திருவண்ணாமலையில் இன்று 1.24 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு...!
திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று 1004 முகாம்களில் 1 லட்சத்து 24 ஆயிரம் தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று நடைபெற்று வரும் மெகா கொரோனா தடுப்பூசி முகாகாமில் வட்டாரம்வாரியாக 100 தடுப்பூசி முகாம்கள் நடத்த மாவட்ட ஆட்சித்தலைவரின் அறிவுறுத்தலின்படி திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் இன்று 1004 முகாம்களில் தடுப்பூசி போடப்பட உள்ளது. இந்த கொரோனா தடுப்பூசியானது 100% பாதுகாப்பானது. ஆகவே முதல் தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் 2 வது தடுப்பூசி நிலுவையில் இருந்தால் அவர்களும் இந்த முகாமில் இரண்டாவது தவணை தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.
முதல் தவணையினை போடாதவர்கள் அனைவரும் இந்த வாய்ப்பினை பயன்படுத்திகொண்டு தங்களும் தங்கள் குடும்பத்திலுள்ள 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் குடும்பமாக வந்து தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். கொரோனாவை தடுப்பதற்கு நம் கையில் உள்ள ஆயுதம் தடுப்பூசியே ஆகும். குறிப்பாக இரத்த அழுத்தம், சர்க்கரைநோய் உள்ளவர்களும் தடுப்பூசியினை போட்டுக்கொள்ள வேண்டும் என்பது அவசியமானது.
இன்று 1 லட்சத்து 24 ஆயிரம் தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. மாவட்டத்தில் 82 ஆயிரம் பேர் 2-வது தவணை தடுப்பூசி போடவில்லை. எனவே இன்று மாவட்டத்தில் உள்ள 860 ஊராட்சி, 10 பேரூராட்சி, 4 நகராட்சி ஆகியவற்றில் 973 இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை முகாம் நடைபெறும். 18 வயதிற்கு மேல் உள்ள அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும். ஒரு முகாமிற்கு 3 நபர்கள் பணியில் உள்ளனர்.
மேலும் ஊரக வளர்ச்சித்துறை, வருவாய் துறை, கல்வித்துறை, வேளாண்மைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம், கூட்டுறவுத்துறை அலுவலர்களும் உடன் இருந்து பணியாற்றுவார்கள். இதன் ஒரே நோக்கம் தடுப்பூசி செலுத்தி கொண்டு கொரோனா இல்லாத மாவட்டமாக மாற்ற வேண்டும். மேலும் 12 ஆம் தேதி இன்று டாஸ்மாக் விற்பனை நிலையங்களில் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு மட்டுமே விற்பனை நடைபெறும்.
"திருவண்ணாமலை நகராட்சி நடைபெற்றும் முகாம்கள்"
திருவண்ணாமலையில் நாளை 36 இடங்களில் தடுப்பூசி செலுத்தப்படுகிறது தடுப்பூசி முகாம்கள் அமைத்துள்ள இடங்கள் முத்து விநாயகர் தெரு. சித்தா மருத்துவமனை, புதுதெரு முஸ்லிம் பள்ளி, டவுன் ஹால் நகராட்சி பள்ளி சின்னக்கடை தெரு, குழந்தைகள் நல மையம் நகராட்சி ஆரம்பப்பள்ளி பேகோபுரம், தியாகி அண்ணாமலையார் அரசு மேல்நிலைப்பள்ளி வன்னியன் குளத் தெரு, சண்முக அரசு மேல்நிலைப்பள்ளி செங்கம் ரோடு, நகராட்சி நடுநிலைப்பள்ளி தாமரை நகர், நகராட்சி தொடக்கப்பள்ளி காக்கா நகர், நீயும் முன் நர்சரி பள்ளி சூர்யா நகர் இடங்களில் பொதுமக்கள் சென்று தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
அரசு சார்பில் நடவடிக்கைகளும், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலமாக நடவடிக்கை மூலமாக நடவடிக்கை எடுத்தாலும், பொதுமக்கள் முழு மூச்சுடன் தற்காப்பை மேற்கொள்வதையும், முகக்கவசம் அணிவதையும், சானிடைசர் பயன்படுத்துவதையும், சமூக விலகலையும் கடைபிடித்தால் மட்டுமே கொரோனாவை ஒழிக்க முடியும்.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )