மேலும் அறிய
Advertisement
சிறந்த காவல் நிலையமாக திருப்பத்தூர் நகர காவல் நிலையம் தேர்வு - டிஜிபி சங்கர் ஜிவால் பாராட்டு
சிறந்த காவல் நிலையத்திற்கான முதலமைச்சர் கேடயத்தை வழங்கி காவல்துறை இயக்குனர் சங்கர் ஜிவால் பாராட்டு.
திருப்பத்தூர் மாவட்டத்தில் சிறந்த காவல் நிலையமாக திருப்பத்தூர் நகர காவல் நிலையம் தேர்வானது. சிறந்த காவல் நிலையத்திற்கான முதலமைச்சர் கேடயத்தை வழங்கி காவல்துறை இயக்குனர் சங்கர் ஜிவால் பாராட்டு தெரிவித்தார்.
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இருந்து பல்வேறு நடைமுறைகளில் சிறப்பாக செயல்பட்ட சிறந்த காவல் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டிருந்தன.
இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் இருந்து திருப்பத்தூர் நகர காவல் நிலையம் மாவட்டத்தின் சிறந்த காவல் நிலையமாக தேர்வு செய்யப்பட்டது. மேலும் அதற்கான முதலமைச்சர் கேடயத்தை 22.072024 அன்று சென்னையில் உள்ள தலைமை இயக்குனர் அலுவலகத்தில் தமிழக காவல்துறை இயக்குனர் சங்கர் ஜிவால் திருப்பத்தூர் நகர காவல் நிலைய ஆய்வாளர் பேபி (பொறுப்பு) அவர்களிடம் கேடயம் பரிசாக வழங்கி பாராட்டினார்.
சிறப்பாக பணியாற்றிய திருப்பத்தூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் செந்தில், திருப்பத்தூர் நகர காவல் ஆய்வாளர் மற்றும் காவலர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான், மாவட்ட காவல் அலுவலகத்திற்கு நேரில் அழைத்து பாராட்டினார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
திருவண்ணாமலை
தமிழ்நாடு
ஆட்டோ
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion