மேலும் அறிய

வேலூரில் இருந்து விமானங்கள் பறப்பது எப்போது? வேலூர் விமானநிலையத்தின் ஸ்டேட்டஸ் என்ன?

விமானங்கள் லேண்டிங் மட்டும் டேக் ஆப் , செய்ய , பாதுகாப்பு காரணங்கள் கருதி மேலும் 10 .72 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது.

தமிழ்நாட்டில் தற்சமயம் சென்னை , கோவை , மதுரை , திருச்சி , சேலம் , தூத்துக்குடி உள்ளிட்ட  6 விமான நிலையங்கள் பயன்பாட்டில் உள்ள நிலையில் , இந்திய அரசு வேலூர் , நெய்வேலி , ராமநாதபுரம் மற்றும் தஞ்சாவூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் மத்திய  அரசின் உதான்  - பிராந்திய இணைப்பு திட்டம் (Regional Connectivity Scheme ) மூலம் புதிய  விமான நிலையங்கள்  அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

வேலூரில் இருந்து விமானங்கள் பறப்பது எப்போது? வேலூர் விமானநிலையத்தின் ஸ்டேட்டஸ் என்ன?

இதில்  வேலூர் மாவட்டத்தில் சிவில் கட்டுமான பணிகள் 95 சதவீதம் நிறைவு பெற்றுள்ள நிலையில் , விமான சேவையை தொடங்க மேற்கொண்டு 10 . 72 ஏக்கர் நிலம் தேவைப்படுவதாக இந்திய வானுர்தி நிலையங்கள் ஆணைக்குழு (Airport Authority Of  India ) தெரிவித்துள்ளது. வேலூர் மாவட்ட விமான நிலையத்தின் தற்பொழுதுய நிலை குறித்து தெரிந்துகொள்வோம்

விமான நிலைய வரலாறு :

வேலூரில் இருந்து விமானங்கள் பறப்பது எப்போது? வேலூர் விமானநிலையத்தின் ஸ்டேட்டஸ் என்ன?

வேலூரில் இருந்து பெங்களூரு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், சரியாக 5 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது , அப்துல்லாபுரம் - ஆசனாம்பட்டு சாலை, இங்கு  ஆங்கிலேயர் காலத்தில் இருந்து , 51 ஏக்கர் பரப்பளவில் விமான ஓடுதளம்(Airstrip) இருந்து வருகிறது. ஆங்கிலேயர் ஆட்சி முடிவுக்கு பிறகு சிறிது காலம் பயன்பாட்டில் இல்லாமல் இருந்த இந்த வானூர்தித் தடம் , 2006-ஆம் ஆண்டு ஜூலை மாதம் , 'மதராசு பிளையிங் கிளப்பின்' பயிற்சி விமானிகளுக்காக மீண்டும் பயன்பாட்டிற்கு வந்தது . அடுத்த 5 ஆண்டுகள் மதராசு பிளையிங் கிளப் கட்டுப்பாட்டில் இருந்த இந்த வானூர்தி தடம், 2011-ஆம் ஆண்டில் பயன்பாடு ஏதும் இல்லாமல் மீண்டும் கைவிடப்பட்டது .

வேலூரில் இருந்து விமானங்கள் பறப்பது எப்போது? வேலூர் விமானநிலையத்தின் ஸ்டேட்டஸ் என்ன?

இந்த நிலையில்தான் கடந்த 2017-ஆம் ஆண்டு , இந்தியா ஒன்றிய அரசின் உதான் (UDAN) - பிராந்திய இணைப்பு  (RCS) திட்டத்தின் கீழ் அப்துல்லாபுரத்தில் இருக்கும் வானூர்தி தடத்தை , 20 பயணிகள் வரை அமர்ந்து பயணம் செய்யக்கூடிய சிறிய வகை விமானங்களுக்கான, விமான நிலையமாக விரிவாக்கம் செய்யும் திட்டம் அறிவிக்கப்பட்டது . இந்த விமான நிலைய விரிவாக்க பணிகளுக்காக ,  பிராந்திய இணைப்பு திட்டத்தின் கீழ் 60 கோடி ருபாய் நிதி ஒதுக்கப்பட்டு , வேலைகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றது. இது தொடர்பாக , இந்திய வானுர்தி நிலையங்கள் ஆணைக்குழு, அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், ஆங்கிலேயர் காலத்தில் 700 மீட்டர் நீளமுள்ள ஓடுதளப்பாதை தற்பொழுது சிறிய பயணிகள் விமான சேவைக்காக , 850 மீட்டர் ஓடுதளப்பாதையாக  விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது . 
 வேலூரில் இருந்து விமானங்கள் பறப்பது எப்போது? வேலூர் விமானநிலையத்தின் ஸ்டேட்டஸ் என்ன?

மேலும் விமான முனையம் (airport terminal )  , தகவல் கட்டுப்பாட்டு மையம் (Information Control Center), ரேடார் கருவி அமைக்கும் இடம், சரக்கு முனையம் (Freight terminal ) , விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு கோபுரம் (airtraffic control tower ) உள்ளிட்டவை அமைப்பதற்கான சிவில் கட்டுமான பணிகள் 95 சதவீதம் முடிக்கப்பட்டு இருக்கிறது. முன்னதாக ,  விமான நிலைய  டெர்மினல் கட்டிடம் மற்றும் விமான ஓடுதளப்பாதைக்கு இடையில் நெடுஞ்சாலைத்துறைக்குச் சொந்தமான மக்கள் உபயோகப்படுத்தக்கூடிய சாலை இருந்தது . இதில் அரை 775 மீட்டர் சாலையைக் ஓடுதளத்திற்காக கையகப்படுத்துவதில் ஊர்மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர் , எனினும் , மாவட்ட நிர்வாகத்தின் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு , இதற்கு சுமூக தீர்வு காணப்பட்டுள்ளது , என்று தெரிவித்தார் .

வேலூரில் இருந்து விமானங்கள் பறப்பது எப்போது? வேலூர் விமானநிலையத்தின் ஸ்டேட்டஸ் என்ன?

இது தொடர்பாக பொதுமக்களை தொடர்புகொண்டபொழுது .

இந்த விமான நிலையம் , அணைக்கட்டு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் வருகிறது. தார் சாலையை கையகப்படுத்தினால் , அப்துல்லாபுரத்தில் இருந்து ஒடுக்கத்தூர் ஊசூர் , பொய்கைபுத்தூர் , நாட்டார்மங்கலம் உள்ளிட்ட கிராமங்களுக்கு செல்வதில் சிரமம் ஏற்படும் என்று ஆரம்பத்தில் எதிர்ப்பு தெரிவித்தோம் , ஆனால் விமான நிலையம் வந்தால் எங்கள் கிராம பகுதிகளும் வளர்ச்சியடையும் என்பதால் , போராட்டத்தை கைவிட்டுவிட்டோம் , எனினும் விமான நிலையம் அமைவதில் , எங்களுக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் சில இழுபறிகள் இருந்து கொண்டுதான் உள்ளது என்று தெரிவித்தனர் .

வேலூரில் இருந்து விமானங்கள் பறப்பது எப்போது? வேலூர் விமானநிலையத்தின் ஸ்டேட்டஸ் என்ன?

நிலுவையில் உள்ள பிரச்சனைகள் .

அப்துல்லாபுரத்தில் விமானநிலையம் அமைப்பதில் தொடர்ந்து பொதுமக்களுக்கும் , மாவட்ட நிர்வாகத்துக்கும் இழுபறி நிலவி வருகிறது .

இதுதொடர்பாக வேலூர்  மாவட்ட வருவாய் அதிகாரி ராமமூர்த்தி தெரிவிக்கையில் ஆங்கிலேயர் காலத்தில் 51 ஏக்கர் விமான ஓடுதளமாக இருந்த  இடத்தை தற்பொழுது , 47 ஏக்கர் வரை பொதுமக்களின்  நிலங்களை கையகப்படுத்தி  98 ஏக்கர் பரப்பளவில் விமான நிலையத்தை விரிவாக்கம் செய்துள்ளோம் , மேலும் விமானங்கள் டேக் ஆப் , லேண்டிங் செய்வதற்கு , 25 அடி உயரத்திற்கு மேல் உயரமுள்ள  கட்டிடங்கள் , மரங்கள் , மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் இடையூறாக இருக்கும் என்பதால் , மேற்கொண்டு 10 .72 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி தருமாறு இந்திய வானுர்தி நிலையங்கள் ஆணைக்குழு கோரிக்கை வைத்துள்ளனர் , இது தொடர்பான பேச்சுவார்த்தை தீவிரமாக நடந்துகொண்டு இருப்பதாக தெரிவித்தார் .

வேலூரில் இருந்து விமானங்கள் பறப்பது எப்போது? வேலூர் விமானநிலையத்தின் ஸ்டேட்டஸ் என்ன?

மேலும் அவர் கூறுகையில்  , முன்னதாக தார்சாலை கையகப்படுத்துவதுற்கு எதிர்ப்பு தெரிவித்த கிராமமக்கள் அதனை தொடர்ந்து , தரைவழியாக மின்கம்பிகள் இணைப்பு பணிகளுக்கும் எதிர்ப்பு தெரிவித்தனர். தங்கள் நிலத்தில் தரைவழி மின்கம்பி புதைப்பதற்கு , பள்ளம் தோண்ட அனுமதிக்க முடியாது என்று எதிர்ப்பு தெரிவித்த மக்களிடம்  பேச்சுவார்த்தை நடத்தி மின்கம்பிகள் புதைப்பதற்கு சம்மதம் பெற்றுள்ளோம். எனினும் தற்பொழுது  விமான நிலையத்தை ஒட்டி அமைந்திருக்கும் இடுகாட்டையும் , விமான நிலைய சுற்று சுவர்களை ஒட்டி அமைந்துள்ள குடிநீர் பைப்லைன் இணைப்புகளையும் மாற்றி அமைப்பதற்கு பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுவருவதாக தெரிவித்தார் .

வேலூரில் இருந்து விமானங்கள் பறப்பது எப்போது? வேலூர் விமானநிலையத்தின் ஸ்டேட்டஸ் என்ன?

