மேலும் அறிய

திருவண்ணாமலை ரயில்வே மேம்பாலம் விரைவில் திறப்பு - பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு

திருவண்ணாமலை திண்டிவனம் சாலையில் ரூ38.74 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் ரெயில்வே மேம்பால கட்டுமான பணிகளை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திருவண்ணாமலை - திண்டிவனம் சாலையில் புதிதாக ரெயில்வே மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. அதனை பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு  நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் ரெயில்வே மேம்பாலம் கட்டும் பணியை பார்வையிட அவருடைய வாகனத்தில் இருந்து இறங்கி அங்கிருந்து நடந்தே சென்று பார்வையிட்டார். பின்னர் அங்கு வந்த அதிகரிகளிடம் விரைந்து முடிக்க வேண்டும் என்று  அவர்களுக்கு அறிவுரை வழங்கினர்.  பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு, திண்டிவனம் மற்றும் திருவண்ணாமலை செல்லும் இந்த ரெயில்வே மேம்பாலம் கட்டுவதற்கு கடந்த 2018 ஆம் ஆண்டு ஒப்பந்தம் கோரப்பட்டது. அதன் மூலம் 38 கோடியே 74 லட்சத்தில் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு இந்த பணிகள் தொடங்கப்பட்டது. இந்த திட்டம் 2 ஆண்டுகளில் முடிக்க வேண்டும். ஆனால் காலதாமதமாகி உள்ளது.

திருவண்ணாமலை ரயில்வே மேம்பாலம் விரைவில் திறப்பு - பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு

இந்த பாலத்தை பொறுத்த வரையில் திருவண்ணாமலையின் மையத்தில் இருக்கிற ஒரு பாலம். தண்டரை ரெயில் நிலையம் முதல் திருவண்ணாமலை ரயில் நிலையத்திற்கு இடைப்பட்ட பகுதியில் இந்த பாலம் அமைகிறது. இரவு, பகல் என்று பாராமல் பணிகள் வேகமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. டிசம்பர் 30ஆம் தேதிக்குள் இந்த பணிகள் முடிக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது. இந்த பணிகள் முடிந்தவுடனே முதலமைச்சர்  கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு இந்த பாலத்திற்கு கூடிய விரைவில் திறப்பு விழா நடைபெறும். அதனை தொடர்ந்து பேசிய அமைச்சர் திருவண்ணாமலையில் புதிய பேருந்து ஈசானிய லிங்கம் பகுதியில் உள்ள இடத்தில் அதிமுக ஆட்சி காலத்தில் திட்டமிடப்பட்டது ஆனால்  அந்த இடத்தில் நகராட்சியின் குப்ப கிடங்கு உள்ளது. இதனால் பேருந்திற்காக வரக்கூடிய பொதுமக்கள் நோய்வாய் ஏற்பட சாத்திய கூறுகள் உள்ளன என பொதுமக்கள் என்னிடம் கூறுகின்றனர். இதனால் புதியதாக கட்டப்பட்ட உள்ள பேருந்து நிலையத்தை வேறுபகுதியில்  அமைக்கவேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வதற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர்.

திருவண்ணாமலை ரயில்வே மேம்பாலம் விரைவில் திறப்பு - பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு

போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும், மக்கள் தொகை அதிகமாக உள்ள காரணத்தினாலும், அதே நேரத்தில் நகர மக்கள் ஏற்றுக்கொள்ளும் அளவிற்கு நகருக்கு அருகில் உள்ள புறப்பகுதியில் அமைந்தால் தான் வருங்காலத்தில் பேருந்து நிலையத்தினை விரிவுபடுத்தப்படும். பேருந்து நிலையம் அமைக்க நடவடிக்கை அதன் அடிப்படையில் உபயோகத்தில் இல்லாத ரெயில் நிலையத்தை ஒட்டியுள்ள விவசாயத்துறைக்கு சொந்தமான டான்காப் நிறுவனத்திற்கு சொந்தமான சுமார் 6 ஏக்கர் இடம் மற்றும் அதை ஒட்டியுள்ள வருவாய் துறைக்கு சொந்தமான சுமார் 5 ஏக்கர் இடம் என 10 ஏக்கர் இடத்தில் புதிய பேருந்து  நிலையம் அமைந்தால் சென்னைக்கு செல்லும் சாலை, வேலூர் செல்லும் சாலை, தெற்கு பகுதி சாலகளுக்கு எளிதாக செல்ல முடியும். எனவே, இந்த இடத்தில் புதிய மத்திய பேருந்து  நிலையம் அமைப்பதற்கு துறையின் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர்  முருகேஷ், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) பிரதாப், வேலூர் கோட்ட பொறியாளர் (திட்டங்கள்) சுந்தர், உதவி கோட்ட பொறியாளர் பாபு,  மற்றும் துறை உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
DMK Meeting: விஜயை சமாளிப்பது எப்படி? உள்ளாட்சி தேர்தல் - இன்று கூடுகிறது திமுக செயற்குழு கூட்டம், ஸ்டாலின் உத்தரவு என்ன?
DMK Meeting: விஜயை சமாளிப்பது எப்படி? உள்ளாட்சி தேர்தல் - இன்று கூடுகிறது திமுக செயற்குழு கூட்டம், ஸ்டாலின் உத்தரவு என்ன?
Pushpa 2 Collection: அடங்காத வசூல்! அரண்டு போன பாலிவுட்! கோடிகளை குவிக்கும் புஷ்பா 2!
Pushpa 2 Collection: அடங்காத வசூல்! அரண்டு போன பாலிவுட்! கோடிகளை குவிக்கும் புஷ்பா 2!
Bose Venkat : நீங்க எல்லாம் விஜயை விமர்சிக்கலாமா..சாதிப் பெயரை பெருமயாக சொன்ன போஸ் வெங்கட்
Bose Venkat : நீங்க எல்லாம் விஜயை விமர்சிக்கலாமா..சாதிப் பெயரை பெருமயாக சொன்ன போஸ் வெங்கட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
DMK Meeting: விஜயை சமாளிப்பது எப்படி? உள்ளாட்சி தேர்தல் - இன்று கூடுகிறது திமுக செயற்குழு கூட்டம், ஸ்டாலின் உத்தரவு என்ன?
DMK Meeting: விஜயை சமாளிப்பது எப்படி? உள்ளாட்சி தேர்தல் - இன்று கூடுகிறது திமுக செயற்குழு கூட்டம், ஸ்டாலின் உத்தரவு என்ன?
Pushpa 2 Collection: அடங்காத வசூல்! அரண்டு போன பாலிவுட்! கோடிகளை குவிக்கும் புஷ்பா 2!
Pushpa 2 Collection: அடங்காத வசூல்! அரண்டு போன பாலிவுட்! கோடிகளை குவிக்கும் புஷ்பா 2!
Bose Venkat : நீங்க எல்லாம் விஜயை விமர்சிக்கலாமா..சாதிப் பெயரை பெருமயாக சொன்ன போஸ் வெங்கட்
Bose Venkat : நீங்க எல்லாம் விஜயை விமர்சிக்கலாமா..சாதிப் பெயரை பெருமயாக சொன்ன போஸ் வெங்கட்
Breaking News LIVE: மருத்துவ கழிவுகள் விவகாரம்; தமிழகம் வந்தது கேரள குழு
Breaking News LIVE: மருத்துவ கழிவுகள் விவகாரம்; தமிழகம் வந்தது கேரள குழு
GST Rate: எதிர்பார்த்தவர்களுக்கு ஆப்படித்த நிதியமைச்சர் - இன்சூரன்ஸ் மீதான ஜிஎஸ்டி ரத்துக்கு ”நோ” - காரணம் என்ன?
GST Rate: எதிர்பார்த்தவர்களுக்கு ஆப்படித்த நிதியமைச்சர் - இன்சூரன்ஸ் மீதான ஜிஎஸ்டி ரத்துக்கு ”நோ” - காரணம் என்ன?
GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்:  நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்: நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
Nellai Murder: ”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
Embed widget