மேலும் அறிய

திருவண்ணாமலையில் சோழர் கால நடுகல் கல்வெட்டு : தெரியவந்தது என்ன தெரியுமா?

திருவண்ணாமலையின் புதிய வரலாற்றைக் கூறும் சோழர் கால நடுகல் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

திருவண்ணாமலை நகரம் திண்டிவனம் சாலையில் உள்ள வேடியப்பன் கோயிலில் உள்ள நடுகல் கல்வெட்டு, முதலாம் பராந்தகன் கல்வெட்டு மற்றும் ஒரு வரி கல்வெட்டு ஆகியவை சோழர் காலத்தைச் சேர்ந்தது என திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவம் தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து ஆய்வு நடுவத்தின் தலைவர் பாலமுருகனிடம் பேசுகையில்..

நாங்கள் கூட்டாக இணைந்து  திண்டிவனம் சாலையில் உள்ள வேடியப்பன் கோயிலில் உள்ள நடுகல் கல்வெட்டு, முதலாம் பராந்தகன் கல்வெட்டு மற்றும் ஒரு வரி கல்வெட்டு காணச் சென்றோம். அப்போது நடுகல்லின் பின்புறம் கிபி 928 ஆண்டில் எழுதப்பட்டுள்ள கல்வெட்டில், வரலாற்றுக்கு பல புதிய தகவல்கள் தரும் செய்திகள் கிடைத்துள்ளன. இதன்படி இன்றைக்கு 1093 ஆண்டுகள் பழமை உடையதாக இக்கல்வெட்டு விளங்குகிறது. இக்கல்வெட்டில் ஸ்ரீ பராந்தகன் இருமுடி சோழனுக்கும் அவரின் மனைவியும் இப்பகுதியை ஆட்சி செய்த சிற்றரசன் வைரமேக வாணகோவரையரின் மகள் செம்பியன் மாதேவிக்கும் பிறந்தவர் கண்டராதித்த சோழர் என்று கண்டாதித்தர் பிறப்பு பற்றி இக்கல்வெட்டு கூறுகிறது .

திருவண்ணாமலையில் சோழர் கால நடுகல் கல்வெட்டு : தெரியவந்தது என்ன தெரியுமா?

இன்னும் தெளிவாக "செம்பியன் மாதேவியார் திருவயிற்றில் பிறந்த ஸ்ரீ கண்டராதிச்சன்" என்று இக்கல்வெட்டு கூறுகிறது. இதிலிருந்து பராந்தக சோழருக்கும் வைரமேக வானகோவரையர் மகளுக்கும் பிறந்தவர் கண்டராதித்தர் என்பது தெளிவாக புலனாகிறது. இருப்பினும் திருக்கோவிலூர் அருகே உள்ள கரடி என்ற ஊரில் கிபி 947-இல் எழுதப்பட்டுள்ள முதலாம் பராந்தகன் கல்வெட்டு இவருக்கும் சோழ மாதேவி என்பவரும் மகனாகப் பிறந்தவர் கண்டராதித்தர் என்று கூறுகிறது. இதிலிருந்து செம்பியன் மாதேவி சோழ மாதேவி என்னும் பெயர்கள் ஒருவரையே சுட்டுகிறது என்று கருதலாம். 

மேலும், இக்கல்வெட்டு அண்ணாமலையாருக்கு மதிய உணவு பூஜை படையலின் அதே நேரத்தில் இருபது காபாலிக துறவிகளுக்கும் உணவு கொடுக்கப்பட வேண்டும் என்பதற்காக கண்டராதித்தர் வைச்சபூண்டி என்ற ஊர் முழுவதையும் துறவிகளுக்கு கொடுத்துள்ளார். இதன் மூலம் கண்டராதித்தர் காபாலிக சைவ வழி துறவிகளையும்  ஆதரித்துள்ளார் என்று அறிய முடிகிறது. காபாலிகளர்களின் ஆச்சாரியராக அதாவது குருவாக வல்லக்கொன்றை சோமீசுவரர் கங்காளபடாரர் என்பவர் இருந்துள்ளார். இவரும் இவருடைய சீடர் வாஜஸ்பதி வக்கானி படார முதலிகளும் இவருடைய சிஷ்யர்கள் மற்றும் இந்த சிஷ்யர்களின் சிஷ்யர்கள் ஆகியோரும் பூண்டி கிராமத்தில் இருந்து கிடைக்கும் வரி பொன் மற்றும் நிலங்களை அனுபவிக்க வேண்டும் என்றும் இக்கல்வெட்டு கூறுகிறது.

திருவண்ணாமலையில் சோழர் கால நடுகல் கல்வெட்டு : தெரியவந்தது என்ன தெரியுமா?

இதிலிருந்து சைவத்தின் ஒரு பிரிவாக விளங்கிய காபாலிகம் காளாமுகம் ஆகியவை திருவண்ணாமலையில் பராந்தகன் காலத்தில் அரச ஆதரவு பெற்று சிறப்புடன் இருந்தது என்பதை அறிகிறோம். அப்பிரிவினை கண்டராதித்தர் ஆதரித்தார் என்பதையும் அறிகிறோம். வைச்ச பூண்டி கிராமத்தை காபாலிகர்களின் கையில் இருக்கும் கபால ஓட்டில் நீர் வார்த்து கண்டராதித்தர் தர்மமாக கொடுத்துள்ளார்.  காளாமுகம், காபாலிகம் ஆகிய சமய பிரிவுகள் திருவண்ணாமலை பகுதியில் பரவி விளங்கியதை இக்கல்வெட்டு உணர்த்துகிறது‌. கண்டராதித்த சோழர் வைரமேக வாணகோவரையர் குடும்பத்து இளவரசிக்கு பிறந்தவர் என்ற புதிய தகவலை இக்கல்வெட்டு கூறுகிறது. பராந்தக சோழருக்கு இருமுடி சோழன் என்ற பட்டம் இருந்தது என்பதை இக்கல்வெட்டால் அறிகிறோம்.

இந்த கல்வெட்டு அமைந்துள்ள நடுகல் சோழர்கால சிற்ப அமைதி கொண்ட நடுகல்லாகும். இதில் வீரன் தனது வலது கையில் குறுவாளும் இடது கையில் வில்லும் வைத்துக்கொண்டுள்ளார். வீரனின் தலையில் கரண்ட மகுடமும் காதில் பெரிய குண்டமும் இடுப்பில் கச்சை ஆடையும் வாள் உறையும் உள்ளது.  இரண்டு கால்களும் மடக்கி எதிரியை தாக்க ஓடுவது போல அழகுடன் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிற்பத்திற்குக் கீழ் இரண்டு வரிக்கல்வெட்டு சிதைந்த நிலையில் உள்ளது. இதில் ஒருபத்தாவது புதநாட்பாடி நாட்டு… என்று எழுத்து மட்டும் படிக்கும் படி உள்ளது. மற்றவை பொரிந்துபோயுள்ளன. 

திருவண்ணாமலையில் சோழர் கால நடுகல் கல்வெட்டு : தெரியவந்தது என்ன தெரியுமா?

இந்த கோயிலின் எதிரில் உள்ள சிறிய அளவு சிற்பத்தில் ஆண், பெண் என இரண்டு உருவாங்கள் உள்ளன. இந்த உருவாங்களின் மேல்புறத்தில் ஒரு வரி கல்வெட்டு காணப்படுகிறது. இந்த கல்வெட்டில் – ஸ்ரீமாஹேஸ்வர நம்பி என்று பொறிக்கப்பட்டுள்ளது. இந்த மாகேஸ்வர நம்பி என்பவர் சிவனின் பக்தராகலாம். 
இந்த கல்வெட்டைப் படித்தும் விளக்கம் அளித்த கல்வெட்டறிஞர்கள் சு. இராகோபால்  மற்றும் இல. தியாகராஜன், சு.ராஜவேல் ஆகியோர்கள் இந்த கல்வெட்டு அரிய புதிய செய்திகளைக் கொண்டிருக்கும் சிறப்பான கல்வெட்டும் என்றும் தெரிவித்தாக கூறினார் .

 மேலும் திருவண்ணாமலை நகரிலே கிடைத்த இந்த நடுகல் கல்வெட்டும்  பின்புறம் உள்ள கல்வெட்டும், எதிரே உள்ள கல்வெட்டும் வெவ்வேறு காலத்தியது ஆகும். இந்த கல்வெட்டுகள் மூலம் திருவண்ணாமலை கோயில் வரலாறு பற்றியும் வைச சமயப் பிரிவான கபாலிகம், காளமுகம் பற்றியும், கண்டராதித்தன் பிறப்பு பற்றியும் குறிப்பிடும் சிறப்பான கல்வெட்டாகும்.  இந்த கல்வெட்டுகளை அரசு ஆவணப்படுத்தி பாதுகாக்கவேண்டும் என வரலாற்று ஆர்வலர் கோருகின்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Rain Alert: நவ.29, 30-ல் சென்னைக்கு மிக கனமழை; சென்னை அருகே கடக்கும் புயல்- வானிலை அப்டேட் இதோ!
Chennai Rain Alert: நவ.29, 30-ல் சென்னைக்கு மிக கனமழை; சென்னை அருகே கடக்கும் புயல்- வானிலை அப்டேட் இதோ!
Dhanush Nayanthara: 'ராக்காயி' நயன்தாராவுக்கு எதிராக 'ராயன்' தனுஷ் வழக்கு! நீதிமன்றம் உத்தரவு என்ன?
Dhanush Nayanthara: 'ராக்காயி' நயன்தாராவுக்கு எதிராக 'ராயன்' தனுஷ் வழக்கு! நீதிமன்றம் உத்தரவு என்ன?
பள்ளிகளில் 234/77 ஆய்வு: உதயநிதி தொகுதியில் தொடங்கி முதல்வர் தொகுதியில் நிறைவுசெய்த அமைச்சர் அன்பில்
பள்ளிகளில் 234/77 ஆய்வு: உதயநிதி தொகுதியில் தொடங்கி முதல்வர் தொகுதியில் நிறைவுசெய்த அமைச்சர் அன்பில்
Adani Green Energy Refutes: லஞ்ச விவகாரம்..! எல்லாமே பொய் கிடையாது, ஆனா? அதானி நிறுவனம் புட்டு புட்டு வைத்த பதில்கள்
Adani Green Energy Refutes: லஞ்ச விவகாரம்..! எல்லாமே பொய் கிடையாது, ஆனா? அதானி நிறுவனம் புட்டு புட்டு வைத்த பதில்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”தெலுங்குல பேச முடியாது.. தமிழ்ல தான் பேசுவேன்”அல்லு அர்ஜுன் THUGLIFEபள்ளியில் சாதியா? PAINT-ஐ எடுத்த அன்பில்! அரசுப் பள்ளியில் அதிரடி”அரசியலில் உன் மகன் காலி!” பழி தீர்த்த DK சிவக்குமார்! கதறும் அமைச்சர் குமாரசாமி!அடிதடியில் இறங்கிய அதிமுகவினர்! செல்லூர் ராஜூ vs டாக்டர் சரவணன்! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Rain Alert: நவ.29, 30-ல் சென்னைக்கு மிக கனமழை; சென்னை அருகே கடக்கும் புயல்- வானிலை அப்டேட் இதோ!
Chennai Rain Alert: நவ.29, 30-ல் சென்னைக்கு மிக கனமழை; சென்னை அருகே கடக்கும் புயல்- வானிலை அப்டேட் இதோ!
Dhanush Nayanthara: 'ராக்காயி' நயன்தாராவுக்கு எதிராக 'ராயன்' தனுஷ் வழக்கு! நீதிமன்றம் உத்தரவு என்ன?
Dhanush Nayanthara: 'ராக்காயி' நயன்தாராவுக்கு எதிராக 'ராயன்' தனுஷ் வழக்கு! நீதிமன்றம் உத்தரவு என்ன?
பள்ளிகளில் 234/77 ஆய்வு: உதயநிதி தொகுதியில் தொடங்கி முதல்வர் தொகுதியில் நிறைவுசெய்த அமைச்சர் அன்பில்
பள்ளிகளில் 234/77 ஆய்வு: உதயநிதி தொகுதியில் தொடங்கி முதல்வர் தொகுதியில் நிறைவுசெய்த அமைச்சர் அன்பில்
Adani Green Energy Refutes: லஞ்ச விவகாரம்..! எல்லாமே பொய் கிடையாது, ஆனா? அதானி நிறுவனம் புட்டு புட்டு வைத்த பதில்கள்
Adani Green Energy Refutes: லஞ்ச விவகாரம்..! எல்லாமே பொய் கிடையாது, ஆனா? அதானி நிறுவனம் புட்டு புட்டு வைத்த பதில்கள்
"தத்துவம் இல்லாத தலைவர்" சீமானா? விஜய்யா? அடித்துக் கொள்ளும் அண்ணன்களும், தம்பிகளும்!
Exclusive : ”இன்னொரு கதை பண்ணுங்க சார்” ரஜினி சொன்ன அந்த இயக்குநர் யார் தெரியுமா..?
Exclusive : ”இன்னொரு கதை பண்ணுங்க சார்” ரஜினி சொன்ன அந்த இயக்குநர் யார் தெரியுமா..?
ADMK Generalbody Meeting: அதிமுகவில் அடி, தடியால் சர்ச்சை - அவசரமாக பொதுக்குழுவை கூட்டும் எடப்பாடி பழனிசாமி
ADMK Generalbody Meeting: அதிமுகவில் அடி, தடியால் சர்ச்சை - அவசரமாக பொதுக்குழுவை கூட்டும் எடப்பாடி பழனிசாமி
Fengal Cyclone LIVE: சென்னையில் நவ 29, 30ம் தேதி அதிகனமழைக்கு வாய்ப்பு - பிரதீப் ஜான்
Fengal Cyclone LIVE: சென்னையில் நவ 29, 30ம் தேதி அதிகனமழைக்கு வாய்ப்பு - பிரதீப் ஜான்
Embed widget