Watch Video: மது போதையில் இருந்த டிரைவர்; பேருந்தை ஓட்டிய கண்டக்டர் - பயத்தில் அலறிய பயணிகள் - அதிர்ச்சி வீடியோ..!
வந்தவாசி அருகே அரசு பேருந்து ஓட்டுநர் மது போதையில் இருந்ததால், நடத்துனர் பேருந்தை இயக்கினார். பயத்தில் பேருந்தை நிறுத்தி இறங்கிய பயணிகள்.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் ஓட்டுநர் மதுபோதையில் இருந்ததால் நடத்துனர் பேருந்தை இயக்கினார். இதனால் பயணிகள் பயத்தில் பேருந்தை நிறுத்தி கீழே இறங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
புதுச்சேரியில் இருந்து திருப்பதிக்கு தடம் எண் 212 கொண்ட பேருந்து இயக்கப்படுகிறது. இந்த பேருந்து வந்தவாசி, காஞ்சிபுரம் வழியாக செல்கிறது. இந்நிலையில் திருப்பதியில் இருந்து பேருந்து புதுச்சேரி நோக்கி வந்துக்கொண்டிருந்தது. அப்போது பேருந்து காஞ்சிபுரம் வந்தது. இந்த பேருந்தை தரணியேந்திரன் என்ற ஓட்டுநர் இயக்கி வந்தார். இந்த பேருந்தில் 46 பயணிகள் பயணித்தனர். அப்போது பேருந்து காஞ்சிபுரத்தில் இருந்து வந்தவாசி அருகே வந்துக்கொண்டிருந்தது. ஆனால் பேருந்து பல்வேறு இடங்களில் தாறுமாறாக ஓடியது, பள்ளங்கள், மேடுகள் என அனைத்து இடங்களிலும் ஒரு மாதிரியாக வேகமாக சென்றது.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே அரசு பேருந்து ஓட்டுநர் மது போதையில் இருந்ததால் நடத்துனர் பேருந்தை இயக்கி வந்ததால் பயத்தில் பேருந்தை நிறுத்தி இறங்கிய பயணிகளால் ஓட்டுநர் நடத்துனர் சஸ்பெண்ட்@abpnadu pic.twitter.com/JXX0mDvcsY
— Vinoth (@Vinoth05503970) August 22, 2022
இதனால் சந்தேகம் அடைந்த பயணிகள் பேருந்து ஓட்டுநரிடம் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட முயன்றனர். அப்போது ஓட்டுநர் மது போதையில் பேருந்து இயக்க முடியாமல் மோசமான நிலையில் இருந்தார். இதனைக்கண்ட பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். அப்போது பேருந்து வந்தவாசி நகர பகுதிக்குள் வந்த உடன் பேருந்தை நிறுத்த கோரி பேருந்தில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் கூச்சலிட்டதால் நடத்துநர் பேருந்தை வந்தவாசி கோட்டையின் பகுதியில் நிறுத்தியுள்ளார். பேருந்தை நிறுத்தியவுடன் அமர்ந்து வந்த ஓட்டுனரை காணவில்லை. இதனால் நடத்துநரிடம் பயணிகள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த வந்தவாசி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பயணிகளிடம் சமாதானம் செய்து மாற்று அரசு பேருந்தில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.பின்னர் பேருந்து நடத்துனரிடம் உரிய விசாரணை செய்தனர்.
இந்த நிலையில், பேருந்தை மதுபோதையில் இயக்கியதற்காக ஓட்டுநர் தரணேந்திரன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மேலும் அனுமதி இன்றி பேருந்தை இயக்கிய நடத்துனர் ஹோலிப்பேஸ்சும் ஆகிய இருவரையும் சஸ்பெண்ட் செய்து விழுப்புரம் மண்டல போக்குவரத்து துறை மேலாண் இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். அரசு ஓட்டுனர் குடித்து விட்டு பேருந்தை இயக்க முடியாத சூழலில் நடத்துனர் பேருந்தை இயக்கிய சம்பவம் வந்தவாசி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்