மேலும் அறிய
Advertisement
2 வயதுக்கு குறைவான காளைகளை எருது விடும் திருவிழாவில் பங்கு கொள்ள வைக்க கூடாது - திருப்பத்தூர் ஆட்சியர்
இரண்டு மணிக்கு மேல் காளைகள் விடப்பட்டால் காளைகள் வருவாய் துறைக்கு சொந்தம்! உரிமையாளர் மீது வழக்கு பதிவு! எருது விடும் ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு!
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருப்பத்தூர் மாவட்டத்தில் எருது விடும் திருவிழா குறித்து ஆலோசனை கூட்டம் ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.
அப்போது ஆலோசனை கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன்
எருது விடும் திருவிழாவில் இரண்டு மணிக்கு மேல் காளைகளை அவிழ்த்து விட்டால் அதனை வருவாய்த் துறையினர் பிடித்துக் கொண்டு வந்து விடுவார்கள். மேலும் காளைகள் வருவாய் துறைக்கு சொந்தமாகும். மேலும் இரண்டு மணிக்கு மேல் எருதுகள் விடும் உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும்.
மேலும், திருவிழாவில் பங்கு கொள்ளும் காளைகளின் உடல் தகுதி சான்றிதழ் கால்நடை மருத்துவரிடம் கட்டாயம் பெற வேண்டும்.
காளைகளின் கொம்புகளின் நுனியில் பிளாஸ்டிக் குப்பிகள் அனிய வேண்டும், காளைகளுக்கு போதை பொருட்களை குடிக்க வைக்க கூடாது. காளைகளின் கண்களில் மிளகாய் பொடி தூவ கூடாது. காளைகளின் வால் பகுதியில் கிளிப் போட கூடாது, காளைகளின் வயிற்று பகுதியில் கயிற்றால் இறுக்கி கட்ட கூடாது. 2 வயதுக்கு குறைவான காளைகளை எருது விடும் திருவிழாவில் பங்கு கொள்ள வைக்க கூடாது அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான், மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, மற்றும் அரசு துறை சார்ந்த அதிகாரிகள், காளைகளின் உரிமையாளர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், எருது விடும் திருவிழா குழு நிர்வாகிகள் உட்பட பலர் என பலர் கலந்து கொண்டனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
சென்னை
உலகம்
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion