மேலும் அறிய
Advertisement
“வாயில்லா ஜீவனை கொல்ல எப்படி மனசு வரும்”... தீவனத்தில் விஷம்; இறந்த மாடுகளை பார்த்து கதறி அழுத உரிமையாளர்
ஜோலார்பேட்டை அருகே மாட்டு தீவனத்தில் விஷம் கலந்த மர்ம நபர். ஐந்து மாடுகள் உயிரிழப்பு. கதறி அழுந்த மாட்டின் உரிமையாளர்.
ஜோலார்பேட்டை அருகே மர்மநபர் மாட்டு தீவனத்தில் விஷம் கலந்ததால் 5 மாடுகள் பரிதாபமாக உயிரிழந்தது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த அன்னாண்டப்பட்டி அண்ணாவட்டம் பகுதியைச் சார்ந்த ராஜேந்திரன் (65) இவர் லோன் எடுத்து மூன்று லட்சம் மதிப்பிலான ஐந்து மாடுகளை வளர்த்து வந்தார்.
இந்த நிலையில் வழக்கம்போல் நேற்று இரவு வீட்டின் பின்புறம் உள்ள நிலத்தில் மாட்டுக்கான தீவனம் நொய்யை வேகவைத்து மாட்டிற்கு வைத்துவிட்டு வீட்டிற்க்கு தூங்க சென்று உள்ளார். இதனை அறிந்த மர்ம நபர் அந்த நொய்யில் விஷத்தை கலந்து வைத்துள்ளார் இதனை அந்த ஐந்து மாடுகளும் சாப்பிட்டுள்ளது.
பின்னர் காலையில் எழுந்து பார்த்தபோது அவருடைய ஐந்து மாடுகளும் கீழே விழுந்து கிடந்தன. இதனை பார்த்து அதிர்ந்த போன ராஜேந்திரன் உடனடியாக கால்நடை மருத்துவருக்கு தகவல் தெரிவித்தார் பின்னர் விரைந்து வந்து பரிசோதித்த மருத்துவர்கள் மாடு ஏற்கனவே இறந்து விட்டதாக தகவல் தெரிவித்துள்ளார்.
மேலும் ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார் இந்த சம்பவ குறித்து ஜோலார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த ஐந்து மாடுகளை நம்பி தான் குடும்பத்தினர் பிழைப்பு நடத்தி வந்ததாகவும் இனிமேல் வாழ்வாதாரத்திற்கு என்ன செய்யப் போகிறேன் என மாட்டின் உரிமையாளர் கத்தி கதறி அழுத சம்பவம் அனைவரையும் கண்கலங்க செய்தது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
தமிழ்நாடு
தமிழ்நாடு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion