மேலும் அறிய

தமிழக வேளாண் அமைச்சர் என்.எல்.சி.க்காக விவசாயிகளை மிரட்டுகிறார் - அன்புமணி குற்றச்சாட்டு

தமிழகத்தில் நிலக்கரி சுரங்கம் அமைக்க அனுமதி அளிக்க மாட்டோம் என்று தமிழக முதலமைச்சர் நடைபெறுகின்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் சட்டம் இயற்ற வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கோரிக்கை வைத்தார்

திருவண்ணாமலை மாவட்டத்தை நிர்வாக வசதிக்காக இரண்டாக பிரிக்க வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தி பா.ம.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  இந்த கூட்டத்தில் பங்கேற்ற பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது, "இது ஒரு மாவட்டத்தின் பிரச்சினை அல்ல, தமிழகத்தின் பொதுவான பிரச்சனையாகும், தமிழ்நாட்டின் நிலப்பரப்பில் இரண்டாவது பெரிய மாவட்டம் திருவண்ணாமலை மாவட்டம் அதில் முதலாவது மாவட்டம் திண்டுக்கல் 6200 சதுர கிலோமீட்டர் கொண்டது, அதேபோல் திருவண்ணாமலை மாவட்டம் 6188 சதுர கிலோமீட்டர் பரப்பளவை கொண்டுள்ளது.

தமிழக வேளாண் அமைச்சர் என்.எல்.சி.க்காக விவசாயிகளை மிரட்டுகிறார் - அன்புமணி குற்றச்சாட்டு

8 சட்டமன்ற தொகுதிகள், 12 தாலுகாக்கள் உள்ளடக்கியது திருவண்ணாமலை மாவட்டம், திருவண்ணாமலை மாவட்டத்தில் மட்டும் 27 லட்சம் மக்கள் வாழ்ந்து வருகின்றனர், ஆனால் இன்றுவரை மாவட்டம் வளர்ச்சி பெறாமல் உள்ளது, நீண்ட காலமாக பெரிய மாவட்டங்களை பிரிக்க வேண்டுமென பா.ம.க. போராடி வருகிறது, பெரிய மாவட்டங்களை பிரித்தால் மட்டுமே மாவட்டம் வளர்ச்சி பெறும்.

திமுக ஆட்சிக்கு வந்தால் பெரிய மாவட்டங்களை பிரிப்போம் என வாக்குறுதி அளித்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை, 143 வது நாடாக திருவண்ணாமலை மாவட்டம் இருக்கும் அளவிற்கு மக்கள் தொகை அதிகளவில் உள்ளது.திருவண்ணாமலை மாவட்டம் போல் கடலூர் திருச்சி கோவை தூத்துக்குடி போன்ற பல பெரிய மாவடங்களை இரண்டாக பிரிக்க வேண்டும், தி.முக.வின் அமைச்சர்கள் குறு மன்னர்கள் போல் பெரிய மாவட்டங்களில் வாழ்ந்து வருகின்றனர், ஏழை மக்கள் குறித்து அவர்களுக்கு எந்த கவலையும் இல்லை, அமைச்சர்கள் அவர்களது சுயநலத்திற்காக பெரிய மாவட்டங்களை பிரிக்காமலும், பிரித்தால் பவர் போய்விடும் என அஞ்சி மாவட்டங்களை பிரிக்காமல் உள்ளனர், ஒரு தொழிற்சாலைகள் கூட இல்லாத மிக மிக பின்தங்கிய மாவட்டம் திருவண்ணாமலை மாவட்டம்.

தமிழக வேளாண் அமைச்சர் என்.எல்.சி.க்காக விவசாயிகளை மிரட்டுகிறார் - அன்புமணி குற்றச்சாட்டு

இரயில்வே திட்டம் வேண்டும் என பல முறை போராடியுள்ளோம், அடையாளத்திற்காக அரசியல் செய்வது பாட்டாளி மக்கள் கட்சி அல்ல வெற்றிக்காக இறுதி வரை போராடுவோம், தஞ்சாவூர் மாவட்டத்தில் நிலம் எடுக்க போகிறார்கள் என அறிக்கை விடுத்தவுடன் அண்ணாமலை மத்திய அமைச்சரிடம் கடிதம் கொடுத்துள்ளார், அதற்கு மத்திய நிலக்கரி அமைச்சர் ஏல பட்டியலில் இருந்து எடுத்து விடுகிறோம் என ட்வீட் செய்கிறார், நிலக்கரி சுரங்கம் வராது என மத்திய அமைச்சர் கூறவில்லை. அதற்கு மாறாக ஏல பட்டியலில் இருந்து விளக்கி விடுகிறோம் என்று மட்டுமே ட்வீட் செய்துள்ளார், அதற்குள் எங்களுக்கு கிடைத்த வெற்றி எங்கள் முதல்வருக்கு கிடைத்த வெற்றி என பேசி வருகின்றனர், தஞ்சாவூர் திருவாரூர் மாவட்டம் மட்டுமே டெல்டா என நினைத்து கொண்டிருக்கிறார் முதல்வர்.

தமிழக வேளாண் அமைச்சர் என்.எல்.சி.க்காக விவசாயிகளை மிரட்டுகிறார் - அன்புமணி குற்றச்சாட்டு

2 நாட்களுக்கு முன்பு தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளேன், அதில் தமிழகத்தில் 6 நிலக்கரி சுரங்கத்தை அனுமதிக்க மாட்டோம் என சட்டமன்றத்தில் அறிவிக்க வேண்டும், என் எல் சி 1A & 2 ஆகியவற்றிற்காக நிலம் கையகப்படுத்துதல் நிறுத்தம் மற்றும் 66 ஆண்டு காலமாக என்எல்சி நிறுவனத்தினால் சுற்றுச்சூழல் பாதிப்பு நீர் பாதிப்பு போன்ற என்னென்ன பாதிப்பு உள்ளது என சென்னை ஐஐடி குழுவின் மூலம் மூன்று மாதத்தில் ஆய்வு அறிக்கை அரசருக்கு அளித்து பின்னர் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட மூன்று கோரிக்கைகளை வலியுறுத்தி முதல்வருக்கு கடிதம் எழுதி உள்ளேன். தமிழக வேளாண் அமைச்சர் என்.எல்.சி.க்கு நிலம் கொடுக்க வேண்டும் என்று விவசாயிகளை மிரட்டுகிறார்.

இவை அனைத்திற்கும் தீர்வு வராவிட்டால் பாட்டாளி மக்கள் கட்சியின் போராட்டம் ஒரு நாளில் முடியாது.  அடுத்தடுத்த போராட்டம் நடைபெறும், பெரிய மாவட்டங்கள் அனைத்தையும் நிர்வாக வசதிக்காக இரண்டாக பிரிப்போம் என வருகின்ற சட்டமன்ற கூட்டு தொடரிலேயே முதல்வர் அறிவிக்க வேண்டுமென அன்போடும் பாசத்தோடும் கேட்டுக்கொள்கிறோம், 10.5 இட ஒதுக்கீடு குறித்து 4 முறை முதல்வரை சந்தித்துள்ளேன் அதேப்போல் 6 முறை மருத்துவர் அய்யா தொலைபேசியின் மூலம் பேசியுள்ளார் ஆனால் ஓராண்டாகியும் எந்த அறிவிப்பும் வரவில்லை. "

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Airtel Recharge: போச்சா..! ஜியோவை தொடர்ந்து ஏர்டெல் அதிரடி - ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தி அறிவிப்பு
Airtel Recharge: போச்சா..! ஜியோவை தொடர்ந்து ஏர்டெல் அதிரடி - ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தி அறிவிப்பு
TVK Vijay: மாணவர்களுக்கு அசத்தலான “மதிய விருந்து” தரப்போகும் விஜய்.. என்னென்ன ஸ்பெஷல் தெரியுமா?
மாணவர்களுக்கு அசத்தலான “மதிய விருந்து” தரப்போகும் விஜய்.. என்னென்ன ஸ்பெஷல் தெரியுமா?
Breaking News LIVE: ரீசார்ஜ் விலையில் மாற்றம்.. ஏர்டெல்லின் அறிவிப்பு
Breaking News LIVE: ரீசார்ஜ் விலையில் மாற்றம்.. ஏர்டெல்லின் அறிவிப்பு
Karnataka Accident: கோயிலுக்கு சென்று திரும்பியபோது விபத்து.. ஒரே கிராமத்தைச் சேர்ந்த 13 பேர் உயிரிழப்பு
கோயிலுக்கு சென்று திரும்பியபோது விபத்து.. ஒரே கிராமத்தைச் சேர்ந்த 13 பேர் உயிரிழப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Airtel Recharge: போச்சா..! ஜியோவை தொடர்ந்து ஏர்டெல் அதிரடி - ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தி அறிவிப்பு
Airtel Recharge: போச்சா..! ஜியோவை தொடர்ந்து ஏர்டெல் அதிரடி - ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தி அறிவிப்பு
TVK Vijay: மாணவர்களுக்கு அசத்தலான “மதிய விருந்து” தரப்போகும் விஜய்.. என்னென்ன ஸ்பெஷல் தெரியுமா?
மாணவர்களுக்கு அசத்தலான “மதிய விருந்து” தரப்போகும் விஜய்.. என்னென்ன ஸ்பெஷல் தெரியுமா?
Breaking News LIVE: ரீசார்ஜ் விலையில் மாற்றம்.. ஏர்டெல்லின் அறிவிப்பு
Breaking News LIVE: ரீசார்ஜ் விலையில் மாற்றம்.. ஏர்டெல்லின் அறிவிப்பு
Karnataka Accident: கோயிலுக்கு சென்று திரும்பியபோது விபத்து.. ஒரே கிராமத்தைச் சேர்ந்த 13 பேர் உயிரிழப்பு
கோயிலுக்கு சென்று திரும்பியபோது விபத்து.. ஒரே கிராமத்தைச் சேர்ந்த 13 பேர் உயிரிழப்பு
Elephant: கூடலூரில் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட யானைக்குட்டி - தத்தளித்த வீடியோ
Elephant: கூடலூரில் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட யானைக்குட்டி - தத்தளித்த வீடியோ
Latest Gold Silver Rate: தங்கம் விலை உயர்வு; எவ்வளவுன்னு தெரிஞ்சிக்கோங்க!இதோ நிலவரம்!
Latest Gold Silver Rate: தங்கம் விலை உயர்வு; எவ்வளவுன்னு தெரிஞ்சிக்கோங்க!இதோ நிலவரம்!
Virat Kohli: கலங்காதே ராசா..! உடைந்துபோன கோலி, தேற்றிவிட்ட ராகுல் டிராவிட் - வைரல் வீடியோ
Virat Kohli: கலங்காதே ராசா..! உடைந்துபோன கோலி, தேற்றிவிட்ட ராகுல் டிராவிட் - வைரல் வீடியோ
Vijay Meet Students: கட்சி தலைவராக முதல்முறையாக மாணவர்களை சந்திக்கும் விஜய்.. பேசப்போகும் அரசியல் என்ன?
கட்சி தலைவராக முதல்முறையாக மாணவர்களை சந்திக்கும் விஜய்.. பேசப்போகும் அரசியல் என்ன?
Embed widget