இதுதொடர்பாக  இன்று ABP நாடு செய்திக்குழுமத்திடம் பேசிய வேலூர் விமான நிலைய பொறுப்பு அதிகாரி துரை மேகநாதன்,  ”ஏறக்குறைய 95 சதவீத கட்டுமான பணிகள் நிறைவுபெற்று விட்டது , விமானங்கள் லேண்டிங் மட்டும் டேக் ஆப் , செய்ய , பாதுகாப்பு காரணங்கள் கருதி மேலும் 10 .72 ஏக்கர் நிலம் தேவைப்படுகின்றது. பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்கும்பட்சத்தில், அனைத்து பேரா மீட்டர்களையும் பூர்த்திசெய்து  வெகுவிரைவில் வேலூரில் விமான சேவை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்  . விமானநிலைய பணிகள் முழுவதும் நிறைவு பெற்றபின் முதற்கட்டமாக வேலூரில் இருந்து, சென்னை மற்றும் பெங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்கு விமானசேவை இயக்கப்படும் என்று தெரிவித்தார் .  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL Auction 2025 LIVE: 6 பந்துகளில் 6 சிக்ஸர் விளாசிய ப்ரியான்ஷ் ஆர்யாவை ஏலத்தில் எடுத்தது பஞ்சாப்
IPL Auction 2025 LIVE: 6 பந்துகளில் 6 சிக்ஸர் விளாசிய ப்ரியான்ஷ் ஆர்யாவை ஏலத்தில் எடுத்தது பஞ்சாப்
Rishabh Pant: ரோகித் கேப்டன்சி பிடிக்கவில்லையா? ரிஷப் பண்ட் மறைமுக தாக்கு! அடுத்த கேப்டன் பும்ராவா?
Rishabh Pant: ரோகித் கேப்டன்சி பிடிக்கவில்லையா? ரிஷப் பண்ட் மறைமுக தாக்கு! அடுத்த கேப்டன் பும்ராவா?
School Leave: நாளை ரெட் அலர்ட்.! ஒரு மாவட்டத்திற்கு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
School Leave: நாளை ரெட் அலர்ட்.! ஒரு மாவட்டத்திற்கு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
IND vs AUS Test: வம்பிழுத்த ஆஸிஸ்.. இந்திய அணியின் தரமான பதிலடி போட்டிகள்
IND vs AUS Test: வம்பிழுத்த ஆஸிஸ்.. இந்திய அணியின் தரமான பதிலடி போட்டிகள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”அரசியலில் உன் மகன் காலி!” பழி தீர்த்த DK சிவக்குமார்! கதறும் அமைச்சர் குமாரசாமி!அடிதடியில் இறங்கிய அதிமுகவினர்! செல்லூர் ராஜூ vs டாக்டர் சரவணன்! நடந்தது என்ன?Kongu Eswaran on Aadhav Arjuna : ’’ஜாக்கிரதை திருமா!ஆதவ்-ஆல் விசிக உடையும்’’எச்சரிக்கும்  ஈஸ்வரன்Ravichandran Ashwin on CSK : ’’வாழ்க்கை ஒரு வட்டம் மீண்டும் மஞ்சள் ஜெர்சி!’’உணர்ச்சிவசப்பட்ட அஸ்வின்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL Auction 2025 LIVE: 6 பந்துகளில் 6 சிக்ஸர் விளாசிய ப்ரியான்ஷ் ஆர்யாவை ஏலத்தில் எடுத்தது பஞ்சாப்
IPL Auction 2025 LIVE: 6 பந்துகளில் 6 சிக்ஸர் விளாசிய ப்ரியான்ஷ் ஆர்யாவை ஏலத்தில் எடுத்தது பஞ்சாப்
Rishabh Pant: ரோகித் கேப்டன்சி பிடிக்கவில்லையா? ரிஷப் பண்ட் மறைமுக தாக்கு! அடுத்த கேப்டன் பும்ராவா?
Rishabh Pant: ரோகித் கேப்டன்சி பிடிக்கவில்லையா? ரிஷப் பண்ட் மறைமுக தாக்கு! அடுத்த கேப்டன் பும்ராவா?
School Leave: நாளை ரெட் அலர்ட்.! ஒரு மாவட்டத்திற்கு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
School Leave: நாளை ரெட் அலர்ட்.! ஒரு மாவட்டத்திற்கு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
IND vs AUS Test: வம்பிழுத்த ஆஸிஸ்.. இந்திய அணியின் தரமான பதிலடி போட்டிகள்
IND vs AUS Test: வம்பிழுத்த ஆஸிஸ்.. இந்திய அணியின் தரமான பதிலடி போட்டிகள்
IPL 2025 Unsold Players:
IPL 2025 Unsold Players: "வார்னர் டூ பார்ஸ்டோ" அடிமாட்டு விலைக்கு கூட போகாத அதிரடி மன்னர்கள்!
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் - அன்புமணி ஆவேசம்
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் - அன்புமணி ஆவேசம்
WTC Points Table: இந்தியா எப்போதுமே கெத்து! டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் சரிந்த ஆஸ்திரேலியா!
WTC Points Table: இந்தியா எப்போதுமே கெத்து! டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் சரிந்த ஆஸ்திரேலியா!
”அய்யோ என்னடா பண்ணி வச்சுருக்க?” செல்ல நாய்க்காக கதறிய குடும்பம்..!
”அய்யோ என்னடா பண்ணி வச்சுருக்க?” செல்ல நாய்க்காக கதறிய குடும்பம்..!
Embed widget