மேலும் அறிய
மாற்றுத்திறனாளிகளுடன் அமர்ந்து உணவு...மக்களை கவர்ந்த மாவட்ட ஆட்சியர்
தனது மகனின் முதல் பிறந்தநாள் காரணமாக மாற்றுத்திறனாளிகளுக்கு மதிய உணவை ஏற்பாடு செய்திருந்தார்.

மாற்றுத்திறனாளிகளுடன் அமர்ந்து உணவருந்திய ஆட்சியர்
திருப்பத்தூர் மாவட்ட அட்சியர் மாற்றுத்திறனாளிகளுடன் அமர்ந்து உணவு அருந்தினார். ஆட்சியரின் இந்த செயல் அம்மாவட்ட மக்களை வெகுவாக கவர்ந்து, பாராட்டையும் தெரிவித்தனர்.
மகனின் முதல் பிறந்தநாள் காரணமாக மாற்றுத்திறனாளி முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கு உணவு ஏற்பாடு செய்திருந்த பெற்றோர். மாற்றுத்திறனாளிகளுக்கு உணவு பரிமாறி மாற்றுத்திறனாளிகளுடன் அமர்ந்து மாவட்ட ஆட்சியர் உணவு சாப்பிட்டார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆட்சியர் அரங்கில் வாரந்தோறும் செவ்வாய் கிழமை திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு நலதிட்ட உதவிகள் வழங்குவது வழக்கம். இந்த நிலையில் இன்று 116 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது.

இந்நிலையில் கேத்தாண்டப்பட்டி பகுதியை சேர்ந்த பிரவீன், சாவித்திரி என்பருடைய மகனான அஸ்வந்த் என்பவருக்கு முதல் பிறந்தநாள் காரணமாக மாற்றுத்திறனாளிகளுக்கு மதிய உணவை ஏற்பாடு செய்திருந்தார். அதனை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் மாற்றுத்திறனாளிகளுக்கு பரிமாறினார்.
மேலும், மாற்றுத்திறனாளிகளுடன் அமர்ந்து மாவட்ட ஆட்சியரிடம் உணவு சாப்பிட்டார். இந்தச் சம்பவத்தால் மாற்றுத்திறனாளிகள் மாவட்ட ஆட்சியரை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement


646
Active
28426
Recovered
157
Deaths
Last Updated: Sat 12 July, 2025 at 10:55 am | Data Source: MoHFW/ABP Live Desk
தலைப்பு செய்திகள்
அரசியல்
கல்வி
கல்வி
அரசியல்
Advertisement
Advertisement