திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் பக்தர்களுக்கு கழிவறை இல்லை.. யானை ருக்குவுக்கு மணிமண்டபம் ஏன்? விஷ்வ இந்து பரிஷத்
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்தாமல் 49 லட்சம் ரூபாய் செலவில் இறந்த யானைக்கு மணி மண்டபம் கட்டுவது எந்த வகையில் நியாயம் என இந்து பரிஷத்தினர் கேள்வி
![திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் பக்தர்களுக்கு கழிவறை இல்லை.. யானை ருக்குவுக்கு மணிமண்டபம் ஏன்? விஷ்வ இந்து பரிஷத் Thiruvannamalai Vishwa Hindu Parishad demands that the toilet doors should be kept open for the devotees on the girivalam path TNN திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் பக்தர்களுக்கு கழிவறை இல்லை.. யானை ருக்குவுக்கு மணிமண்டபம் ஏன்? விஷ்வ இந்து பரிஷத்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/14/8b37762b1142989f05c9dcd0244d2e761694695361838113_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
திருவண்ணாமலை மாவட்ட விஷ்வ இந்து பரிஷத் சங்கத்தின் சார்பில் இன்று செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அதில் கோட்ட பொறுப்பாளர் ராஜேந்திரன் மற்றும் மாவட்ட செயலாளர் ஏழுமலை உள்ளிட்ட பல நிர்வாகிகள் இதில் பங்கேற்றனர். அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மாவட்ட செயலாளர் ஏழுமலை பேசியதாவது: அண்ணாமலையார் கோவிலில் இதுவரை மூன்று யானைகள் இறந்து உள்ள நிலையில் தற்போது நான்காவது யானையும் இறந்துள்ளது. இந்த ருக்கு யானைக்கு தற்போது 49 லட்ச ரூபாய் செலவில் மணிமண்டபம் அமைக்க நேற்று பூஜை போட்டது ஏன்?. குறிப்பாக அண்ணாமலையார் கோவிலுக்கு வரும் வெளி மாநில, வெளி மாவட்ட பக்தர்கள் தங்களது வாகனங்களை நிறுத்த இடமில்லாமல் ஆங்காங்கே போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தி வைத்து செல்வதால் நகரில் கடுமையான போக்குவரத்து நெரிசல் சூழ்நிலை ஏற்படுகிறது.
மேலும், பக்தர்களுக்கான கழிப்பிட வசதி, குடிநீர் வசதி இதற்கு தீர்வு காண அண்ணாமலையார் கோவில் நிர்வாகம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலையில் இறந்த யானை ருக்குவுக்கு 49 லட்ச ரூபாய் செலவில் மணிமண்டபம் தேவையா?. பக்தர்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்த பயன்படுத்தாமல் இது போன்று கோயில் வருமானத்தை வீணடிப்பதா?. மேலும் மாட விதிகளில் முக்கிய திருவிழாக்கள் நடைபெறும் முன்பு பூஜைகள் மேற்கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டு இருந்த பலி பீடங்கள் அனைத்தும் தற்போது அகற்றப்பட்டுள்ளது. இது பக்தர்களிடையே மிகப்பெரிய வருத்தத்தையும், அதிர்ச்சியும் ஏற்படுத்தி உள்ளது. மிக விரைவில் இந்த பலி பீடங்களை அமைக்க வேண்டும். குறிப்பாக கோவிலில் முக்கிய நிகழ்வுகள் நடைபெறும் முன்பாக இந்த பலி பீடங்களுக்கு பூஜை செய்வது வழக்கமான ஒன்று.
இதனை அண்ணாமலையார் திருக்கோயில் சிவாச்சாரியார்கள் கூட கண்டு கொள்ளவில்லை. கிரிவலப் பாதையில் உள்ள கழிப்பறைகள் அனைத்தும் பௌர்ணமி நாட்களை தவிர்த்து மீதமுள்ள நாட்களில் திறக்கப்படுவதில்லை. ஆகவே அனுதினமும் கிரிவலம் மேற்கொள்ளும் ஆயிரக்கணக்கான பக்தர்களின் கழிவறை வசதிகளுக்காக கழிப்பறைகளை திறந்து வைக்க வேண்டும். இவ்வாறு பேசினார்.
மேலும், பல்வேறு வசதிகளை செய்து தருமாறு திருவண்ணாமலை மாவட்ட வி.எச்.பியினர், மாவட்ட நிர்வாகம் மற்றும் இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தனர்.
முருகன் உள்பட 4 பேரை இலங்கைக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை - மத்திய அரசு நீதிமன்றத்தில் தகவல்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)