மேலும் அறிய
Advertisement
இந்து, முஸ்லீம், கிறிஸ்டியன்... ஒரே மேடையில் 16 ஜோடிகளுக்கு நடந்த திருமணம்
16 ஜோடிகளுக்கும் தாலி, புடவை, மெத்தை, பாத்திரங்கள் என திருமண சீர்வரிசைகளை ஜேசிஐ அலுமினி சங்க நிர்வாகிகள் வழங்கினர்.
திருப்பத்தூர்: வாணியம்பாடி ஜேசிஐ கிளப் சேவை அமைப்பின் சார்பில் 16 ஜோடிகளுக்கு ஒரே மேடையில் திருமணம் நடத்தி அனைவருக்கும் சீர் வரிசை வழங்கப்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே ஜேசிஐ கிளப் சேவை அமைப்பின் சார்பில் 16 ஜோடிகளுக்கு ஒரே மேடையில் திருமணம் முடித்து அனைவருக்கும் சீர் வரிசை வழங்கும் நிகழ்ச்சி தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் இந்து மதத்தை சார்ந்த 12 ஜோடிகளும் இந்து சமர்தாய முறைப்படி திருமணம் நடைபெற்றது. கிறிஸ்த்துவ மதத்தை சார்ந்த இரண்டு ஜோடிகளுக்கு கிறிஸ்த்துவ முறைப்படி தேவாலயத்தில் திருமணம் முடித்த பின்னர் மேடையில் சிறப்பு பிரார்த்தனை நடத்தினார்.
இதே போல் இஸ்லாம் மதத்தை சார்ந்த இரண்டு ஜோடிகள் மசூதியில் இசுலாமிய முறைப்படி திருமணம் முடித்துக்கொண்டு மேடைக்கு வந்தனர். அங்கே 16 ஜோடிகளுக்கும் தாலி, புடவை, மெத்தை, பாத்திரங்கள் என திருமண சீர்வரிசைகளை ஜேசிஐ அலுமினி சங்க நிர்வாகிகள் வழங்கினர்.
நிகழ்ச்சியில் வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் கோ.செந்தில் குமார், நகரமன்ற தலைவர் உமாபாய் சிவாஜி கணேசன் ஜேசிஐ கிளப் சேவை அமைப்பின் நிர்வாகிகள், மணமக்களின் பெற்றோர்கள், உறவினர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் மதிய உணவு(விருந்து) வழங்கப்பட்டது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
இந்தியா
சென்னை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion