனர். இதனை கேட்ட விவசாயிகள் அதிர்ச்சியடைந்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கீழே இறங்கி வைத்து இருந்த 166 நெல் மூட்டைகளையும்  உடனடியாக டிராக்டரில் ஏற்றி அதனை  ஆரணி கோட்டாச்சியர் அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். மேலும் ‌விவசாயிகள் திடிரென கோட்டாச்சியர் அலுவலகம் வளாகம் முன்பு டிராக்டரை குறுக்கே நிறுத்தி விவசாயிகள் அனைவரும் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு தங்களுடைய நெல்லிற்கு நாங்கள் லஞ்ச தரமாட்டோம் அதற்கு உரிய விலை வேண்டும் என்றும்,

ஆரணி அருகே நேரடி நெல் கொள்முதல் மையத்தில் விவசாயிகளிடம் லஞ்சம் கேட்ட அலுவலர் -  விவசாயிகள் தர்ணா

உரிய பதில் கிடைக்கும் வரையில் காத்திருக்க போவதாக விவசாயிகள் தெரிவித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் அலுவலகத்தில் இருந்த உதவி அலுவலர்கள் அங்கு விரைந்து வந்தனர் வருவாய் கோட்டாட்சியரை நேரடியாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதனை தொடர்ந்து விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.  திமுக ஆட்சியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் கொண்டு வரும் நெல் மூட்டைகளை முறையாக கொள்முதல் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உங்கள் பகுதியில் உள்ள குறைகள் பற்றி நீங்கள் ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

AFG Vs BAN, T20 Worldcup: வங்கதேச புலிகளை வேட்டையாடிய ஆப்கானிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி - ஆஸ்திரேலியா வெளியேற்றம்

TN Assembly Session LIVE: திட்டமிட்டு கலவரத்தை ஏற்படுத்த அதிமுக உறுப்பினர்கள் முயற்சி - முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு

Breaking News LIVE: ‘கேரளா' மாநிலத்தின் பெயரை ‘கேரளம்' என மாற்றும் தீர்மானம் அம்மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றம்!

Julian Assange Is Free: விக்கி லீக்ஸ் நிறுவனர் ஜுலியன் அசாஞ்சே விடுதலை - 1901 நாள் சிறைவாசம் முடிவடைந்தது எப்படி?

metaverse

வீடியோ

Accident News :  BIKE-ல் மோதிய பேருந்து..தூக்கி வீசப்பட்ட இளைஞர் பதற வைக்கும் CCTV காட்சிNEET Exam  : நீட் மறு தேர்வு..எழுத வராத மாணவர்கள்! நடந்தது என்ன?Amudha IAS Transfer? : இப்படி பண்ணிட்டிங்களே. அமுதா IAS Transfer? அப்செட்டில் ஸ்டாலின்!Trichy Surya |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
AFG Vs BAN, T20 Worldcup: வங்கதேச புலிகளை வேட்டையாடிய ஆப்கானிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி - ஆஸ்திரேலியா வெளியேற்றம்
AFG Vs BAN, T20 Worldcup: வங்கதேச புலிகளை வேட்டையாடிய ஆப்கானிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி - ஆஸ்திரேலியா வெளியேற்றம்
TN Assembly Session LIVE: திட்டமிட்டு கலவரத்தை ஏற்படுத்த அதிமுக உறுப்பினர்கள் முயற்சி - முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு
TN Assembly Session LIVE: திட்டமிட்டு கலவரத்தை ஏற்படுத்த அதிமுக உறுப்பினர்கள் முயற்சி - முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு
Breaking News LIVE: ‘கேரளா' மாநிலத்தின் பெயரை ‘கேரளம்' என மாற்றும் தீர்மானம் அம்மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றம்!
Breaking News LIVE: ‘கேரளா' மாநிலத்தின் பெயரை ‘கேரளம்' என மாற்றும் தீர்மானம் அம்மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றம்!
Julian Assange Is Free: விக்கி லீக்ஸ் நிறுவனர் ஜுலியன் அசாஞ்சே விடுதலை - 1901 நாள் சிறைவாசம் முடிவடைந்தது எப்படி?
Julian Assange Is Free: விக்கி லீக்ஸ் நிறுவனர் ஜுலியன் அசாஞ்சே விடுதலை - 1901 நாள் சிறைவாசம் முடிவடைந்தது எப்படி?
Delhi Water Crisis: தண்ணீர் கொடுக்காத ஹரியானா.. தொடர் உண்ணாவிரதத்தால் டெல்லி அமைச்சர் மருத்துவமனையில் அனுமதி!
தண்ணீர் கொடுக்காத ஹரியானா.. தொடர் உண்ணாவிரதத்தால் டெல்லி அமைச்சர் மருத்துவமனையில் அனுமதி!
ஐடி ஊழியர் மாயம்.. போதையில் உளறிக்கொட்டிய நண்பர்கள்.. தகராறில் நண்பனை கொன்ற கொடூரம்

Fishermen Arrest: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 10 மீனவர்கள் கைது - இலங்கை கடற்படை நடவடிக்கையால் அதிர்ச்சி

Anbumani speech : திமுகவை ஒழிக்க எம்.ஜி.ஆர் விரும்பினார்.. அதிமுகவிடம் ஆதரவு கேட்ட அன்புமணி
திமுகவை ஒழிக்க எம்.ஜி.ஆர் விரும்பினார்.. அதிமுகவிடம் ஆதரவு கேட்ட அன்புமணி
Embed widget