மேலும் அறிய

பள்ளி கட்டிட பழுது நீக்க பணிகளை நாளைக்குள் முடிக்க வேண்டும் - திருவண்ணாமலை கலெக்டர் உத்தரவு

வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால் பள்ளி கட்டிட பழுது நீக்க பணிகளை நாளைக்குள் முடிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் முருகேஷ் உத்தரவிட்டுள்ளார்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் ஊரக வளரச்சித்துறை சார்பில் நடைபெறும் பணிகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தலைமையில் நடைபெற்றது. அப்போது மாவட்ட ஆட்சியர் முருகேஷ் பேசியபோது; வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து, துறைவாரியாக நானே நேரில் சென்று ஆய்வு செய்தேன். கடந்த ஆண்டுகளில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் ஆய்வு செய்து, இந்தமுறை அதுபோன்ற பாதிப்புகள் நடைபெறாமல் தடுக்க வேண்டும். குறிப்பாக, சேதமடைந்துள்ள பள்ளி கட்டிடங்கள் குறித்து நேரடி ஆய்வு செய்து, அவற்றை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.

பள்ளி கட்டிட பழுது நீக்க பணிகளை நாளைக்குள் முடிக்க வேண்டும் - திருவண்ணாமலை கலெக்டர் உத்தரவு

திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிகள் உள்கட்டமைப்பு மேமபாட்டு திட்டத்தின் கீழ், 5.72 கோடி மதிப்பில் 402 பள்ளி கட்டிடங்கள், கழிவறைகள் மற்றும் சமையற் கூடங்கள் சீரமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. அதேபோல், ஊராட்சி பொது நிதியிலிருந்து 3.40 கோடி மதிப்பில் 190 பள்ளி கட்டிடங்கள் சீரமைக்கும் பணிகள் நடைப்பெற்று வருகிறது. கனிமவள திட்டத்தின் கீழ் 11.40 லட்சம் மதிப்பில் 3 பள்ளி கட்டிடங்கள் பழுது நீக்கம் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, மாவட்டம் முழுவதும் பல்வேறு நிதிகளின் மூலம் 9.24 கோடி மதிப்பீல் 595 பள்ளிக்கட்டிடங்கள் பழுது நீக்கம் மற்றும் சீரமைப்பு பணிகள் நடைப்பெற்று வருகிறது என்றும்,இந்த பணிகள் நடைபெறும் பள்ளி கட்டிடங்களை, இரண்டு நாட்களுக்குள் நேரடி ஆய்வு செய்து, அதன் முன்னேறறம் குறித்து அந்த அந்த துறை அதிகாரிகள் அறிக்கை அளிக்க வேண்டும். தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் அனைத்து பள்ளி கட்டிடங்கள், கழிவறைகள், சமையற் கூட பழுது நீக்க பணிகளை நாளைக்குள் (சனிக்கிழமை) முடிக்க வேண்டும்.

பள்ளி கட்டிட பழுது நீக்க பணிகளை நாளைக்குள் முடிக்க வேண்டும் - திருவண்ணாமலை கலெக்டர் உத்தரவு

மேலும் முடியாத நிலையில் உள்ள பள்ளிக் கட்டிடங்கள், இதர கட்டடங்களை உடனடியாக இடித்து அப்புறப்படுத்த வேண்டும்அதன் விபரங்களை, உடனுக்குடன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். அதேபோன்று, மாவட்டம் முழுவதும் உள்ள 123 ஏரிகள், குளங்கள் சீரமைக்கும் பணிகளில் இதுவரை 52 பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என இவ்வாறு மாவட்ட ஆட்சியர் பேசினார்.இந்த கூட்டத்தில், முதன்மைக் கல்வி அலுவலர் கணேஷ்மூர்த்தி, ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர்கள் சரண்யா, சுரேஷ்குமார் மற்றும் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள், வட்டார கல்வி அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!

Fengal Cyclone LIVE: இன்று மாலை 5.30 மணிக்கு உருவாகிறது ஃபெங்கல் புயல்

Group 4 Counselling: தேர்வர்களே…வந்தது அப்டேட்! குரூப் 4 கலந்தாய்வு எப்போது? டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

Chennai Rain Alert: நவ.29, 30-ல் சென்னைக்கு மிக கனமழை; சென்னை அருகே கடக்கும் புயல்- வானிலை அப்டேட் இதோ!

ABP Premium

வீடியோ

”தெலுங்குல பேச முடியாது.. தமிழ்ல தான் பேசுவேன்”அல்லு அர்ஜுன் THUGLIFEபள்ளியில் சாதியா? PAINT-ஐ எடுத்த அன்பில்! அரசுப் பள்ளியில் அதிரடி”அரசியலில் உன் மகன் காலி!” பழி தீர்த்த DK சிவக்குமார்! கதறும் அமைச்சர் குமாரசாமி!அடிதடியில் இறங்கிய அதிமுகவினர்! செல்லூர் ராஜூ vs டாக்டர் சரவணன்! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
Fengal Cyclone LIVE: இன்று மாலை 5.30 மணிக்கு உருவாகிறது ஃபெங்கல் புயல்
Fengal Cyclone LIVE: இன்று மாலை 5.30 மணிக்கு உருவாகிறது ஃபெங்கல் புயல்
Group 4 Counselling: தேர்வர்களே…வந்தது அப்டேட்! குரூப் 4 கலந்தாய்வு எப்போது? டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
Group 4 Counselling: தேர்வர்களே…வந்தது அப்டேட்! குரூப் 4 கலந்தாய்வு எப்போது? டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
Chennai Rain Alert: நவ.29, 30-ல் சென்னைக்கு மிக கனமழை; சென்னை அருகே கடக்கும் புயல்- வானிலை அப்டேட் இதோ!
Chennai Rain Alert: நவ.29, 30-ல் சென்னைக்கு மிக கனமழை; சென்னை அருகே கடக்கும் புயல்- வானிலை அப்டேட் இதோ!
Keerthy Suresh : 15 ஆண்டுகால காதல்...ஹாரி பாட்டர் ஸ்டைலில் திருமணத்தை அறிவித்த கீர்த்தி சுரேஷ்

Pink Auto: பெண்களுக்கு பிங்க் ஆட்டோ வாங்க மானியம்; கட்டுப்பாடு நீக்கம்- விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

Dhanush Nayanthara: 'ராக்காயி' நயன்தாராவுக்கு எதிராக 'ராயன்' தனுஷ் வழக்கு! நீதிமன்றம் உத்தரவு என்ன?

பள்ளிகளில் 234/77 ஆய்வு: உதயநிதி தொகுதியில் தொடங்கி முதல்வர் தொகுதியில் நிறைவுசெய்த அமைச்சர் அன்பில்

Embed widget